Showing posts with label டெவலப்மென்ட். Show all posts
Showing posts with label டெவலப்மென்ட். Show all posts

Wednesday, November 4, 2009

அடுத்த ஆன்சைட் உனக்குதான்

அடுத்த ஆன்சைட் உனக்குதான்


இந்த ஸ்டேட்டஸ் மீட்டிங்க எவன் கண்டுபிடிச்சானோ அவனை கண்டம் துண்டமா நூறு துண்டாக்கி, அதை மறுபடியும் ஆயிரம் துண்டாக்கினாகூட என் சோகம் கொறையாது. என்ன மாதிரியே பாதிக்கப்பட்டவங்களுக்கு இலவசவீடு, நிலம்னு ஏதாவது கிடைக்குதான்னு பாத்தா அதுவும் இல்ல. அட இரயில் ரிசர்வேஷன்ல ஒரு அஞ்சு பர்சென்ட் தள்ளுபடி குடுத்தாக் கொஞ்சம் சோகம் குறையுமேன்னு பார்த்தா, நமக்கு எப்பவுமே வெயிட்டிங் லிஸ்ட் கன்ஃப்ர்மே ஆகறதில்லை.

என்னடா, இந்த பிரச்சனை நமக்கு மட்டும்தானா? இல்லை, ஊர் உலகத்துல இருக்கற எல்லா டெவலப்பருக்குமே இருக்குதான்னு விசாரிச்சப்ப தெரிஞ்சுது, இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு. இங்க நான் பிரச்சனைன்னு சொல்லறத மேனஜர்னு யாராவது சொன்னாங்கன்னா, அதோடா உண்மைத்தன்மைக்கு நான் பொறுப்பில்லை.

ஸ்டேட்ட‌ஸ் மீட்டிங்கெல்லாம் ஒரு மேட்ட‌ரான்னு கேக்கறவன் ஒன்னு ஒழுங்கா கோடடிக்க தெரிஞ்சவனா இருப்பான். இல்ல, ஜால்ரா அடிக்க தெரிஞ்சவனா இருப்பான், எதுவும் இல்லைன்னா பிராஜெக்ட் லீடா இருக்கும். நமக்குதான் கோடடிக்க தெரியலயே ஜால்ரா அடிக்க கத்துக்கலாம்னு பாத்தா, அது ஜாவாவ விட கஷ்டமா இருக்கு.

மேனேஜர் லைட்டா ஆரம்பிப்பாரு , அப்பறம், சொல்லுப்பா எப்படி போயிட்டு இருக்குன்னு ஆரம்பிக்கிற மீட்டிங், அப்ரைசைல‌ மட்டும் அவுட்ஸ்டேன்டிங் ரேட்டிங் கேக்குற, புரமோஷன் கேக்குற, ஆனா ஒரு பக் ஃபிக்ஸ் பன்றதுக்கு மூணு நாள் எடுத்துக்கறன்னு மீட்டிங்கோட சேர்த்து நம்ம மானமும் போக ஆரம்பிக்கும். எம் ஓ எம்(MOM)ல நம்ம மான, மரியாதைய வாங்கறத டைனமிக்கா சேர்த்திருவாங்க. இந்த லட்சணத்துல ஆன்சைட் வேற கேக்கறானுங்கன்னு பொதுவா பேசுனாலும் நம்மலதான் சொல்லராருன்னு நமக்கு தெரியுதோ இல்லையோ மத்தவன் எல்லாருக்கும் தெரியும்.

இவ்ளோ பிரச்சனை வெச்சிகிட்டு ஏன்டா அவருகிட்ட குப்ப கொட்டிக்கிட்டு இருக்க,அதான் டெப்லாய்மென்ட் அலவென்ச கூட குறைச்சிட்டானுங்களே பேசாம பிராஜெக்ட் ரிலீஸ் கேக்க வேண்டியதுதான்டா என்றான் சக பங்காளி.

இல்ல‌டா ம‌ச்சான் ஆன் சைட் அனுப்ப‌ரேன்னு சொன்னாருடா என்றேன்
எப்போ?
அடுத்த மாடியூலுக்கு்.
அட‌ப்பாவி இதுதான்டா கடைசி மாடியூல், இதோட பிராஜெக்ட் முடியபோகுதுடா!.


அவன் சொல்வ‌தெல்லாம் என் காதில் விழ‌வில்லை. அப்போது நான் பிளைட்டில் போய் கொண்டிருந்தேன் ஆன்சைட்டிற்கு....... க‌ன‌வில்.

அன்புடன் நவநீதன்

Monday, October 26, 2009

மேனேஜர் நல்லவரா? கெட்டவரா?



இரண்டு வருஷத்துக்கு மேல QAல குப்ப கொட்டிட்டேன், டெவலப்மென்ட் மூவ் ஆகலான்னு இருக்கேன். தென், என்ன ஃபுயூச்சர் பிளான்? அப்ரைஸலில் மேனேஜர் கடைசியாக கேட்ட கேள்விக்கு பதிலாக சொன்னேன்.
லைட்டாக மேனேஜர் சிரித்தார். கண்டீப்பாக அதற்கு ஓராயிரம் அர்த்தம் இல்லையென்றாலும் கீழ்கண்ட சில அர்த்தங்களாவது இருக்கக் கூடும்.
1. டெவலப்மென்ட பத்தி உனக்கு என்ன தெரியும்?

2. excel தவிர வேற ஏதாவது டூல், அப்ளிகேசன் பத்தி தெரியுமா? excelல நம்பர அடிச்சிட்டு கால்குலேட்டர்ல டோட்டல் போட்டவந்தானா நீ?

3. Java, Javaனு எல்லாரும் சொல்லறாங்களே, அது sponcer, city centerல விக்கிற costly item ஆன்னு கேட்டவன்தானா நீ?

4. வாழ்க்கையில் test case கூட எழுதாம execute மட்டுமே பன்னுன சோம்பேறி பயதானா நீ?

5. .Net, Java அப்படிங்கறது ப்ளட் கேன்சர் மாதிரி குணப்படுத்த முடியாத ஒரு வியாதியான்னு பொலம்பினத மறந்துட்டயா?
பொறுமையாக கேட்டார். ஏதாவது டிரைனிங் போயிருக்கியா? நீயே படிச்சிகிட்டு இருக்கியா? ஏதாவது வொர்க் பன்னியிருக்கியா? என்ன தைரியத்துல கேக்குற? எப்படி மேனேஜ் பன்ன போற?
சில வினாடிகள் கனத்த மவுனத்தை நான் கலைத்தேன். இவ்ளோ நாளா google லயும் yahooலயும் திருடினோம். இப்போ bingலயும் செர்த்து திருட‌னும், அவ்ளோதான் வித்தியாசம் என்றேன்.

Java architect கூட‌ இன்னுமும் comple reference book ரெஃப்ப‌ர் ப‌ன்ற‌ இந்த‌ கால‌த்துல‌ bing லெவ‌ல்ல‌ பேச‌ தெரிஞ்ச‌ நீ நிச்சிய‌ம் டெவ‌ல‌ப்மென் உல‌க‌த்துக்கு தேவை. எல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ போ என்றார். கிளம்பும் போது ஒன்றே ஒன்று சொன்னார்.


எதுக்கும் bing ஓட சேர்த்து naukri, monster எல்லாத்தையும் பார் என்றது எதற்கு என அப்போது புரியவில்லை.

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP