வேலையை விட்டுட்டு ஜப்பான் மொழி படிக்க ஜப்பான் போகலாம்னு இருக்கேன்னு நான் முடிவு எடுத்துப்ப,
*அவனவன் அமெரிக்கா போறேன், ஆஸ்திரேலியா போறேன்னு சொல்லிதான் கேள்விபட்டு இருக்கேன், நீதான்டா மொத மொதலா ஜப்பான் போறேன்னு (கேனத்தனமா)சொல்ற.
*கழுத வயசாச்சு, உன்னோட படிச்சவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகி புள்ள எல்கேஜி படிக்குது. நீ என்னடான்னா மறுபடியும் படிக்க போறேன்னு சொல்லுர?
*கூரையேறி கோழி புடிக்க முடியலையாம், வானத்துல ஏறி வைகுன்டம் போறானாம்.
*இந்த வயசுலகூட ரிஸ்க் எடுக்கலன்னா எப்படி? ஆல் த பெஸ்ட், நல்லா பண்றா.
*கலக்கு மச்சி, எஞ்ஜாய் பண்றா.
*இன்னும் வீட்டுக்கு வாங்குனா கடனயே கட்டல அதுக்குல்ல உனக்கு வேற கடன் வாங்கி ஏன்டா உங்கப்பாவா இம்ச படுத்துற? உன்ன இஞ்சினியரிங் படிக்க வச்சதுக்கே அவரு ரொம்ப கஷ்டப்பட்டாரு. என் குடுப்ப சூழ்நிலை தெரிந்த நண்பனின் ஆதங்கம் இது.
உனக்கு எது விருப்பமோ அத பண்னு. காசெல்லாம் அப்பறம் பாத்துகலாம் என்று என் வீட்டில் சொன்னார்கள்.
இப்படி எத்தனையோ ஆறுதல்கள், வாழ்த்துக்கள், அறிவுரைகள், கிண்டல்கள், சமாதானங்கள். ஆனால் கடைசியாக நண்பன் சொன்னது மட்டும்தான் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
உனக்கு நான் ஒன்னும் சொல்லத்தேவையில்லை. ஆனா ஒன்னே ஒன்னும் மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ.
போய் ஒழுங்கா படிச்சு நல்ல நிலைமைக்கு போய்ட்டேன்னா ஓகே.
இல்லன்னு வச்சுக்கோ, எனக்கு தெரியும் இப்படிதான் நடக்கும்னு, நான் அப்பயே சொன்னேன் கேட்டானா? அப்படின்னு ஆளாளாக்கு பேசுறமாதிரி வச்சுறாத சொல்லிப்புட்டென்.
When I was in Japan.. அப்படின்னு பந்தா பன்றதுக்காகவோ, காசு கொழுத்துபோச்சு இப்படியாவது செலவு பண்னலாம்னோ போகலை. ஆன்சைட்டான்னு கேட்டா? அப்படியெல்லாம் இல்ல, வேலையையே விட்டுட்டுதான் போறேன்.
பிரிய மனமில்லாமல், உனக்கு விசா கிடைக்க கூடாதுன்னு நான் வேண்டிக்கிறேன் என்று சொன்ன உறவையும் பிரிந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.
எல்லாம் மாற்றங்களை எதிர் நோக்கித்தான்... .
இது எனக்கு நானே எழுதுக்கொண்ட தலையெழுத்து
வாழ்வதும் வீழ்வதும் போர்கலத்தில்தான்
எனக்கு மட்டும் கல்விக்கூடத்தில்.
மீண்டும் மாணவனாக,
நவநீதன்
Sunday, May 16, 2010
Subscribe to:
Posts (Atom)