Saturday, August 14, 2010

காற்றுள்ள போதே தூற்றிவிட்டேன்.

பணம் இருந்தபோது என்ன செய்தேனென 
தெரியவில்லை,
இப்போது,
பணத்திற்கு என்ன செய்வதென
தெரியவில்லை.


அன்புடன்
நவநீதன்
http://navanithan.tk

Tuesday, August 10, 2010

ஜப்பான் புத்தர் கோவிலில் ஊதுபத்தி

கிமிதேரா(紀三井寺) வக்காயமாவில் உள்ள புத்தர் கோவலின் பெயர். மூன்று குளங்களை கொன்ட கோவில் என்று பொருள். (紀  வக்காயமா,  三 ‍ ‍மூன்று, 井 கிணறு,  寺 புத்தர் கோவில்)


என் ஜப்பானிய நண்பர் குடும்பத்துடன் இக்கோவிலிக்கு செல்வதாகவும், நேரமிருப்பின் என்னையும் அழைத்து செல்ல விரும்புவதாகும் கூறியிருந்தார். நேரம் ஒத்துழைத்ததில் நானும் சென்றிருந்தேன். நண்பரின் பத்து வயதான அவரின் மகளையும், மணைவியையும் அழைத்து வந்திருந்தார்.

நம்ம ஊர் தேர் திருவிழாவின் போது இருக்கும் கடைகள் போல வீதியின் இரு பக்கங்களிலும் கடைகள். இன்று மட்டுமே இந்த கடைகள் விழாக்காக இருக்கிறது என்ற போது நம்ம ஊர தேர் திருவிழாதான் நினைவிற்கு வந்தது.

கோவிலுக்குள் நுழைந்தோம், மிகப் பெரிய புத்தர் சிலை பிரமிக்க வைத்தது. இரண்டு மாடி உயரம், இரண்டாவது மாடிக்கு சென்றால் புத்தரின் முகத்தை மிக அருகில் பார்க்க முடிகிறது. புத்தரின் கைகளில் கயிரின் ஒரு முனை கட்டப்பட்டு, மறுமுனை பக்கதர்கள் தொட்டு பிரார்த்தனை செய்கிறார்கள். அந்த கயிற்றை தொட்டு பிரார்த்தனை செய்வதன் மூலம் பிரார்த்தனை நேரடியாக புத்தரின் கைகளை சென்றடைகிறது என்பது நம்பிக்கை.

ஜப்பானிகள் பழக்கவழக்கங்கள் சில நம்மோடு ஒத்து போனதில் ஆச்சர்யப்பட்டேன்.

நம்மூர் போலவே, உண்டியலில் காசு போட்டுவிட்டு சாமி கும்பிடிகிறார்கள்,மணியடிக்கிறார்கள். என்னை ஆச்சர்யப்படுத்திய இன்னொரு விஷ்யம் நம்மூர் போலவே ஊதுபத்தி கொளுத்துயிருந்தார்கள். அந்த நறுமணமும், மணி சத்தமும், கண் மூடி பிராத்தனை செய்த ஒரு நிமிடம் நம்மூர் கோவிலில் இருப்பது போல் தோன்றியது. ஒரு விதமான சிலிர்ப்புடன் வீடு திரும்பினேன்.

அன்புடன் நவநீதன்
http://navanithan.tk

Saturday, July 31, 2010

Friends are friends....

My Dearest Friends,
"Through there are more women in life, but mom is special, Though there are 365 day in a year this day is special because of YOU."

Searching a quote from search engine (I hate to say Googling) to describe about good friendship, But not quite enough.



I search "best friends" in Google, It shows ....Turner & Hooch, Thelma & Louise, Sam & Frodo, Shrek & Donkey, Timone & Pumba, Tom Sawyer & Huck Finn, Ricky Bobby & Hal, Forrest & Bubba.. The list continues....
But,
What to do with 81,000,000 results???. It does not show mine and yours name.(Thats why I hate Google).


So I decided to define my own(This does not mean I am searching in bing).


"The meaning of relation between you and your Friends cant be define by someone else unless you feel yourself". (
©http://navanithan.tk, binging too will not yield any result)



There are thousand miles away from you, but I could not forget the good moments I had, happiness I enjoyed, cheers I shared.


Happy to got you as my friend.
The luckiest & happiest
Navanithan

Friday, July 9, 2010

தக்கன வாழும். தகாதன அழியும்

              ”தக்கன வாழும். தகாதன அழியும்” , 

                           "Survival of the fittest",   

じゃくにくきょうしょく  [Romaji reading:  jaku’niku’kyo’shoku]












தமிழ், ஆங்கிலம், ஜப்பானிய மொழி என எதில் கூறினாலும் வலுத்தவன் இளைத்தவனை அடிப்பான் என்பதுதான் கதையெனினும் மொழியில்லாத காலத்திலேயே ஆரம்பித்த இந்த வாழ்வியல் போராட்டம் பற்றி குறிப்பு இருக்கும் மொழிகள் நிச்சயம் பழமை வாய்ந்ததாக இருக்க முடியும்.

 じゃくにくきょうしょく வக்காரிமாஸ்கா? நேத்து ஜப்பானிய மொழி வகுப்புல சென்செய் கேட்டப்ப புரியுதுன்னு மண்டைய ஆட்டிட்டு அத அப்படியே எழுதி கொண்டாந்து நெட்ல தேடி பார்த்தா ”Survival of the fittest” னு விக்கீபீடியால இருந்துச்சு.

 இந்த வாக்கியத்த மொத மொதல்ல Herbert Spencer, 1864 வருஷம் பயன்படுத்தியதா இருந்தாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த நம் தமிழ் குடிமக்கள் கண்டீப்பாக இதை குறிப்பிட்டிருப்பார்கள் என எனக்கு தோன்றியது. 

அப்படி ஏதேனும் பாடலோ குறிப்புகளோ தமிழில் இருக்கிறதெனில் அதை விக்கீபீடியாவில் போடுவது தமிழ் மொழியின் சிறப்பை மேம்படுத்தும் என என்னியதால் இந்த விண்ணப்பம்.

விக்கீபீடியாவில் பதிவு செய்ய இங்கே செல்லவும்: 


பதிலை எதிர்பார்த்து ஆவலுடன்
நவநீதன் 


Wednesday, July 7, 2010

விபத்தில் போன நடுவிரல்

எப்போதும் போலதான்
தட்டச்சு செய்கிறேன்.
as f ;lkj என்பதில் d மட்டும்
காணவில்லை.

-நவநீதன்

வட்டிக் கணக்கு

நூறு முறை படித்தபோதும் புரியாத
கூட்டி வட்டியும், தொடர் வட்டியும்
புரிகிறது, வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டுகையில்.

-நவநீதன்

Sunday, May 16, 2010

இது எனக்கு நானே எழுதிக்கொண்ட தலையெழுத்து

வேலையை விட்டுட்டு ஜப்பான் மொழி படிக்க ஜப்பான் போகலாம்னு இருக்கேன்னு நான் முடிவு எடுத்துப்ப,

*அவனவன் அமெரிக்கா போறேன், ஆஸ்திரேலியா போறேன்னு சொல்லிதான் கேள்விபட்டு இருக்கேன், நீதான்டா மொத மொதலா ஜப்பான் போறேன்னு (கேனத்தனமா)சொல்ற.

*கழுத வயசாச்சு, உன்னோட படிச்சவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகி புள்ள எல்கேஜி படிக்குது. நீ என்னடான்னா மறுபடியும் படிக்க போறேன்னு சொல்லுர?

*கூரையேறி கோழி புடிக்க முடியலையாம், வானத்துல ஏறி வைகுன்டம் போறானாம்.

*இந்த வயசுலகூட ரிஸ்க் எடுக்கலன்னா எப்படி? ஆல் த பெஸ்ட், நல்லா பண்றா.

*கலக்கு மச்சி, எஞ்ஜாய் பண்றா.

*இன்னும் வீட்டுக்கு வாங்குனா கடனயே கட்டல அதுக்குல்ல உனக்கு வேற கடன் வாங்கி ஏன்டா உங்கப்பாவா இம்ச படுத்துற? உன்ன இஞ்சினியரிங் படிக்க வச்சதுக்கே அவரு ரொம்ப கஷ்டப்பட்டாரு. என் குடுப்ப சூழ்நிலை தெரிந்த நண்பனின் ஆதங்கம் இது.

உனக்கு எது விருப்பமோ அத பண்னு. காசெல்லாம் அப்பறம் பாத்துகலாம் என்று என் வீட்டில் சொன்னார்கள்.

இப்படி எத்தனையோ ஆறுதல்கள், வாழ்த்துக்கள், அறிவுரைகள், கிண்டல்கள், சமாதானங்கள். ஆனால் கடைசியாக நண்பன் சொன்னது மட்டும்தான் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

உனக்கு நான் ஒன்னும் சொல்லத்தேவையில்லை. ஆனா ஒன்னே ஒன்னும் மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ.


போய் ஒழுங்கா படிச்சு நல்ல நிலைமைக்கு போய்ட்டேன்னா ஓகே.
இல்லன்னு வச்சுக்கோ, எனக்கு தெரியும் இப்படிதான் நடக்கும்னு, நான் அப்பயே சொன்னேன் கேட்டானா? அப்படின்னு ஆளாளாக்கு பேசுறமாதிரி வச்சுறாத சொல்லிப்புட்டென்.

When I was in Japan.. அப்படின்னு பந்தா பன்றதுக்காகவோ, காசு கொழுத்துபோச்சு இப்படியாவது செலவு பண்னலாம்னோ போகலை. ஆன்சைட்டான்னு கேட்டா? அப்படியெல்லாம் இல்ல, வேலையையே விட்டுட்டுதான் போறேன்.

பிரிய மனமில்லாமல், உனக்கு விசா கிடைக்க கூடாதுன்னு நான் வேண்டிக்கிறேன் என்று சொன்ன உறவையும் பிரிந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.

எல்லாம் மாற்றங்களை எதிர் நோக்கித்தான்... .

இது எனக்கு நானே எழுதுக்கொண்ட தலையெழுத்து
வாழ்வதும் வீழ்வதும் போர்கலத்தில்தான்
எனக்கு மட்டும் கல்விக்கூடத்தில்.


மீண்டும் மாணவனாக‌,
நவநீதன்

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP