நாள் முழுக்க பைக்ல சென்னைய சுத்தறோம், சாயங்கலாம் படம் பார்க்கறோம், அப்படியே ஹோட்டல்ல ட்ரீட் முடிச்சுட்டு வறோம். இதுதான் Feb 14 ப்ளான். இந்த பிளானை நான் சொல்லியதிலிருந்து கவனிப்பே தனி. சின்ன விஷய்த்துக்கெல்லாம் லெப்ட் ரைட் வாங்கறவ இப்போ பெரிசா எதுனா கேனத்தனம் பன்னினா கூட Its so funny அப்படின்னு சொல்லற அளவுக்கு பெரிய லெவலுக்கு ஒர்கவுட் ஆயிபோச்சு பிளான்.
சரி சினிமா டிக்கெட்ட பிரன்ட் அவுட் எடுக்கலாம்னு ப்ரௌசிங் சென்டர் போனப்ப அப்படியே மெயில் செக் பண்னலாம்னு மெயில் பாக்ஸ ஒப்பன் பன்னினா, Your resume has been shortlisted for the interview, interview date and Time is Fer 14 2010 , 10 AM அப்படின்னு ஒரு மெயில்.
என்னனு சொல்ல இந்த கொடுமைய? லைட்டா ப்ளாஷ்பேக் போய் பாக்கறேன்.
"இப்போ இந்திய பொருளாதத்த சீர்திருத்தர ரேஞ்சுக்கு பிளான் போட்டுட்டு ஏதாவது சொதப்புன? @#$?!`~#%@ செருப்பாலயே அடிப்பேன்.
ச்சீ..ச்சீ.. என்னடி இப்படி கேவலமா திட்டற. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. சொன்னா சொன்னதுதான்"
வீர வசனத்துடன் பேசிய பிளாஷ்பேக்கை ஃப்ரீஸ் பன்னிவிட்டு மெயிலை பார்த்தேன்.
வேறு வழியேயில்லை,செருப்படி கன்ஃபாம் ஆயிடுச்சு. ம்.. மொதல்ல பொழப்ப பாக்கலாம், ஆஃப்ர் லட்டர கொண்டு போய் கையில குடுத்து சமாதானபடுத்தி படத்துக்கும், பார்டிக்கு மட்டும் போயி சமாளிச்சுகாலாம் என்ற என்னத்தில் இன்டர்வியுவிற்கு போய்விட்டேன். பத்து மணின்னு போட்டு இருக்கான் சரி எப்படியும் ஒரு 3 மணிக்கு முடிஞ்சுரும்னு பாத்தா, ஒரு முன்னூரு பேரு உக்கார்ந்து இருக்கான். என்னடா இது முன்னூரு பேரு வந்துருக்கானுங்களான்னு கேட்டா, இங்கதான் முன்னூரு பேரு, இன்னொரு ஹால்ல ஐநூறு பேரு இருக்காங்களாம்னு அவன் சொல்லும்போதே மனசு சொல்லுச்சு "வட போச்சேன்னு".
சரி ஆனது ஆச்சுன்னு நானும் உட்காந்து இருக்கேன்.. இருக்கேன்... இருக்கேன்..மணி அஞ்சு ஆச்சு. ரொம்ப கூல ஒருத்தர் வந்து சொன்னாரு "ரொம்ப கூட்டம் வந்துருச்சாம், அவிங்க எதிர்பாக்கவே இல்லையாம், அதனால நீங்கெல்லாம் நாளைக்கு காலையில வந்துருங்கன்னு சொன்ன அவனை "உனக்கெல்லாம்ம் ஏழேழு ஜென்மத்தும் பிகரே செட் ஆவ கூடாது அப்படியே ஆனாலும் கல்யாணம் ஆன அன்னைக்கே நைட் சிப்ட் போட்டுறனும் என்று சபித்துவிட்டு வந்துவிட்டேன்.
2 comments:
Rasitthen..nanbaa...?!
Chance illa....
Post a Comment