நைட்டு 12 மணிக்கு போன போட்டு, தம்பி P1 issue வந்துருக்கு. அரை மணி நேரத்துல ஆபிசுக்கு போன்னு ஆன்சைட் மேனேஜர் சொல்லுவாறு. அடிக்கற குளிர்ல எந்திரக்கவே முடியாது. அடிச்சு பிடிச்சு போறதுல கொஞ்சம் லேட்டானா கூட என்னப்பா P1 issue னு சொல்றேன் நீ பாட்டுக்கு இப்படி லேட்டா வர்றம்பார். அப்பறம் அன்னைக்கு இராத்திரி சிவராத்திரிதான்.
திருப்பியும் அடுத்த நாள் காலையில ஆபிஸ் போயாகனும். என்னடா பொழப்பு இப்படி இருக்கேன்னு சலிச்சுகிட்டே காலத்தை ஓட்டவேண்டிய சூழ்நிலை. ஏன்னா சாப்ட்வேர் கம்பெனியில இலையுதிர் காலம் அது. அட Recession Period தாங்க அப்படி சொன்னேன்.
நானும் அப்படியே வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்தேன்.....இலையுதிர்காலம் போய் வசந்தகாலம் வந்திருந்தது.
ஒரு நாள் காலைல ஒரு பத்து பதினொன்னு இருக்கும். பாதி தூக்கத்துல இருக்கும்போது போன் அடிச்சுது. இந்த நேரத்துல எவன்டா போன் பன்றதுன்னு யோசிச்சுகிட்டே போர்வைய கூட வெளக்காம கைய மட்டும் வெளிய நீட்டி கைத்தடவல தலையனை பக்கத்துல இருந்த மொபைலை எடுத்து பார்த்தா மெனேஜர் காலிங்..னு வருது. தூக்கத்த கலைச்சுட்டாரேங்கற கடுப்புல கேட்டேன்.
என்னங்க இந்த நேரத்துல போன் பன்றீங்க?
இல்லப்பா மணி பதினொன்னு ஆச்சு.
என்னது பதினொன்னா? ஓ.. சரி சரி அதனாலென்ன? இன்னொரு பத்து நிமசத்துல வந்துட போறேன். அதுக்குள்ள ஏன் போன் எல்லாம் பன்றீங்க?
P1 issue வந்துருக்கு ஒரு அரை மணி நேரத்துல வரமுடியுமா?
இல்லைங்க. நைட்டு தூங்க லேட்டாயிடுச்சு. மினிமம் ஒரு மணி நேரமாவது ஆகும்.
ரொம்ப அர்ஜென்ட். கொஞ்சம் சீக்கிரமா வாப்பா.
ம்.. சரி சரி.. நான் வந்துடறேன் என்று சொல்லி விட்டு லைனை கட் செய்தவுடன் அடுத்த கால்.
என்னுயிர் நீதானே..உன்னுயிர் நான்தானே..
சொல்லுடி.
..........................
நான் இன்னைக்கு ஃப்ரிதான்.
..........................
ஐய்யோ...ஒன்னும் வேலை இல்ல.
..........................
மாயாஜாலா? ஓகே. நீ ரெடியாகு பத்தாவது நிமிசம் ஹாஸ்டல் முன்னாடி நிப்பேன் சரியா?
என்னடா எங்க கெளம்பிட்டா? ரூம் மெட் கேட்டான். இல்லடா ரொம்ப போரடிக்குது படத்துக்கு கூட்டி போடான்னு சொன்னா அதான்.
அப்ப ஆபிசு?
Cant come today. Not feeling well னு உங்கிட்ட பேசிகிட்டே இப்பதான் மேனேஜருக்கு மெசேஜ் அனுப்பினேன்.
அவனுக்கு தெரியும் நேத்து வேறு கம்பெனியில் 100% hikeல் ஒரு ஆஃப்ர் வாங்கியது.
Tuesday, February 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இது எல்லாரும் பண்ணுறது தானுங்களே! ஏதாச்சும் புது ஓ.எஸ்.இருக்கோன்னு நினைச்சேன். ஆனாலும், சுவாரசியம் தான்! நடத்துங்க...!
mm சீக்ரம் மாயா ஜாலுக்கு வாங்க. (அங்க தானே உங்க ஜாலத்த பாக்கலாம்)
Post a Comment