Wednesday, November 4, 2009

அடுத்த ஆன்சைட் உனக்குதான்

அடுத்த ஆன்சைட் உனக்குதான்


இந்த ஸ்டேட்டஸ் மீட்டிங்க எவன் கண்டுபிடிச்சானோ அவனை கண்டம் துண்டமா நூறு துண்டாக்கி, அதை மறுபடியும் ஆயிரம் துண்டாக்கினாகூட என் சோகம் கொறையாது. என்ன மாதிரியே பாதிக்கப்பட்டவங்களுக்கு இலவசவீடு, நிலம்னு ஏதாவது கிடைக்குதான்னு பாத்தா அதுவும் இல்ல. அட இரயில் ரிசர்வேஷன்ல ஒரு அஞ்சு பர்சென்ட் தள்ளுபடி குடுத்தாக் கொஞ்சம் சோகம் குறையுமேன்னு பார்த்தா, நமக்கு எப்பவுமே வெயிட்டிங் லிஸ்ட் கன்ஃப்ர்மே ஆகறதில்லை.

என்னடா, இந்த பிரச்சனை நமக்கு மட்டும்தானா? இல்லை, ஊர் உலகத்துல இருக்கற எல்லா டெவலப்பருக்குமே இருக்குதான்னு விசாரிச்சப்ப தெரிஞ்சுது, இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு. இங்க நான் பிரச்சனைன்னு சொல்லறத மேனஜர்னு யாராவது சொன்னாங்கன்னா, அதோடா உண்மைத்தன்மைக்கு நான் பொறுப்பில்லை.

ஸ்டேட்ட‌ஸ் மீட்டிங்கெல்லாம் ஒரு மேட்ட‌ரான்னு கேக்கறவன் ஒன்னு ஒழுங்கா கோடடிக்க தெரிஞ்சவனா இருப்பான். இல்ல, ஜால்ரா அடிக்க தெரிஞ்சவனா இருப்பான், எதுவும் இல்லைன்னா பிராஜெக்ட் லீடா இருக்கும். நமக்குதான் கோடடிக்க தெரியலயே ஜால்ரா அடிக்க கத்துக்கலாம்னு பாத்தா, அது ஜாவாவ விட கஷ்டமா இருக்கு.

மேனேஜர் லைட்டா ஆரம்பிப்பாரு , அப்பறம், சொல்லுப்பா எப்படி போயிட்டு இருக்குன்னு ஆரம்பிக்கிற மீட்டிங், அப்ரைசைல‌ மட்டும் அவுட்ஸ்டேன்டிங் ரேட்டிங் கேக்குற, புரமோஷன் கேக்குற, ஆனா ஒரு பக் ஃபிக்ஸ் பன்றதுக்கு மூணு நாள் எடுத்துக்கறன்னு மீட்டிங்கோட சேர்த்து நம்ம மானமும் போக ஆரம்பிக்கும். எம் ஓ எம்(MOM)ல நம்ம மான, மரியாதைய வாங்கறத டைனமிக்கா சேர்த்திருவாங்க. இந்த லட்சணத்துல ஆன்சைட் வேற கேக்கறானுங்கன்னு பொதுவா பேசுனாலும் நம்மலதான் சொல்லராருன்னு நமக்கு தெரியுதோ இல்லையோ மத்தவன் எல்லாருக்கும் தெரியும்.

இவ்ளோ பிரச்சனை வெச்சிகிட்டு ஏன்டா அவருகிட்ட குப்ப கொட்டிக்கிட்டு இருக்க,அதான் டெப்லாய்மென்ட் அலவென்ச கூட குறைச்சிட்டானுங்களே பேசாம பிராஜெக்ட் ரிலீஸ் கேக்க வேண்டியதுதான்டா என்றான் சக பங்காளி.

இல்ல‌டா ம‌ச்சான் ஆன் சைட் அனுப்ப‌ரேன்னு சொன்னாருடா என்றேன்
எப்போ?
அடுத்த மாடியூலுக்கு்.
அட‌ப்பாவி இதுதான்டா கடைசி மாடியூல், இதோட பிராஜெக்ட் முடியபோகுதுடா!.


அவன் சொல்வ‌தெல்லாம் என் காதில் விழ‌வில்லை. அப்போது நான் பிளைட்டில் போய் கொண்டிருந்தேன் ஆன்சைட்டிற்கு....... க‌ன‌வில்.

அன்புடன் நவநீதன்

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP