அப்ப நான் பணிரெண்டாவது படிச்சுகிட்டு இருந்தேன். காலாண்டு பரிட்ச சமயத்துல கெமிஸ்ட்ரி சார் புரோமோஷன்ல மாத்தலாகி வேற பள்ளிகூடத்துக்கு போய்ட்டாரு.
நாங்க எல்லாம் டாக்டர் இஞ்சினியர் ஆகற இலட்சியம் கெமிஸ்ட்ரிக்கு வாத்தியார் இல்லாததாலதான் நடக்கலன்னு வரலாறு பேசிடுமோன்னு, கெமிஸ்ட்ரி வாத்தியார் உடனே வேனுமுன்னு எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாவட்ட கல்வி அதிகாரி அங்க இங்கன்னு என்னென்னவோ பன்னினார். ஆனா, ஒன்னுமே வேலைக்காகல. கடைசியா பெற்றோர் ஆசிரியர் கலகம் மூலம ஒருத்தர தற்காலிகம வேலைக்கு சேர்த்தாங்க.
அப்படி வந்தவர்தான் இந்த கெமிஸ்டிரி சார். நீட்டா அயர்ன் பண்னின சட்டை பேண்ட், அதிலயும் டக் இன் பண்ணாம வரமாட்டார். 45 நிமிஷம் கிளாஸ்ல சரியா 40நிமிஷம் நடத்துவார்.
அவர் புத்தகத்த பாத்து நடத்துனத நான் பாத்ததே இல்லை. குரொமியம் பிரித்தெடுத்தல்னு நடத்த ஆரம்பிச்சார்னா அதோட பண்புகள் 14ம் வரிசையா வந்துகிட்டெ இருக்கும். எல்லா ஈக்வேஷனையும் பேலன்ஸ் பண்ணிதான் எழுதுவார். அவ்ளோ அருமையா நடத்துவார்.
வெறும் 1500 அவரோட மாச சம்பளம். சும்மா பேருத்து ஒப்பேத்தற கவர்மெண்ட் வாத்தியருங்க சம்பள்ம் 20000க்கும் வேல. அவங்களவிட நூறு பங்கு அதிக அக்கறையா நடத்துவார்.
அப்படியே பன்னிரண்டாம் வகுப்பு முடிஞ்சு காலேஜ்காக வேற ஊர் போனதுல எங்க ஊருக்கே இரண்டு மாசதுக்கு ஒரு தடவதான் போவேன். அப்பறம் எல்லாமே மாறிபோச்சு. காலேஜ்ல புதிய ஆசிரியர்கள், புதிய நண்பர் வட்டம்னு பள்ளிகூட அனுபவத்தை சுத்தமா மறந்துட்டேன்.
கொஞ்சநாள் முன்னாடி பள்ளிகூட நண்பன் அடுத்தவாரம் கல்யானம்டா, கூட படிச்ச பசங்க எல்லார்த்தையும் கூப்புட்டு இருக்கேன், நீயும் கட்டாயம் வாடான்னு போன் பன்னினான். டேய் எல்லா வாத்தியாருக்கும்
பத்திரிக்கை குடுத்திருக்கேன் எல்லாம் கண்டிப்பாக வருவாங்க என்றபோது கல்யானதுக்கு போகனும்கிறதவிட கெமிஸ்ட்ர் சார பாக்கனுங்கற ஆர்வம்தான் அதிகமா இருந்துச்சு.
+2 முடிச்சு பத்து வருஷம் ஆகுது. என்னதான் ஆறு ஏழு கிலொமீட்டர்தூரத்துல பசங்க இருந்தாலும் யாரயும் பெருச சந்திக்கமுடியல.
கல்யானுத்துக்கு போயிருந்தேன்.
டேய் ஆலே மாறிட்டடா. நல்லாயிருக்கியாடா? டேய் பிஸிக்ஸ் சாரு என்னடா தலையெல்லாம் நரைச்சுடுச்சு. ரொம்ம மாறிட்டாருடா. விதவிதமான விசாரிப்புகள். பத்து வருட இடைவெளி எல்லாவற்றையும் மாற்றி இருந்தது.
கெமிஸ்ட்ரி சார் வரலையாடா?
அதோ அங்க இருக்கார்டா.
ஓ. இரு ஒரு வார்த்த பேசிட்டு வந்தர்றேன்.
சார், எப்படி சார் இருக்கீங்க். எல்லாம் மாறீட்டாங்க சார். நீங்க மட்டும் அப்படியே இருக்கீங்க சார்.
வாப்பா எப்படி இருக்க. நீ கூட அப்படியேதான் இருக்க. அப்பறம் நீ. என்ன பன்னிகிட்டு இருக்க.
சென்ன்னைல வொர்க் பன்னிட்டு இருக்கேன் சார்.
உங்க பேட்ஜ் பசங்க எல்லாமே இன்னைக்கு நல்ல வேலைக்கு போயிட்டீங்கடா. ரொம்ப சந்தோஷம்டா.
சார் நீங்க எங்கீங் சார் இருக்கீங்க இப்போ. நம்ம ஸ்கூல்லயா இருக்கீங்க.
இல்லடா. உங்க பேட்ஜ் முடிஞ்ச உடனே கவர்மெண்ட்ல இருந்தே கெஸ்ட்ரிக்கு ஆள் போட்டுடாங்க. அதனால என்ன நிறுத்திட்டாங்க. நான் இங்க டுயூசன் செண்டர்ல கொஞ்ச நாள் வொர்க் பன்னினேன். சம்பளம்
கட்டுபடியாகலடா. 2000 சம்பளத்துல என்ன பண்ண முடியும்.
சார் சர்வீஷ் கமிஷன் எழுதி கவர்மெண்ட் போஸ்டிங் ட்ரை பன்னலாமில்லிங் சார்.
ஒன்னும் வேலைக்ககலடா, எல்லாம் பணம்தான், மெரிட்னால 4 லட்சம் கேக்கறான் போஸ்டிங் போட. என்னத்த எக்ஸாம் எழுதி என்ன செய்ய.
இப்போ டாஸ்மாக்ல ஏரியா மேனேஜர இருக்கேண்டா. இதுக்கும் பணம்தான். ஒரு இலட்சம் வட்டிக்கு வாங்கிதான் சேர்ந்தேன். 5 ஆயிரம் குடுக்கறான். ஏதோ பொழப்பு ஓடுது.
சார் என்ன சார் நீங்க. உங்க டேலண்டுக்கு நீங்க போயி டாஸ்மாக்ல, ஏன் சார் நீங்க?
டேலண்டா? இங்க எல்லாமே பணம்தாம்பா. 2000 சம்பளத்துல இருந்ததவிட 5000 சம்பளம் வாங்கும்போது நான் வளந்துட்டதா மத்தவங்க நெனைக்கறாங்க. நான் என்ன செய்ய முடியும்? 2000 ரூ சம்பளத்துல பாடம் சொல்லிகுடுத்த மனதிருப்தி 5000 சம்பளம் வாங்கும்போது இல்லதான். இதெல்லாம் வீட்டுவாடகை கொடுக்கும்போது யோசிக்கமுடியலைடா.
உன்மைதான், இங்கே வெற்றி என்பது பணத்தை கொண்டு மட்டுமே நிர்ணியக்கப்படுதில் Job satisfaction என்பதில் அர்த்தமில்லைதான்.