சாலையில் செல்கின்ற வாகனம், பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, குழந்தையை இரசித்துக் கொண்டிருக்கும் இளம்பெண், கைகோர்த்தபடி செல்லும் காதலர்கள் என எப்பொழுதும் போலான நாள். அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நடைபயணம் போதுமானாதாக இருக்கும் தூரத்தில் வீடு. எப்போதும் எனக்கு இருபது நிமடத்திற்கு மேல் தேவைபடுகிறது. இதற்கும் நான் பனத்தை சேமிப்பதில்லை என்று மற்றவர்கள் சொல்லுவதற்கும் தொடர்பு இருக்குமோ என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாய் விடைகிடைக்கும் தூரம் தெரியவில்லை.
காலை முதல் இரவு வரை அலுவலகத்தில் இருப்பதில் உலகதிதின் அளவை cubicle size-ல் மட்டும் அளக்க முடிகிறது. பள்ளிமுடிய காத்திருக்கும் சிறுகுழந்தையை போல் நானும் இருப்பதாவே தோன்றும். மாலையில் விளையாடிக் கொண்டே செல்கிறேன் வீட்டிற்கு. இரயில் நிலைத்திற்கான தெரு என்பதால் கூட்டம் குறைவில்லாமல் இருக்கும். இவர்கள் அன்பானவர்கள், பொதுவாய் ஒரு புன்னகையோடு வழிப்போக்கரிடம் உரையாட துவங்குவதுண்டு. தினம் செல்லும் தெருதான் ஆனால் எப்போதும் புது மனிதர்கள். ஆச்சர்யமாய் இருக்கும். காரணம் இதுவாய் இருக்கலாம்.
ஆம், புதிய முகங்களே ஆச்சர்யத்தை ஏற்படுத்துவால் அவர்களின் முகங்களை என்னுள் பதிவு செய்வதில்லை. உரையாடலை நினைவில் கொள்வதில்லை. எப்போதும் என வீட்டு முனையில் சிறு புன்னகையோடு விடைபட்டு செல்கிறேன்.
பிரிவு வலிக்கிறது நாம் இழந்துவிட்டோம் என்றென்னும்போது. பிரிவு சுகமானதாய் இருக்கும் மீண்டும் சந்திபோம் என்கின்றபோது. பிரிவு எதுவமற்றதாய் இருக்கும் நீங்கள் எதையும் எதிர்பாக்காதபோது.