Friday, November 4, 2011
குழந்தைத்தனமா? புத்திசாலிதனமா?
குழந்தைகளோ இல்ல சின்ன பசங்களோ பன்ற சில விஷயங்கள் நமக்கு ஆச்சர்யமா இருக்கும். எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்குதுங்கற வியப்படைஞ்ச நிகழ்ச்சி எல்லொருக்கும் இருக்கும். அதுல ஒன்னுதான் இது.
எங்க பக்கத்துவீட்டு பசங்க, பெரியவன் அபி 10 வயசு, சின்ன பையன் நிஷி 6 வயசு. நான் வீட்ல எப்பவுமே சும்மா இருந்தாலும் அவனுங்க பிஸியா இல்லாயாத சமயம் அவனுங்களுக்கு நானும் எனக்கு அவனுங்களும் பொழுதுபோக்கு.
அன்னிக்கும் அப்படிதான் அவனுங்களோட சேர்ந்து சுட்டி டீவி பாத்துகிட்டு இருந்தேன். இதப்பாத்த எங்கப்பா எல்லோருட அப்பா மாதிரியே
சுட்டி டீவி பாக்கற வயசான்னு திட்ட ஆரம்பிச்சார்.
நானும் இதுதான் சாக்குன்னு, டேய் சுட்டி டீவி பாத்த தாத்தா திட்டுவார்னு சொன்னேன்ல, சேனல மாத்துடான்னு அபி கையல இருந்த ரிமோட்ட புடுங்க, அவன் கத்த ஆரம்பிச்சதுல டென்சனான எங்கப்பா,
25 வயசு ஆச்சு இன்னும் பொறுப்புவரலை, #%#%3, #%#% அப்படின்னு திட்டிகிட்டு இருக்க....
அபி என்ன நெனைச்சானோ, ஒடனே அவங்க அம்மாகிட்ட ' அம்மா, எனக்கு எத்தன வயசுன்னு கேக்க, அவங்க 'பத்து வயசுடான்னு சொன்னாங்க.
இதெல்லாம் ஒத்த கன்னுல பாத்துகிட்டே விளையாடிட்டு இருந்த நிஷி வேகமா அவங்கஅம்மாகிட்ட ஓடி வந்து
'அம்மா, எனக்கு எத்தன வயசுன்னு கேக்க, அவங்களும் சாதரனமா உனக்கு 6 வயசுன்னு சொன்னவொடனே கீழபடுத்து பெறன்டுகிட்டு கத்துறான் கத்துறான் கத்திகிட்டே இருக்கான், ,
டேய்..ஏன்டா என்னடா ஆச்சுன்னா?
அபிக்கு மட்டும் 10 வயசு, எனக்கு மட்டும் 6 வயசுதானான்னு கத்துறான்.
டாய்..சின்ன வயசுல இந்தமாதிரியெல்லாம் ஐன்ஸ்டீன் கூட யோசிச்சிருக்கமாட்டாருடா சாமின்னு யோசிகிட்டே எங்கப்பாவ பாத்தா,
சின்ன பையன் என்னமா யோசிக்கிறான் நீயெல்லாம்.... இன்னும் என்னெல்லாம் யோசிச்சாரோ..நான் சுட்டி டிவில பிஸியாயிட்டேன்.
Subscribe to:
Posts (Atom)