Monday, February 22, 2010

கார்த்திக்கு ஒடம்பு சரியில்லை

நண்பன் ஒருவன் வந்த பிறகு வின்னைத் தொட..
ஹலோ..சொல்லுடா பார்ட்னர்.
டேய் கார்த்திக்கு ஒடம்பு சரியில்லைடா?
ஏன் என்னாச்சு?
தெரியலை. காலையில இருந்து வாந்தி எடுத்துகிட்டே இருக்கான்.
வாந்தி எடுக்கறானா? கங்ராஜுலேசன். நீங்க அப்பா ஆக போறீங்க.
ச்சீ..அடங்கு. இப்போ ஆஸ்பத்திரி கூட்டி போகலாம்னு இருக்கோம். நீ வறியா?
என்னடா இப்படி கேட்டுட்ட? இதோ கெளம்பிகிட்டே இருக்கேன்.
ஆபீஸுக்கு என்ன சொல்லலாம். என்ன யோசிச்சாலும் ஒரு ஐடியா கூட தோனமாட்டேங்குதே. சரி விடு.. வழக்கமான அஸ்திரத்தையே எஸ் எம் எஸ் அனுப்பிட வேண்டியதுதான்.
ஒரு வ‌ழியா ரூம் போய் சேரும் போது ப‌தினோரு ம‌ணி ஆயிருச்சு.


டேய் என்ன‌டா எல்லாருமே லீவா? ஒரு ம‌ன‌ச‌னுக்கு ஒட‌ம்பு ச‌ரியில்லைன்னு சொன்ன‌ உட‌னே எல்லாருமே லீவு போட்டுட்டுட்டு பாத்துகிறீங்க‌ளே, அட‌டா இதுவ‌ன்றோ ந‌ட்பு என்றேன்.
சரி சரி புல்லரிச்சது போதும், மசமசன்னு நின்னுகிட்டே இருக்காம கார்த்திய ஆஸ்பத்திரி கூட்டி போய்ட்டு வா, நான் மத்த விஷயத்த ரெடி பன்றேன் என்றான் நண்பன்.
மத்த விஷயமா? அப்படின்னா?
அப்படின்னா ஒன்னும் இல்லை. எல்லாரும் லீவ் போட்டாச்சு, சும்மாவே இருந்தா போர் அடிக்குமில்ல?
அதுக்கு?
அதுக்குதான், தம்பிய அனுப்ச்சு வெச்சுருக்கேன் சிக்கன் வாங்கிட்டு வறதுக்கு. நீ என்ன பன்ற கார்த்திக்கு மருந்து வாங்கிட்டு அப்படியே பக்கத்துல இருக்கற டாஸ்மாக்குல மேன்சன் ஹவுஸ் 2 புல்லும், அவனுக்கு ஹாட் வேண்டாமாம் அதனால நாலு பீரு வாங்கிக்க. அவனால சாப்பிட முடியாது இரண்டு ஆப்பிள் வாங்கிக்க அப்பறம் ஒரு கிலோ திராட்சை வாங்கிக்க.
திராட்சை எதுக்குடா அவனுக்கு?
திராட்சை அவனுக்கு இல்ல. நம்ம சைடிஷ்க்கு. சரக்குக்கு(???)
காசு..?
காசா? என்கிட்ட எதுக்கு கேக்கற? இன்னிக்கு எல்லாமே கார்த்தி கணக்குதான், மருந்து பில்லோட சேர்த்து வாங்கிட்டு வா, கார்த்தி மெடிகிளைம் பன்னிகட்டும்.
என்னது மெடிக்கிளைமா? ம்.. சரி என்னவோ பன்னுங்க?
கார்த்தியை கூட்டி போய் ஊசி போட்டுக் கொண்டு, திராட்சை, ஆப்பிள், சரக்கு சகிதம் வந்திறங்கினேன். அதற்குள் சிக்கன் ரெடியாகியிருந்தது.


மாத்திரை முழுங்க‌னும் கொஞ்ச‌ம் சுடுத‌ண்ணி வெய்யுங்க‌டா...
அந்த‌ பாலை காய்ச்சுங்க‌டா, கொஞ்ச‌ம் ப‌ண்னாவ‌து சாப்ப‌ட‌றேன்... டேய் ச‌த்த‌ம் போடாதீங்க‌ என‌க்கு த‌லைவ‌லிக்குது...
டீவிய‌ நிறுத்துங்க‌டா.. காது வ‌லிக்குது...
ஃபேன் ஏன்டா போட்டீங்க‌? ரொம்ப‌ குளிருதுடா...

இப்படியெல்லாம் கார்த்தி உளரியது(??) எதவும் எங்கள் காதில் விழவேயில்லை. அப்போது நாங்கள் ஒரு ஃபுல்லை காலி செய்துவிட்டிருந்தோம்.

இப்போதெல்லாம் என்னவென்றே தெரியவில்லை ஒடம்பு சரியில்லையில்லையென்றாலும் கார்த்தி ஆபிஸ் போய் விடுகிறான்.

ஒடம்ப பாத்துக்கடா கார்த்தி
உயிர் நண்பன்


நவநீதன்..

No comments:

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP