Saturday, June 16, 2012
இரயில்
இரயில் எனக்கொன்றும் புதிதல்ல. இரயில் ரோட்டிற்கும் எங்கள் வீட்டிற்கும் 100அடி தொலைவுதான், எனக்கு தெரியாமல் அதில் எந்த இரயிலும் போனதில்லை. ஆனாலும் நான் ஒருமுறை கூட இரயிலில் ஏறியதில்லை, ஏன் நின்றுகொன்டிருக்கும் இரயிலை கூட பார்த்ததில்லை. சிறுவயதிலிருந்தே இரயிலும் இரயில் சார்ந்த ஒரு ஆறாவது திணையுடன் தான் விளையாடிஇருக்கிறேன். இதில் போகும் எல்லா இரயிலும் ரொம்ப தூரம் செல்லும் என்றும், சிலர் டெல்லிக்கு செல்கிறதென்றும் சொல்ல கேட்டிருக்கிறேன். இரயில் பெட்டிகளை எண்ணுவது எங்களுக்குள் விளையாட்டு. சரக்கு இரயில் என்றால் சின்ன சின்ன பெட்டிகளாய் அதிகம் இருக்கும். பயணிகள் இரயில் என்றால் டாட்டா சொல்வதுன்டு. நமக்கு டாடா வைப்பதெற்கென்றெ படியில் நின்று செல்கிறார்கள் என்று எங்களுக்குள் சொல்லிக்கொள்வொம். இரயில் என்றாலே ஒரு கம்பீரம், அதை பற்றி பேசும்போது பெருமை பொங்கும்.
பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என எல்லாம் முடிந்து வேலை தேடும் படலம், கழுதை கெட்ட குட்டிசெவரு, நான் மட்டும் விதிவிலக்கா என்ன? சென்னை முதன் முதலாக இரயிலில் போகிறேன், இருபது வருடங்களாய் பார்த்து இரசித்த இரயில், வேலை தெடுவதையோ, சென்னை பற்றியோ இல்லாமல் இரயிலை பற்றியே என் நினைவு.
டிக்கெட் வாங்கி, ஜெனரல் கம்பார்ட்மென்டில் ஏறினால் அங்கே நிற்பதற்கு கூட இடமில்லாமல் கூட்டம், நெறிக்கியடித்து கழிவறை பக்கத்தில் நின்று கொண்டே சென்னை வந்தேன்.
இப்போது இரயிலை நினைத்தாலே கழிவறை நெடியடிக்கிறது.
அடுத்த வாரம் ஊருக்கு போகிறேன் பஸ்ஸில்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அதிக எதிர்பார்ப்புக்கும் யதார்த்த நிலைக்கும்
உண்டான் விரிசலால் வந்த முடிவு என நினைக்கிறேன்
மனம் கவர்ந்தது பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment