Tuesday, August 10, 2010

ஜப்பான் புத்தர் கோவிலில் ஊதுபத்தி

கிமிதேரா(紀三井寺) வக்காயமாவில் உள்ள புத்தர் கோவலின் பெயர். மூன்று குளங்களை கொன்ட கோவில் என்று பொருள். (紀  வக்காயமா,  三 ‍ ‍மூன்று, 井 கிணறு,  寺 புத்தர் கோவில்)


என் ஜப்பானிய நண்பர் குடும்பத்துடன் இக்கோவிலிக்கு செல்வதாகவும், நேரமிருப்பின் என்னையும் அழைத்து செல்ல விரும்புவதாகும் கூறியிருந்தார். நேரம் ஒத்துழைத்ததில் நானும் சென்றிருந்தேன். நண்பரின் பத்து வயதான அவரின் மகளையும், மணைவியையும் அழைத்து வந்திருந்தார்.

நம்ம ஊர் தேர் திருவிழாவின் போது இருக்கும் கடைகள் போல வீதியின் இரு பக்கங்களிலும் கடைகள். இன்று மட்டுமே இந்த கடைகள் விழாக்காக இருக்கிறது என்ற போது நம்ம ஊர தேர் திருவிழாதான் நினைவிற்கு வந்தது.

கோவிலுக்குள் நுழைந்தோம், மிகப் பெரிய புத்தர் சிலை பிரமிக்க வைத்தது. இரண்டு மாடி உயரம், இரண்டாவது மாடிக்கு சென்றால் புத்தரின் முகத்தை மிக அருகில் பார்க்க முடிகிறது. புத்தரின் கைகளில் கயிரின் ஒரு முனை கட்டப்பட்டு, மறுமுனை பக்கதர்கள் தொட்டு பிரார்த்தனை செய்கிறார்கள். அந்த கயிற்றை தொட்டு பிரார்த்தனை செய்வதன் மூலம் பிரார்த்தனை நேரடியாக புத்தரின் கைகளை சென்றடைகிறது என்பது நம்பிக்கை.

ஜப்பானிகள் பழக்கவழக்கங்கள் சில நம்மோடு ஒத்து போனதில் ஆச்சர்யப்பட்டேன்.

நம்மூர் போலவே, உண்டியலில் காசு போட்டுவிட்டு சாமி கும்பிடிகிறார்கள்,மணியடிக்கிறார்கள். என்னை ஆச்சர்யப்படுத்திய இன்னொரு விஷ்யம் நம்மூர் போலவே ஊதுபத்தி கொளுத்துயிருந்தார்கள். அந்த நறுமணமும், மணி சத்தமும், கண் மூடி பிராத்தனை செய்த ஒரு நிமிடம் நம்மூர் கோவிலில் இருப்பது போல் தோன்றியது. ஒரு விதமான சிலிர்ப்புடன் வீடு திரும்பினேன்.

அன்புடன் நவநீதன்
http://navanithan.tk

No comments:

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP