"மேனேஜர் ஆயிட்டா வேலையே செய்யத்தேவையில்லை சும்மா வற்ற மெயில பார்வேட் பண்னினா போதும்"
"எக்ஸெல் தெரிஞ்சா போதும் மச்சி மேனேஜர் ஆக""இரண்டு வரி கோடிடக்க தெரியாது இவரு மேனேஜரு"
"நான் நைட்டு முழுக்க ஆபிஸ்ல உக்காந்து வேலை செஞ்சுகிட்டு இருக்கேன், இவரு வீட்டுல இருந்து டாஸ்க் அசைன் பண்றாரு"
"ஒரு நாள் லீவு கேட்டா குடுக்க மாட்டேங்குறாய்ங்க. ஆனா இவரு மட்டும் வெகேசன் போவாரு"
"நான் செய்யற வேலையில நாலுல ஒரு பங்கு வேலைய செஞ்சுகிட்டு என்ன விட நாலு மடங்கு சம்பளம் வாங்கறாரு"
"மழை பெய்யற அன்னிக்கு லேட்டா வந்தா கூட கேள்வி கேக்குறாய்ங்க. கார்ல வற்றவங்களுக்கு பைக்ல வர்ற கஷ்டம் எப்படி தெரியும்?"
ஏம்பா? உங்க மேனேஜர பத்தி நல்லாவே சொல்ல மாட்டியா?
"ஏன் சொல்ல மாட்டேன். அவரு நல்லாவே இருக்க மாட்டாரு".
இப்படி நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லி லொலலொலாய் பண்ணிக்கொண்டிருந்த என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் என் மேனேஜர். "என்ன மேனேஜர், ஒரு அஞ்சாரு வருசம் முன்னால சேர்ந்திருந்தா நானும் மேனேஜர்தான்" என்ற அசட்டை வேறு. இப்படியிருந்த என் மனநிலையை புரட்டிப்போட்டது இன்றைய மீட்டிங்கில் அவரின் பேச்சு.
அவர் பேசிய 49 நிமிடமும் அப்படியே உறைந்திருந்தேன்.(என்னுடன் சேர்த்து என் வாட்சும் நின்றிருந்தது. செல் தீர்ந்தினால் அல்ல. அதே 10.10 சென்டிமென்ட்).
கடந்து வந்த பாதையை மட்டுமே கடைந்து கொண்டிருக்காமல் அடுத்த வருடத்திற்கான Road map, Future plan, வெங்காயம், பருத்திக்கொட்டை, புன்னாக்கு (ஒரு ரைமிங்காக எதை எதையெல்லாம் சேர்க்க வெண்டியிருக்கு பாருங்க) என அவரின் vision மற்றும் தொலை நோக்கு பார்வையிலும் அவர் தனித்துவமாகத் தெரிந்தார்.
Perception என்ற வார்த்தையை மந்திரம் போல் என்னுபவன் நான். அவர் பேசிய 90% மேலான விஷயங்களின் மீதான அவரின் Perception என்னை ஆச்சர்யத்தில் ஆஹா! சூப்பர்!! என தலையாட்ட வைத்துவிட்டது. (கொசுறாக மற்றவரிடம் விசாரித்தலில் எப்பவும் போலதான் பேசினார் என்றார்கள். என்னவோ நான் இன்னிக்கு நல்ல மூட்ல இருந்தேன் போல.)
அப்போதுதான் முடிவு செய்தேன் மேனேஜர் மேனேஜர்தான் (பெரிய மனுசன் பெரிய மனுசந்தான்)
கொசுறு:
டெவலப்பர் டெவலப்பர்தான், டெஸ்டர் டெஸ்டர்தான் ஸ்குரு டிரைவர் ஸ்குரு டிரைவர்தான், லீடு சும்மாதான்னு எல்லாருக்கும் போன்போட்டு சொல்லுங்க. அப்படியே நான் நாந்தான், நீங்கதான் அவன் அவந்தான்.. இராமானுசத்தோட இன்பினிடி வரைக்கும் போட்டுகோங்க. (இன்பினிடிய கன்டுபிடிச்சது இராமானுசன்கிறது இந்த பதிவு மூலமா நான் சொல்லற மெசேஜ். (ஷங்கரின் இரசகனாக்கும் நான்.)
(இன்பினிடிய கண்டுபிடிச்சது நெசமாலுமே இராமானுசமான்னு எனக்கு தெரியல சாமியோவ்.)
இந்த அப்ரசைலில் அவுட்ஸ்டேன்டிங்கை எதிர்பாத்து
நவநீதன்
Wednesday, December 30, 2009
Subscribe to:
Posts (Atom)