Saturday, August 14, 2010
காற்றுள்ள போதே தூற்றிவிட்டேன்.
தெரியவில்லை,
இப்போது,
பணத்திற்கு என்ன செய்வதென
தெரியவில்லை.
அன்புடன்
நவநீதன்
http://navanithan.tk
Tuesday, March 9, 2010
ஒரே வார்த்தை, ஒகோன்னு வாழ்க்கை (Team.EMS - ஒரு வரலாற்றுக் குறிப்பு)
இந்தப்பதிவில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள், பர்னிச்சர்கள்,ஜாவா, மிக்சி, கிரைன்டர் யாவும் கற்பனையே.எதுவும் வாடகைக்கு எடுக்கப்பட்டதோ, ஓட்டலில் இருந்து ஆட்டைய போட்டதோ இல்லை. எத்தேச்சையாக யார் வாழ்விலாவது இந்தச் சம்பவங்கள் ஒத்துப் போனால் அதற்கு காதாசிரியர்கள்(பெயர் குறிப்பிடுவது என்னதான் அப்ரைஸலில் பாதிப்பை ஏற்படுத்தாது எனினும் ஈ எம் எஸ்சை ரிவோக் செய்வோரின் நலன் கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாகி
Team.EMS
சில சமயங்கள்ல ஒரே டயலாக் நாலஞ்சு எடத்துல ஒத்து போகும்(ஜாவால பாலிமார்பிஷம்னு சொல்றாங்களே அதுமாதிரி). மூனு வருஷமா கம்பெனியில குப்பை(வெலை செய்யறவன்னும் சொல்லலாம்) கொட்டிக்கிட்டு இருக்கறவன விட்டுட்டு முந்தா நாள் வேலைக்கு செர்ந்தவனுக்கு ஏன்பா கொட்டி குடுக்கறீங்கன்னு கேட்டா, சப்ளை அன்ட் டிமான்ட் தியரிய சொல்லி நமக்கு பாடம் நடத்த ஒரு கூட்டம் இருக்கு.
யாருடா இவனுங்கன்னு பாத்தா, நாலு நாளைக்கு முன்னாலதான் கம்பெனியில செர்ந்து இருப்பான். அப்பதான் நமக்கு லைட்டா புரியும் இவன் ஏற்கனவே தியரிய பிராக்டிலா இம்பிளிமென்ட் பண்னியிருக்கற விஷயம்.போன வருஷம் சேலரி ரிவைஸ்ல போனத (பல பேருக்கு கொறஞ்சது ஊரறிஞ்ச விஷயம்) அடுத்த அப்ரஸைல புடிச்சுருலாம்னு இருக்கற ஒரு 3 பேரால அட்ரிஷன் ரேட் 25 பர்சென்டோட நிக்குது. அதுல கொஞ்சம் பேரு போனால் ஆன்சைட் இல்லையேல் பென்சுன்னு இருப்பான். (4 பேருல ஒருத்தன் பேப்பர் போடறதா ஒரு க.கனிப்பு சொல்லுது. அதுதான் அந்த 25% அட்ரிஷன் ரேட். கனக்கு காட்டரதே 25 பர்சன்ட்னா நிஜம் எவ்ளோன்னு நிஜம் நிகழ்சியில அல்லது நடந்தது என்ன? கோபிநாத்துகிட்டயோ கேளுங்க)
சரி அது என்ன? "ஒரே வார்த்தை, ஒகோன்னு வாழ்க்கை" இந்த டயலாக்ல வற்ற அந்த ஒரு வார்த்தை என்னன்னா? EMS அந்த வார்த்தைய சொல்லறவன் வாழ்க்கை ஒகோன்னு இருக்கும்கிறாங்க Team.EMSஸின் அரசியல் ஆலோசகர்கள்.
இப்போதைக்கு யை அமைக்க வேண்டிய கட்டாயம் என்னனு நாலு பேரு இல்ல மூனு பேரு (ஏன்னா ஒருத்தன்தான் பேப்பர் போட்டுட்டானே!)கேட்கறான்.
1.ஒருத்தன் இரண்டு பேருன்னா எவன் எங்க எப்ப போறான்னு ஞாபகம் வெச்சுகலாம். கூட்டம் கூட்டமா போறதால ஒழுங்க டிரீட் போக முடியலங்கறதுதான் முக்கியமான பிரச்சனை.
2. பேரிடோ அனலிஸிஸ் படி மேல் உள்ள பிரச்சனையை தீர்தோம்னா 80% பிரச்சனைகளை தீர்த்துவிடலாம்.
3. மத்தபடி போட்டொ ஃப்ரேம் வாங்கி தற்றது, விநாயகர் வாங்கி தற்றதுது, டி சர்ட் குடுக்கறதுன்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
4.இதுக்கு இடையில சிங்கப்புர் போறேன், துபாய் போறேன், மைன்ட் ட்ரி போறேன், கொல்லிமலை போறேன் சொல்றவங்களுக்கு அப்பப்போ ஐடியா
குடுக்கறது, GNIIT , கேந்திரம் வித்யாலயா அட்ரஸ் குடுக்கற வேலையையும் Team.EMS பாத்துக்குது.
(எல் கே ஜி அட்மிஷன் ஃபாம காட்டி இன்னைக்கு ஒருத்தர் வேலைய விட்டு நின்னதுதான் இதுவரைக்கும் உடைக்கப்படாத ரெக்காட். Text Courtesy: Team.EMS )
இப்படி பல சாதனைகளை செய்திருக்கும், செய்து கொண்டிருக்கும் Team.EMS இனைய ஒரே ஒரு பட்டனை தட்டுங்கள்.
ஒரே வார்த்தை ஓகோன்னு வாழ்க்கை.
Team.EMS
Follow us on Twitter : http://twitter.com/team_ems
Tuesday, February 9, 2010
வசந்தகாலம் (A Story of Typical Software Engineer)
திருப்பியும் அடுத்த நாள் காலையில ஆபிஸ் போயாகனும். என்னடா பொழப்பு இப்படி இருக்கேன்னு சலிச்சுகிட்டே காலத்தை ஓட்டவேண்டிய சூழ்நிலை. ஏன்னா சாப்ட்வேர் கம்பெனியில இலையுதிர் காலம் அது. அட Recession Period தாங்க அப்படி சொன்னேன்.
நானும் அப்படியே வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்தேன்.....இலையுதிர்காலம் போய் வசந்தகாலம் வந்திருந்தது.
ஒரு நாள் காலைல ஒரு பத்து பதினொன்னு இருக்கும். பாதி தூக்கத்துல இருக்கும்போது போன் அடிச்சுது. இந்த நேரத்துல எவன்டா போன் பன்றதுன்னு யோசிச்சுகிட்டே போர்வைய கூட வெளக்காம கைய மட்டும் வெளிய நீட்டி கைத்தடவல தலையனை பக்கத்துல இருந்த மொபைலை எடுத்து பார்த்தா மெனேஜர் காலிங்..னு வருது. தூக்கத்த கலைச்சுட்டாரேங்கற கடுப்புல கேட்டேன்.
என்னங்க இந்த நேரத்துல போன் பன்றீங்க?
இல்லப்பா மணி பதினொன்னு ஆச்சு.
என்னது பதினொன்னா? ஓ.. சரி சரி அதனாலென்ன? இன்னொரு பத்து நிமசத்துல வந்துட போறேன். அதுக்குள்ள ஏன் போன் எல்லாம் பன்றீங்க?
P1 issue வந்துருக்கு ஒரு அரை மணி நேரத்துல வரமுடியுமா?
இல்லைங்க. நைட்டு தூங்க லேட்டாயிடுச்சு. மினிமம் ஒரு மணி நேரமாவது ஆகும்.
ரொம்ப அர்ஜென்ட். கொஞ்சம் சீக்கிரமா வாப்பா.
ம்.. சரி சரி.. நான் வந்துடறேன் என்று சொல்லி விட்டு லைனை கட் செய்தவுடன் அடுத்த கால்.
என்னுயிர் நீதானே..உன்னுயிர் நான்தானே..
சொல்லுடி.
..........................
நான் இன்னைக்கு ஃப்ரிதான்.
..........................
ஐய்யோ...ஒன்னும் வேலை இல்ல.
..........................
மாயாஜாலா? ஓகே. நீ ரெடியாகு பத்தாவது நிமிசம் ஹாஸ்டல் முன்னாடி நிப்பேன் சரியா?
என்னடா எங்க கெளம்பிட்டா? ரூம் மெட் கேட்டான். இல்லடா ரொம்ப போரடிக்குது படத்துக்கு கூட்டி போடான்னு சொன்னா அதான்.
அப்ப ஆபிசு?
Cant come today. Not feeling well னு உங்கிட்ட பேசிகிட்டே இப்பதான் மேனேஜருக்கு மெசேஜ் அனுப்பினேன்.
அவனுக்கு தெரியும் நேத்து வேறு கம்பெனியில் 100% hikeல் ஒரு ஆஃப்ர் வாங்கியது.
Wednesday, November 4, 2009
அடுத்த ஆன்சைட் உனக்குதான்
அடுத்த ஆன்சைட் உனக்குதான்
இந்த ஸ்டேட்டஸ் மீட்டிங்க எவன் கண்டுபிடிச்சானோ அவனை கண்டம் துண்டமா நூறு துண்டாக்கி, அதை மறுபடியும் ஆயிரம் துண்டாக்கினாகூட என் சோகம் கொறையாது. என்ன மாதிரியே பாதிக்கப்பட்டவங்களுக்கு இலவசவீடு, நிலம்னு ஏதாவது கிடைக்குதான்னு பாத்தா அதுவும் இல்ல. அட இரயில் ரிசர்வேஷன்ல ஒரு அஞ்சு பர்சென்ட் தள்ளுபடி குடுத்தாக் கொஞ்சம் சோகம் குறையுமேன்னு பார்த்தா, நமக்கு எப்பவுமே வெயிட்டிங் லிஸ்ட் கன்ஃப்ர்மே ஆகறதில்லை.
என்னடா, இந்த பிரச்சனை நமக்கு மட்டும்தானா? இல்லை, ஊர் உலகத்துல இருக்கற எல்லா டெவலப்பருக்குமே இருக்குதான்னு விசாரிச்சப்ப தெரிஞ்சுது, இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு. இங்க நான் பிரச்சனைன்னு சொல்லறத மேனஜர்னு யாராவது சொன்னாங்கன்னா, அதோடா உண்மைத்தன்மைக்கு நான் பொறுப்பில்லை.
ஸ்டேட்டஸ் மீட்டிங்கெல்லாம் ஒரு மேட்டரான்னு கேக்கறவன் ஒன்னு ஒழுங்கா கோடடிக்க தெரிஞ்சவனா இருப்பான். இல்ல, ஜால்ரா அடிக்க தெரிஞ்சவனா இருப்பான், எதுவும் இல்லைன்னா பிராஜெக்ட் லீடா இருக்கும். நமக்குதான் கோடடிக்க தெரியலயே ஜால்ரா அடிக்க கத்துக்கலாம்னு பாத்தா, அது ஜாவாவ விட கஷ்டமா இருக்கு.
மேனேஜர் லைட்டா ஆரம்பிப்பாரு , அப்பறம், சொல்லுப்பா எப்படி போயிட்டு இருக்குன்னு ஆரம்பிக்கிற மீட்டிங், அப்ரைசைல மட்டும் அவுட்ஸ்டேன்டிங் ரேட்டிங் கேக்குற, புரமோஷன் கேக்குற, ஆனா ஒரு பக் ஃபிக்ஸ் பன்றதுக்கு மூணு நாள் எடுத்துக்கறன்னு மீட்டிங்கோட சேர்த்து நம்ம மானமும் போக ஆரம்பிக்கும். எம் ஓ எம்(MOM)ல நம்ம மான, மரியாதைய வாங்கறத டைனமிக்கா சேர்த்திருவாங்க. இந்த லட்சணத்துல ஆன்சைட் வேற கேக்கறானுங்கன்னு பொதுவா பேசுனாலும் நம்மலதான் சொல்லராருன்னு நமக்கு தெரியுதோ இல்லையோ மத்தவன் எல்லாருக்கும் தெரியும்.
இவ்ளோ பிரச்சனை வெச்சிகிட்டு ஏன்டா அவருகிட்ட குப்ப கொட்டிக்கிட்டு இருக்க,அதான் டெப்லாய்மென்ட் அலவென்ச கூட குறைச்சிட்டானுங்களே பேசாம பிராஜெக்ட் ரிலீஸ் கேக்க வேண்டியதுதான்டா என்றான் சக பங்காளி.
இல்லடா மச்சான் ஆன் சைட் அனுப்பரேன்னு சொன்னாருடா என்றேன்
எப்போ?
அடுத்த மாடியூலுக்கு்.
அடப்பாவி இதுதான்டா கடைசி மாடியூல், இதோட பிராஜெக்ட் முடியபோகுதுடா!.
அவன் சொல்வதெல்லாம் என் காதில் விழவில்லை. அப்போது நான் பிளைட்டில் போய் கொண்டிருந்தேன் ஆன்சைட்டிற்கு....... கனவில்.
அன்புடன் நவநீதன்
Monday, October 26, 2009
மேனேஜர் நல்லவரா? கெட்டவரா?
இரண்டு வருஷத்துக்கு மேல QAல குப்ப கொட்டிட்டேன், டெவலப்மென்ட் மூவ் ஆகலான்னு இருக்கேன். தென், என்ன ஃபுயூச்சர் பிளான்? அப்ரைஸலில் மேனேஜர் கடைசியாக கேட்ட கேள்விக்கு பதிலாக சொன்னேன்.
லைட்டாக மேனேஜர் சிரித்தார். கண்டீப்பாக அதற்கு ஓராயிரம் அர்த்தம் இல்லையென்றாலும் கீழ்கண்ட சில அர்த்தங்களாவது இருக்கக் கூடும்.
1. டெவலப்மென்ட பத்தி உனக்கு என்ன தெரியும்?
2. excel தவிர வேற ஏதாவது டூல், அப்ளிகேசன் பத்தி தெரியுமா? excelல நம்பர அடிச்சிட்டு கால்குலேட்டர்ல டோட்டல் போட்டவந்தானா நீ?
3. Java, Javaனு எல்லாரும் சொல்லறாங்களே, அது sponcer, city centerல விக்கிற costly item ஆன்னு கேட்டவன்தானா நீ?
4. வாழ்க்கையில் test case கூட எழுதாம execute மட்டுமே பன்னுன சோம்பேறி பயதானா நீ?
5. .Net, Java அப்படிங்கறது ப்ளட் கேன்சர் மாதிரி குணப்படுத்த முடியாத ஒரு வியாதியான்னு பொலம்பினத மறந்துட்டயா?
பொறுமையாக கேட்டார். ஏதாவது டிரைனிங் போயிருக்கியா? நீயே படிச்சிகிட்டு இருக்கியா? ஏதாவது வொர்க் பன்னியிருக்கியா? என்ன தைரியத்துல கேக்குற? எப்படி மேனேஜ் பன்ன போற?
சில வினாடிகள் கனத்த மவுனத்தை நான் கலைத்தேன். இவ்ளோ நாளா google லயும் yahooலயும் திருடினோம். இப்போ bingலயும் செர்த்து திருடனும், அவ்ளோதான் வித்தியாசம் என்றேன்.
Java architect கூட இன்னுமும் comple reference book ரெஃப்பர் பன்ற இந்த காலத்துல bing லெவல்ல பேச தெரிஞ்ச நீ நிச்சியம் டெவலப்மென் உலகத்துக்கு தேவை. எல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ போ என்றார். கிளம்பும் போது ஒன்றே ஒன்று சொன்னார்.
எதுக்கும் bing ஓட சேர்த்து naukri, monster எல்லாத்தையும் பார் என்றது எதற்கு என அப்போது புரியவில்லை.