இரண்டு வருஷத்துக்கு மேல QAல குப்ப கொட்டிட்டேன், டெவலப்மென்ட் மூவ் ஆகலான்னு இருக்கேன். தென், என்ன ஃபுயூச்சர் பிளான்? அப்ரைஸலில் மேனேஜர் கடைசியாக கேட்ட கேள்விக்கு பதிலாக சொன்னேன்.
லைட்டாக மேனேஜர் சிரித்தார். கண்டீப்பாக அதற்கு ஓராயிரம் அர்த்தம் இல்லையென்றாலும் கீழ்கண்ட சில அர்த்தங்களாவது இருக்கக் கூடும்.
1. டெவலப்மென்ட பத்தி உனக்கு என்ன தெரியும்?
2. excel தவிர வேற ஏதாவது டூல், அப்ளிகேசன் பத்தி தெரியுமா? excelல நம்பர அடிச்சிட்டு கால்குலேட்டர்ல டோட்டல் போட்டவந்தானா நீ?
3. Java, Javaனு எல்லாரும் சொல்லறாங்களே, அது sponcer, city centerல விக்கிற costly item ஆன்னு கேட்டவன்தானா நீ?
4. வாழ்க்கையில் test case கூட எழுதாம execute மட்டுமே பன்னுன சோம்பேறி பயதானா நீ?
5. .Net, Java அப்படிங்கறது ப்ளட் கேன்சர் மாதிரி குணப்படுத்த முடியாத ஒரு வியாதியான்னு பொலம்பினத மறந்துட்டயா?
பொறுமையாக கேட்டார். ஏதாவது டிரைனிங் போயிருக்கியா? நீயே படிச்சிகிட்டு இருக்கியா? ஏதாவது வொர்க் பன்னியிருக்கியா? என்ன தைரியத்துல கேக்குற? எப்படி மேனேஜ் பன்ன போற?
சில வினாடிகள் கனத்த மவுனத்தை நான் கலைத்தேன். இவ்ளோ நாளா google லயும் yahooலயும் திருடினோம். இப்போ bingலயும் செர்த்து திருடனும், அவ்ளோதான் வித்தியாசம் என்றேன்.
Java architect கூட இன்னுமும் comple reference book ரெஃப்பர் பன்ற இந்த காலத்துல bing லெவல்ல பேச தெரிஞ்ச நீ நிச்சியம் டெவலப்மென் உலகத்துக்கு தேவை. எல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ போ என்றார். கிளம்பும் போது ஒன்றே ஒன்று சொன்னார்.
எதுக்கும் bing ஓட சேர்த்து naukri, monster எல்லாத்தையும் பார் என்றது எதற்கு என அப்போது புரியவில்லை.