Wednesday, November 3, 2010

பார்ட் டைம் ஜாப்

தகுதிக்கேற்ற வேலையில்லைனாலும்
தேவைக்கேற்ற வேலை

Saturday, August 14, 2010

காற்றுள்ள போதே தூற்றிவிட்டேன்.

பணம் இருந்தபோது என்ன செய்தேனென 
தெரியவில்லை,
இப்போது,
பணத்திற்கு என்ன செய்வதென
தெரியவில்லை.


அன்புடன்
நவநீதன்
http://navanithan.tk

Tuesday, August 10, 2010

ஜப்பான் புத்தர் கோவிலில் ஊதுபத்தி

கிமிதேரா(紀三井寺) வக்காயமாவில் உள்ள புத்தர் கோவலின் பெயர். மூன்று குளங்களை கொன்ட கோவில் என்று பொருள். (紀  வக்காயமா,  三 ‍ ‍மூன்று, 井 கிணறு,  寺 புத்தர் கோவில்)


என் ஜப்பானிய நண்பர் குடும்பத்துடன் இக்கோவிலிக்கு செல்வதாகவும், நேரமிருப்பின் என்னையும் அழைத்து செல்ல விரும்புவதாகும் கூறியிருந்தார். நேரம் ஒத்துழைத்ததில் நானும் சென்றிருந்தேன். நண்பரின் பத்து வயதான அவரின் மகளையும், மணைவியையும் அழைத்து வந்திருந்தார்.

நம்ம ஊர் தேர் திருவிழாவின் போது இருக்கும் கடைகள் போல வீதியின் இரு பக்கங்களிலும் கடைகள். இன்று மட்டுமே இந்த கடைகள் விழாக்காக இருக்கிறது என்ற போது நம்ம ஊர தேர் திருவிழாதான் நினைவிற்கு வந்தது.

கோவிலுக்குள் நுழைந்தோம், மிகப் பெரிய புத்தர் சிலை பிரமிக்க வைத்தது. இரண்டு மாடி உயரம், இரண்டாவது மாடிக்கு சென்றால் புத்தரின் முகத்தை மிக அருகில் பார்க்க முடிகிறது. புத்தரின் கைகளில் கயிரின் ஒரு முனை கட்டப்பட்டு, மறுமுனை பக்கதர்கள் தொட்டு பிரார்த்தனை செய்கிறார்கள். அந்த கயிற்றை தொட்டு பிரார்த்தனை செய்வதன் மூலம் பிரார்த்தனை நேரடியாக புத்தரின் கைகளை சென்றடைகிறது என்பது நம்பிக்கை.

ஜப்பானிகள் பழக்கவழக்கங்கள் சில நம்மோடு ஒத்து போனதில் ஆச்சர்யப்பட்டேன்.

நம்மூர் போலவே, உண்டியலில் காசு போட்டுவிட்டு சாமி கும்பிடிகிறார்கள்,மணியடிக்கிறார்கள். என்னை ஆச்சர்யப்படுத்திய இன்னொரு விஷ்யம் நம்மூர் போலவே ஊதுபத்தி கொளுத்துயிருந்தார்கள். அந்த நறுமணமும், மணி சத்தமும், கண் மூடி பிராத்தனை செய்த ஒரு நிமிடம் நம்மூர் கோவிலில் இருப்பது போல் தோன்றியது. ஒரு விதமான சிலிர்ப்புடன் வீடு திரும்பினேன்.

அன்புடன் நவநீதன்
http://navanithan.tk

Saturday, July 31, 2010

Friends are friends....

My Dearest Friends,
"Through there are more women in life, but mom is special, Though there are 365 day in a year this day is special because of YOU."

Searching a quote from search engine (I hate to say Googling) to describe about good friendship, But not quite enough.



I search "best friends" in Google, It shows ....Turner & Hooch, Thelma & Louise, Sam & Frodo, Shrek & Donkey, Timone & Pumba, Tom Sawyer & Huck Finn, Ricky Bobby & Hal, Forrest & Bubba.. The list continues....
But,
What to do with 81,000,000 results???. It does not show mine and yours name.(Thats why I hate Google).


So I decided to define my own(This does not mean I am searching in bing).


"The meaning of relation between you and your Friends cant be define by someone else unless you feel yourself". (
©http://navanithan.tk, binging too will not yield any result)



There are thousand miles away from you, but I could not forget the good moments I had, happiness I enjoyed, cheers I shared.


Happy to got you as my friend.
The luckiest & happiest
Navanithan

Friday, July 9, 2010

தக்கன வாழும். தகாதன அழியும்

              ”தக்கன வாழும். தகாதன அழியும்” , 

                           "Survival of the fittest",   

じゃくにくきょうしょ  [Romaji reading:  jaku’niku’kyo’shoku]












தமிழ், ஆங்கிலம், ஜப்பானிய மொழி என எதில் கூறினாலும் வலுத்தவன் இளைத்தவனை அடிப்பான் என்பதுதான் கதையெனினும் மொழியில்லாத காலத்திலேயே ஆரம்பித்த இந்த வாழ்வியல் போராட்டம் பற்றி குறிப்பு இருக்கும் மொழிகள் நிச்சயம் பழமை வாய்ந்ததாக இருக்க முடியும்.

 じゃくにくきょうしょく வக்காரிமாஸ்கா? நேத்து ஜப்பானிய மொழி வகுப்புல சென்செய் கேட்டப்ப புரியுதுன்னு மண்டைய ஆட்டிட்டு அத அப்படியே எழுதி கொண்டாந்து நெட்ல தேடி பார்த்தா ”Survival of the fittest” னு விக்கீபீடியால இருந்துச்சு.

 இந்த வாக்கியத்த மொத மொதல்ல Herbert Spencer, 1864 வருஷம் பயன்படுத்தியதா இருந்தாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த நம் தமிழ் குடிமக்கள் கண்டீப்பாக இதை குறிப்பிட்டிருப்பார்கள் என எனக்கு தோன்றியது. 

அப்படி ஏதேனும் பாடலோ குறிப்புகளோ தமிழில் இருக்கிறதெனில் அதை விக்கீபீடியாவில் போடுவது தமிழ் மொழியின் சிறப்பை மேம்படுத்தும் என என்னியதால் இந்த விண்ணப்பம்.

விக்கீபீடியாவில் பதிவு செய்ய இங்கே செல்லவும்: 


பதிலை எதிர்பார்த்து ஆவலுடன்
நவநீதன் 


Wednesday, July 7, 2010

விபத்தில் போன நடுவிரல்

எப்போதும் போலதான்
தட்டச்சு செய்கிறேன்.
as f ;lkj என்பதில் d மட்டும்
காணவில்லை.

-நவநீதன்

வட்டிக் கணக்கு

நூறு முறை படித்தபோதும் புரியாத
கூட்டி வட்டியும், தொடர் வட்டியும்
புரிகிறது, வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டுகையில்.

-நவநீதன்

Sunday, May 16, 2010

இது எனக்கு நானே எழுதிக்கொண்ட தலையெழுத்து

வேலையை விட்டுட்டு ஜப்பான் மொழி படிக்க ஜப்பான் போகலாம்னு இருக்கேன்னு நான் முடிவு எடுத்துப்ப,

*அவனவன் அமெரிக்கா போறேன், ஆஸ்திரேலியா போறேன்னு சொல்லிதான் கேள்விபட்டு இருக்கேன், நீதான்டா மொத மொதலா ஜப்பான் போறேன்னு (கேனத்தனமா)சொல்ற.

*கழுத வயசாச்சு, உன்னோட படிச்சவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகி புள்ள எல்கேஜி படிக்குது. நீ என்னடான்னா மறுபடியும் படிக்க போறேன்னு சொல்லுர?

*கூரையேறி கோழி புடிக்க முடியலையாம், வானத்துல ஏறி வைகுன்டம் போறானாம்.

*இந்த வயசுலகூட ரிஸ்க் எடுக்கலன்னா எப்படி? ஆல் த பெஸ்ட், நல்லா பண்றா.

*கலக்கு மச்சி, எஞ்ஜாய் பண்றா.

*இன்னும் வீட்டுக்கு வாங்குனா கடனயே கட்டல அதுக்குல்ல உனக்கு வேற கடன் வாங்கி ஏன்டா உங்கப்பாவா இம்ச படுத்துற? உன்ன இஞ்சினியரிங் படிக்க வச்சதுக்கே அவரு ரொம்ப கஷ்டப்பட்டாரு. என் குடுப்ப சூழ்நிலை தெரிந்த நண்பனின் ஆதங்கம் இது.

உனக்கு எது விருப்பமோ அத பண்னு. காசெல்லாம் அப்பறம் பாத்துகலாம் என்று என் வீட்டில் சொன்னார்கள்.

இப்படி எத்தனையோ ஆறுதல்கள், வாழ்த்துக்கள், அறிவுரைகள், கிண்டல்கள், சமாதானங்கள். ஆனால் கடைசியாக நண்பன் சொன்னது மட்டும்தான் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

உனக்கு நான் ஒன்னும் சொல்லத்தேவையில்லை. ஆனா ஒன்னே ஒன்னும் மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ.


போய் ஒழுங்கா படிச்சு நல்ல நிலைமைக்கு போய்ட்டேன்னா ஓகே.
இல்லன்னு வச்சுக்கோ, எனக்கு தெரியும் இப்படிதான் நடக்கும்னு, நான் அப்பயே சொன்னேன் கேட்டானா? அப்படின்னு ஆளாளாக்கு பேசுறமாதிரி வச்சுறாத சொல்லிப்புட்டென்.

When I was in Japan.. அப்படின்னு பந்தா பன்றதுக்காகவோ, காசு கொழுத்துபோச்சு இப்படியாவது செலவு பண்னலாம்னோ போகலை. ஆன்சைட்டான்னு கேட்டா? அப்படியெல்லாம் இல்ல, வேலையையே விட்டுட்டுதான் போறேன்.

பிரிய மனமில்லாமல், உனக்கு விசா கிடைக்க கூடாதுன்னு நான் வேண்டிக்கிறேன் என்று சொன்ன உறவையும் பிரிந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.

எல்லாம் மாற்றங்களை எதிர் நோக்கித்தான்... .

இது எனக்கு நானே எழுதுக்கொண்ட தலையெழுத்து
வாழ்வதும் வீழ்வதும் போர்கலத்தில்தான்
எனக்கு மட்டும் கல்விக்கூடத்தில்.


மீண்டும் மாணவனாக‌,
நவநீதன்

Tuesday, March 9, 2010

Taking a Break from WORK and HCL

It’s been a wonderful three years in HCL. The lesions I learned, problems I faced, rewards I got, achievements I made(If any??), Friends I got (and also the treat), are can not be explain by words. There are not enough words to explain the memories but definitely I had a GOOD time with you.

Tomorrow will be my last day in HCL. I have planned to do my studies in Japan and leaving from here before end of this month.
Taking this opportunity to thanks the well wishers of mine and all people who supported, guided, and helped me till now.

THANK YOU VERY MUCH TO ALL.

Navaneetha Kumar

ஒரே வார்த்தை, ஒகோன்னு வாழ்க்கை (Team.EMS - ஒரு வ‌ர‌லாற்றுக் குறிப்பு)

இந்தப்பதிவில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள், பர்னிச்சர்கள்,ஜாவா, மிக்சி, கிரைன்டர் யாவும் கற்பனையே.எதுவும் வாடகைக்கு எடுக்கப்பட்டதோ, ஓட்டலில் இருந்து ஆட்டைய போட்டதோ இல்லை. எத்தேச்சையாக யார் வாழ்விலாவது இந்தச் சம்பவங்கள் ஒத்துப் போனால் அதற்கு காதாசிரியர்கள்(பெயர் குறிப்பிடுவ‌து என்னதான் அப்ரைஸலில் பாதிப்பை ஏற்படுத்தாது எனினும் ஈ எம் எஸ்சை ரிவோக் செய்வோரின் நலன் கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

நிர்வாகி

Team.EMS

சில‌ ச‌ம‌ய‌ங்க‌ள்ல‌ ஒரே ட‌ய‌லாக் நால‌ஞ்சு எட‌த்துல‌ ஒத்து போகும்(ஜாவால‌ பாலிமார்பிஷ‌ம்னு சொல்றாங்க‌ளே அதுமாதிரி). மூனு வ‌ருஷ‌மா க‌ம்பெனியில‌ குப்பை(வெலை செய்ய‌ற‌வ‌ன்னும் சொல்ல‌லாம்) கொட்டிக்கிட்டு இருக்க‌ற‌வ‌ன விட்டுட்டு முந்தா நாள் வேலைக்கு செர்ந்த‌வனுக்கு ஏன்பா கொட்டி குடுக்க‌றீங்க‌ன்னு கேட்டா, ச‌ப்ளை அன்ட் டிமான்ட் திய‌ரிய‌ சொல்லி ந‌மக்கு பாட‌ம் ந‌ட‌த்த ஒரு கூட்ட‌ம் இருக்கு.

யாருடா இவ‌னுங்க‌ன்னு பாத்தா, நாலு நாளைக்கு முன்னால‌தான் க‌ம்பெனியில‌ செர்ந்து இருப்பான். அப்ப‌தான் ந‌ம‌க்கு லைட்டா புரியும் இவ‌ன் ஏற்க‌ன‌வே திய‌ரிய‌ பிராக்டிலா இம்பிளிமென்ட் ப‌ண்னியிருக்க‌ற‌ விஷ‌ய‌ம்.போன‌ வ‌ருஷ‌ம் சேலரி ரிவைஸ்ல போனத (பல பேருக்கு கொறஞ்சது ஊரறிஞ்ச விஷயம்) அடுத்த‌ அப்ர‌ஸைல‌ புடிச்சுருலாம்னு இருக்க‌ற‌ ஒரு 3
பேரால‌ அட்ரிஷ‌ன் ரேட் 25 ப‌ர்சென்டோட‌ நிக்குது. அதுல கொஞ்சம் பேரு போனால் ஆன்சைட் இல்லையேல் பென்சுன்னு இருப்பான். (4 பேருல‌ ஒருத்த‌ன் பேப்ப‌ர் போட‌ற‌தா ஒரு க.க‌னிப்பு சொல்லுது. அதுதான் அந்த‌ 25% அட்ரிஷ‌ன் ரேட். கனக்கு காட்டரதே 25 பர்சன்ட்னா நிஜம் எவ்ளோன்னு நிஜம் நிகழ்சியில அல்லது நடந்தது என்ன? கோபிநாத்துகிட்டயோ கேளுங்க‌)



ச‌ரி அது என்ன? "ஒரே வார்த்தை, ஒகோன்னு வாழ்க்கை" இந்த‌ ட‌ய‌லாக்ல‌ வ‌ற்ற‌ அந்த‌ ஒரு வார்த்தை என்ன‌ன்னா? EMS அந்த‌ வார்த்தைய‌
சொல்ல‌றவ‌ன் வாழ்க்கை ஒகோன்னு இருக்கும்கிறாங்க‌ Team.EMSஸின் அர‌சிய‌ல் ஆலோச‌க‌ர்க‌ள்.

இப்போதைக்கு யை அமைக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் என்ன‌னு நாலு பேரு இல்ல‌ மூனு பேரு (ஏன்னா ஒருத்த‌ன்தான் பேப்ப‌ர் போட்டுட்டானே!)கேட்க‌றான்.


1.ஒருத்த‌ன் இர‌ண்டு பேருன்னா எவ‌ன் எங்க‌ எப்ப‌ போறான்னு ஞாப‌க‌ம் வெச்சுக‌லாம். கூட்ட‌ம் கூட்ட‌மா போற‌தால‌ ஒழுங்க‌ டிரீட் போக முடிய‌ல‌ங்க‌ற‌துதான் முக்கிய‌மான‌ பிர‌ச்ச‌னை.



2. பேரிடோ அன‌லிஸிஸ் ப‌டி மேல் உள்ள‌ பிர‌ச்ச‌னையை தீர்தோம்னா 80% பிர‌ச்ச‌னைக‌ளை தீர்த்துவிட‌லாம்.



3. ம‌த்த‌ப‌டி போட்டொ ஃப்ரேம் வாங்கி த‌ற்ற‌து, விநாய‌க‌ர் வாங்கி த‌ற்ற‌துது, டி ச‌ர்ட் குடுக்க‌ற‌துன்கிற‌ வ‌ர‌லாற்று முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ பிர‌ச்ச‌னைக‌ளையும் Team.EMS பாத்துக்கும்.



4.இதுக்கு இடையில‌ சிங்க‌ப்புர் போறேன், துபாய் போறேன், மைன்ட் ட்ரி போறேன், கொல்லிம‌லை போறேன் சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு அப்ப‌ப்போ ஐடியா

குடுக்க‌ற‌து, GNIIT , கேந்திர‌ம் வித்யால‌யா அட்ர‌ஸ் குடுக்க‌ற‌ வேலையையும் Team.EMS பாத்துக்குது.
(எல் கே ஜி அட்மிஷ‌ன் ஃபாம‌ காட்டி இன்னைக்கு ஒருத்த‌ர் வேலைய‌ விட்டு நின்ன‌துதான் இதுவ‌ரைக்கும் உடைக்க‌ப்ப‌டாத‌ ரெக்காட். Text Courtesy: Team.EMS )

இப்ப‌டி ப‌ல‌ சாத‌னைக‌ளை செய்திருக்கும், செய்து கொண்டிருக்கும் Team.EMS இனைய‌ ஒரே ஒரு ப‌ட்ட‌னை த‌ட்டுங்க‌ள்.

ஒரே வார்த்தை ஓகோன்னு வாழ்க்கை.

Team.EMS


Follow us on Twitter : http://twitter.com/team_ems



Monday, February 22, 2010

கார்த்திக்கு ஒடம்பு சரியில்லை

நண்பன் ஒருவன் வந்த பிறகு வின்னைத் தொட..
ஹலோ..சொல்லுடா பார்ட்னர்.
டேய் கார்த்திக்கு ஒடம்பு சரியில்லைடா?
ஏன் என்னாச்சு?
தெரியலை. காலையில இருந்து வாந்தி எடுத்துகிட்டே இருக்கான்.
வாந்தி எடுக்கறானா? கங்ராஜுலேசன். நீங்க அப்பா ஆக போறீங்க.
ச்சீ..அடங்கு. இப்போ ஆஸ்பத்திரி கூட்டி போகலாம்னு இருக்கோம். நீ வறியா?
என்னடா இப்படி கேட்டுட்ட? இதோ கெளம்பிகிட்டே இருக்கேன்.
ஆபீஸுக்கு என்ன சொல்லலாம். என்ன யோசிச்சாலும் ஒரு ஐடியா கூட தோனமாட்டேங்குதே. சரி விடு.. வழக்கமான அஸ்திரத்தையே எஸ் எம் எஸ் அனுப்பிட வேண்டியதுதான்.
ஒரு வ‌ழியா ரூம் போய் சேரும் போது ப‌தினோரு ம‌ணி ஆயிருச்சு.


டேய் என்ன‌டா எல்லாருமே லீவா? ஒரு ம‌ன‌ச‌னுக்கு ஒட‌ம்பு ச‌ரியில்லைன்னு சொன்ன‌ உட‌னே எல்லாருமே லீவு போட்டுட்டுட்டு பாத்துகிறீங்க‌ளே, அட‌டா இதுவ‌ன்றோ ந‌ட்பு என்றேன்.
சரி சரி புல்லரிச்சது போதும், மசமசன்னு நின்னுகிட்டே இருக்காம கார்த்திய ஆஸ்பத்திரி கூட்டி போய்ட்டு வா, நான் மத்த விஷயத்த ரெடி பன்றேன் என்றான் நண்பன்.
மத்த விஷயமா? அப்படின்னா?
அப்படின்னா ஒன்னும் இல்லை. எல்லாரும் லீவ் போட்டாச்சு, சும்மாவே இருந்தா போர் அடிக்குமில்ல?
அதுக்கு?
அதுக்குதான், தம்பிய அனுப்ச்சு வெச்சுருக்கேன் சிக்கன் வாங்கிட்டு வறதுக்கு. நீ என்ன பன்ற கார்த்திக்கு மருந்து வாங்கிட்டு அப்படியே பக்கத்துல இருக்கற டாஸ்மாக்குல மேன்சன் ஹவுஸ் 2 புல்லும், அவனுக்கு ஹாட் வேண்டாமாம் அதனால நாலு பீரு வாங்கிக்க. அவனால சாப்பிட முடியாது இரண்டு ஆப்பிள் வாங்கிக்க அப்பறம் ஒரு கிலோ திராட்சை வாங்கிக்க.
திராட்சை எதுக்குடா அவனுக்கு?
திராட்சை அவனுக்கு இல்ல. நம்ம சைடிஷ்க்கு. சரக்குக்கு(???)
காசு..?
காசா? என்கிட்ட எதுக்கு கேக்கற? இன்னிக்கு எல்லாமே கார்த்தி கணக்குதான், மருந்து பில்லோட சேர்த்து வாங்கிட்டு வா, கார்த்தி மெடிகிளைம் பன்னிகட்டும்.
என்னது மெடிக்கிளைமா? ம்.. சரி என்னவோ பன்னுங்க?
கார்த்தியை கூட்டி போய் ஊசி போட்டுக் கொண்டு, திராட்சை, ஆப்பிள், சரக்கு சகிதம் வந்திறங்கினேன். அதற்குள் சிக்கன் ரெடியாகியிருந்தது.


மாத்திரை முழுங்க‌னும் கொஞ்ச‌ம் சுடுத‌ண்ணி வெய்யுங்க‌டா...
அந்த‌ பாலை காய்ச்சுங்க‌டா, கொஞ்ச‌ம் ப‌ண்னாவ‌து சாப்ப‌ட‌றேன்... டேய் ச‌த்த‌ம் போடாதீங்க‌ என‌க்கு த‌லைவ‌லிக்குது...
டீவிய‌ நிறுத்துங்க‌டா.. காது வ‌லிக்குது...
ஃபேன் ஏன்டா போட்டீங்க‌? ரொம்ப‌ குளிருதுடா...

இப்படியெல்லாம் கார்த்தி உளரியது(??) எதவும் எங்கள் காதில் விழவேயில்லை. அப்போது நாங்கள் ஒரு ஃபுல்லை காலி செய்துவிட்டிருந்தோம்.

இப்போதெல்லாம் என்னவென்றே தெரியவில்லை ஒடம்பு சரியில்லையில்லையென்றாலும் கார்த்தி ஆபிஸ் போய் விடுகிறான்.

ஒடம்ப பாத்துக்கடா கார்த்தி
உயிர் நண்பன்


நவநீதன்..

Sunday, February 14, 2010

காதலர்தின இன்டர்வியூ

நாள் முழுக்க பைக்ல சென்னைய சுத்தறோம், சாயங்கலாம் படம் பார்க்கறோம், அப்படியே ஹோட்டல்ல ட்ரீட் முடிச்சுட்டு வறோம். இதுதான் Feb 14 ப்ளான். இந்த பிளானை நான் சொல்லியதிலிருந்து கவனிப்பே தனி. சின்ன விஷய்த்துக்கெல்லாம் லெப்ட் ரைட் வாங்கறவ இப்போ பெரிசா எதுனா கேனத்தனம் பன்னினா கூட Its so funny அப்படின்னு சொல்லற அளவுக்கு பெரிய லெவலுக்கு ஒர்கவுட் ஆயிபோச்சு பிளான்.

சரி சினிமா டிக்கெட்ட‌ பிரன்ட் அவுட் எடுக்கலாம்னு ப்ரௌசிங் சென்டர் போனப்ப அப்படியே மெயில் செக் பண்னலாம்னு மெயில் பாக்ஸ ஒப்பன் பன்னினா, Your resume has been shortlisted for the interview, interview date and Time is Fer 14 2010 , 10 AM அப்படின்னு ஒரு மெயில்.
என்னனு சொல்ல இந்த கொடுமைய? லைட்டா ப்ளாஷ்பேக் போய் பாக்கறேன்.


"இப்போ இந்திய பொருளாதத்த சீர்திருத்தர ரேஞ்சுக்கு பிளான் போட்டுட்டு ஏதாவது சொதப்புன? @#$?!`~#%@ செருப்பால‌யே அடிப்பேன்.

ச்சீ..ச்சீ.. என்னடி இப்படி கேவலமா திட்டற. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. சொன்னா சொன்னதுதான்"

வீர வசனத்துடன் பேசிய பிளாஷ்பேக்கை ஃப்ரீஸ் பன்னிவிட்டு மெயிலை பார்த்தேன்.
வேறு வழியேயில்லை,செருப்படி கன்ஃபாம் ஆயிடுச்சு. ம்.. மொதல்ல பொழப்ப பாக்கலாம், ஆஃப்ர் லட்டர கொண்டு போய் கையில குடுத்து சமாதானபடுத்தி படத்துக்கும், பார்டிக்கு மட்டும் போயி சமாளிச்சுகாலாம் என்ற என்னத்தில் இன்டர்வியுவிற்கு போய்விட்டேன். பத்து மணின்னு போட்டு இருக்கான் சரி எப்படியும் ஒரு 3 மணிக்கு முடிஞ்சுரும்னு பாத்தா, ஒரு முன்னூரு பேரு உக்கார்ந்து இருக்கான். என்னடா இது முன்னூரு பேரு வந்துருக்கானுங்களான்னு கேட்டா, இங்கதான் முன்னூரு பேரு, இன்னொரு ஹால்ல ஐநூறு பேரு இருக்காங்களாம்னு அவன் சொல்லும்போதே மனசு சொல்லுச்சு "வட போச்சேன்னு".


சரி ஆன‌து ஆச்சுன்னு நானும் உட்காந்து இருக்கேன்.. இருக்கேன்... இருக்கேன்..ம‌ணி அஞ்சு ஆச்சு. ரொம்ப‌ கூல‌ ஒருத்த‌ர் வ‌ந்து சொன்னாரு "ரொம்ப‌ கூட்ட‌ம் வ‌ந்துருச்சாம், அவிங்க‌ எதிர்பாக்க‌வே இல்லையாம், அத‌னால‌ நீங்கெல்லாம் நாளைக்கு காலையில‌ வ‌ந்துருங்க‌ன்னு சொன்ன அவ‌னை "உன‌க்கெல்லாம்ம் ஏழேழு ஜென்ம‌த்தும் பிக‌ரே செட் ஆவ‌ கூடாது அப்படியே ஆனாலும் கல்யாணம் ஆன‌ அன்னைக்கே நைட் சிப்ட் போட்டுறனும் என்று ச‌பித்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.

Friday, February 12, 2010

காகிதப் பூக்கள்

வாசனையில்லையென்றாலும்
வாடுவதில்லை
காகிதப் பூக்கள்

நவநீ..

Thursday, February 11, 2010

அம்மாவிற்கு

ஏன்டா போன் பன்னவேயில்லை என்பதற்கு
ஆபிஸ்ல வேலைமா என்று மட்டுமே
பதிலாய் சொல்லியதில் இருந்து
ஆபிஸ்ல ரொம்ப வேலையா என்று மட்டுமே கேட்க‌
ஆரம்பித்த என் அம்மாவிற்கு ஒதுக்க முடியாத ஒரு ஐந்து நிமிடத்தை
தேடிக் கொண்டிருக்கிறேன் எங்கே தொலைத்தேன் என்று!

திரைகடல் ஓடி

பாரதியார் சொல்லவில்லை எனக்கு
நன்பண் சொன்னான்
டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய் என்று.
வெளிநாடும் வேண்டாம்
டாலரும் வேண்டாம்
என்னுடன் இரு போதும்
அழுது கொண்டே சொன்னாள்.

இன்றோடாகிறது ஒரு வருடம்.
விமான நிலையத்தில் கடைசியாக
வாங்கிய முத்தம் கன்னத்தை
தடவுகையில் மனதை ஈரமாக்கியது.
இதோ வந்துவிட்டேன்
நூறடி தூரம்தான்
ஐந்து நிமிட சோதனை
ஒரு வருட தவிப்பை இரட்டிப்பாக்கியது.

ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
நூறு பேர் சுற்றியிருப்பதை
சட்டை செய்யாமல்.
பிரிந்த பொழுதைவிட இப்போது
அதிகம் அழுகிறாள்.

இம்முறை நான் ஆறுதலேதும்
சொல்லத்தேவையில்லை.


காதலுடன் நவநீ

Tuesday, February 9, 2010

வசந்தகாலம் (A Story of Typical Software Engineer)

நைட்டு 12 மணிக்கு போன போட்டு, தம்பி P1 issue வந்துருக்கு. அரை மணி நேரத்துல‌ ஆபிசுக்கு போன்னு ஆன்சைட் மேனேஜர் சொல்லுவாறு. அடிக்கற குளிர்ல எந்திரக்கவே முடியாது. அடிச்சு பிடிச்சு போறதுல கொஞ்சம் லேட்டானா கூட என்னப்பா P1 issue னு சொல்றேன் நீ பாட்டுக்கு இப்படி லேட்டா வர்றம்பார். அப்பறம் அன்னைக்கு இராத்திரி சிவராத்திரிதான்.
திருப்பியும் அடுத்த நாள் காலையில ஆபிஸ் போயாகனும். என்னடா பொழப்பு இப்படி இருக்கேன்னு சலிச்சுகிட்டே காலத்தை ஓட்டவேண்டிய சூழ்நிலை. ஏன்னா சாப்ட்வேர் கம்பெனியில இலையுதிர் காலம் அது. அட Recession Period தாங்க‌ அப்படி சொன்னேன்.

நானும் அப்ப‌டியே வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்தேன்.....இலையுதிர்காலம் போய் வசந்தகாலம் வந்திருந்தது.

ஒரு நாள் காலைல ஒரு பத்து பதினொன்னு இருக்கும். பாதி தூக்கத்துல இருக்கும்போது போன் அடிச்சுது. இந்த நேரத்துல எவன்டா போன் பன்றதுன்னு யோசிச்சுகிட்டே போர்வைய கூட வெளக்காம கைய மட்டும் வெளிய நீட்டி கைத்தடவல தலையனை பக்கத்துல இருந்த மொபைலை எடுத்து பார்த்தா மெனேஜர் காலிங்..னு வருது. தூக்கத்த கலைச்சுட்டாரேங்கற கடுப்புல கேட்டேன்.

என்ன‌ங்க இந்த நேரத்துல போன் பன்றீங்க?


இல்லப்பா மணி பதினொன்னு ஆச்சு.

என்னது பதினொன்னா? ஓ.. சரி சரி அதனாலென்ன? இன்னொரு பத்து நிமசத்துல வந்துட போறேன். அதுக்குள்ள ஏன் போன் எல்லாம் பன்றீங்க?

P1 issue வந்துருக்கு ஒரு அரை மணி நேரத்துல வரமுடியுமா?

இல்லைங்க. நைட்டு தூங்க லேட்டாயிடுச்சு. மினிமம் ஒரு மணி நேரமாவது ஆகும்.

ரொம்ப அர்ஜென்ட். கொஞ்சம் சீக்கிரமா வாப்பா.

ம்.. சரி சரி.. நான் வந்துடறேன் என்று சொல்லி விட்டு லைனை கட் செய்தவுடன் அடுத்த கால்.

என்னுயிர் நீதானே..உன்னுயிர் நான்தானே..

சொல்லுடி.
..........................
நான் இன்னைக்கு ஃப்ரிதான். ‍‍
..........................
ஐய்யோ...‍‍‍ஒன்னும் வேலை இல்ல.
..........................

மாயாஜாலா? ஓகே. நீ ரெடியாகு ப‌த்தாவ‌து நிமிச‌ம் ஹாஸ்ட‌ல் முன்னாடி நிப்பேன் சரியா?
என்ன‌டா எங்க‌ கெளம்பிட்டா? ரூம் மெட் கேட்டான். இல்லடா ரொம்ப‌ போர‌டிக்குது ப‌ட‌த்துக்கு கூட்டி போடான்னு சொன்னா அதான்.

அப்ப‌ ஆபிசு?
Cant come today. Not feeling well னு உங்கிட்ட பேசிகிட்டே இப்பதான் மேனேஜ‌ருக்கு மெசேஜ் அனுப்பினேன்.


அவ‌னுக்கு தெரியும் நேத்து வேறு கம்பெனியில் 100% hikeல் ஒரு ஆஃப்ர் வாங்கியது.

Friday, January 1, 2010

இது சம்பரதாயம்தான்

இது சம்பரதாயம்தான்.

எனக்கு எப்பவுமே பார்வேட் மெயிலே வராது. தப்பித்தவறி வர ஒன்னு இரண்டும் Spam mailஆ இருக்கும். (பல முறை அமுல்படுத்திய 1 மெயில் 1 ரூபாய் திட்டம் வொர்க்வுட் ஆகி, பேங்க் பேல்ன்ஸ் காலியான கதை வேறுவிஷயம்.(என்ன பேங்க் பேலன்ஸ் ஒரு நூறு இருநூறு ரூபா மாசத்தோட அஞ்சாம்தேதியன்னைக்கு இருக்கும். அத நாலாம்தேதியே காலியாவறது ஒரு பெரிய விஷயமா? ஏதோ பேங்க் திவாலான மாதிரி பேசறா?)

ஆனா இன்னைக்குன்னு பார்ததா ஒரே மெயிலா குவியுது. சொன்ன மாதிரியே எல்லாம் ஒரே மெயில்தான். "Wish you happy new year 2010" தினுசு தினுசா அனுப்பறாய்க. அப்ளிகேசன்ல கோடடிக்க சொன்னா கூகிள்ல தேடறது.ஆனா இதுக்கு மட்டும் அஞ்சாறு for loop, நாலஞ்சு if , இரண்டு மூனு while, மானே, தேனேன்னு போட்டு (இதையும் நெட்ல தான் சுட்டுறுப்பாங்களோ) சும்மா டெரரா வாழ்த்து அனுப்புறாங்க. Select * from tablename மட்டுமே தெரிஞ்ச பய எல்லாம் இரண்டு பக்கத்துக்கு SQL PROCEDURE ல வாழ்த்து அனுப்பறான். அதுல நடுவுல நடுவுல Insert, update, alter, revoke னு வேற போட்டு ஒரு பந்தா வேற‌.

நானும் அப்படியே யோசிச்சு பாக்கறேன். எப்படி இருந்தது இந்த 2009ன்னு.
2008 localization ப்ராஜெக்ட்ல இருந்தேன். டிசம்பர் 15ம் தேதி ரிலீஸ் முடிஞ்சு வேலையில்லாமா ஜாலியா ஆரம்பிச்சது 2009 நியு இயர்.
ஜனவரி 10, 15ம் வாக்குல ப்ராஜெக்ட் ஊத்தி மூடிட்டதா சொன்னாங்க. அப்படியே ஒரு இரண்டு மாசம் பென்ஞ்சுல இருந்தேன்.( அப்போதான் அதிகமா போஸ்ட் போட ஆரம்பிச்சேன். ஆபிஸ்லயும் ப்ளாக்கையே நோண்டிகிட்டு திரிஞ்சேன்.)
மார்ச் வாக்குல இப்போ இருக்கற ப்ராஜெக்டுக்கு வந்ததுல எல்லாமே மாறுச்சு. மேனேஜர், நன்பர்கள், ரூம்னு கிட்டத்தட்ட எல்லாமே மாறிடுச்சு. கண்மூடி திறந்துபாத்தா மறுபடியும் நியு இயர் வந்துருச்சு.

இந்த நியுஇயர் எப்பவுமே இப்படித்தான் வருஷத்துக்கு ஒரு தடவ வந்துகிட்டேதான் இருக்கு. நானும் அப்படியேதான் எப்பவும் போல சம்பரதாயமாக ஒரு பார்வேட் மெயில தட்டிவிட்டுட்டு வேற வேலைய பாக்க போயிடுறேன்.

இயந்திர வாழ்க்கையில் சிக்கி சுழலலும் கிராமத்து கிளியாகிவிட்டேன் நானும்.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்

நவநீதன்

http://nascle.tk/

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP