Friday, November 4, 2011

குழந்தைத்தனமா? புத்திசாலிதனமா?



குழந்தைகளோ இல்ல சின்ன பசங்களோ பன்ற சில விஷயங்கள் நமக்கு ஆச்சர்யமா இருக்கும். எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்குதுங்கற வியப்படைஞ்ச நிகழ்ச்சி எல்லொருக்கும் இருக்கும். அதுல ஒன்னுதான் இது.

எங்க பக்கத்துவீட்டு பசங்க, பெரியவன் அபி 10 வயசு, சின்ன பையன் நிஷி 6 வயசு. நான் வீட்ல எப்பவுமே சும்மா இருந்தாலும் அவனுங்க பிஸியா இல்லாயாத சமயம் அவனுங்களுக்கு நானும் எனக்கு அவனுங்களும் பொழுதுபோக்கு.
அன்னிக்கும் அப்படிதான் அவனுங்களோட சேர்ந்து சுட்டி டீவி பாத்துகிட்டு இருந்தேன். இதப்பாத்த எங்கப்பா எல்லோருட அப்பா மாதிரியே
சுட்டி டீவி பாக்கற வயசான்னு திட்ட ஆரம்பிச்சார்.
நானும் இதுதான் சாக்குன்னு, டேய் சுட்டி டீவி பாத்த தாத்தா  திட்டுவார்னு சொன்னேன்ல, சேனல மாத்துடான்னு அபி கையல இருந்த ரிமோட்ட புடுங்க, அவன் கத்த ஆரம்பிச்சதுல டென்சனான எங்கப்பா,
25 வயசு ஆச்சு இன்னும் பொறுப்புவரலை, #%#%3, #%#% அப்படின்னு திட்டிகிட்டு இருக்க....

அபி என்ன நெனைச்சானோ, ஒடனே அவங்க அம்மாகிட்ட ' அம்மா, எனக்கு எத்தன வயசுன்னு கேக்க, அவங்க 'பத்து வயசுடான்னு சொன்னாங்க.

இதெல்லாம் ஒத்த கன்னுல பாத்துகிட்டே விளையாடிட்டு இருந்த நிஷி வேகமா அவங்கஅம்மாகிட்ட ஓடி வந்து
'அம்மா, எனக்கு எத்தன வயசுன்னு கேக்க, அவங்களும் சாதரனமா உனக்கு 6 வயசுன்னு சொன்னவொடனே கீழபடுத்து பெறன்டுகிட்டு கத்துறான் கத்துறான் கத்திகிட்டே இருக்கான், ,
டேய்..ஏன்டா என்னடா ஆச்சுன்னா?
அபிக்கு மட்டும் 10 வயசு, எனக்கு மட்டும் 6 வயசுதானான்னு கத்துறான்.

டாய்..சின்ன வயசுல இந்தமாதிரியெல்லாம் ஐன்ஸ்டீன் கூட யோசிச்சிருக்கமாட்டாருடா சாமின்னு யோசிகிட்டே எங்கப்பாவ பாத்தா,

சின்ன பையன் என்னமா யோசிக்கிறான் நீயெல்லாம்.... இன்னும் என்னெல்லாம் யோசிச்சாரோ..நான் சுட்டி டிவில பிஸியாயிட்டேன்.

Monday, October 24, 2011

பட்டாசு


எவ்வளவு இருந்தாலும் நிறைவடையாது மனம்
காதலுக்கு அடுத்தபடியாய்
பட்டாசு

பட்டாசு



LIC மட்டுமல்ல பட்டாசும்தான்
வாழும்போதும் வாழ்ந்த பின்னும்

தீபாவளி


பட்டாசு வெடிக்கும் பொது ஆகும்
தீ காயங்கள் மட்டும்
வலிப்பதே யில்லை

Sunday, July 17, 2011

கெமிஸ்ட்ரி சார்.

அப்ப நான் பணிரெண்டாவது படிச்சுகிட்டு இருந்தேன். காலாண்டு பரிட்ச சமயத்துல கெமிஸ்ட்ரி சார் புரோமோஷன்ல மாத்தலாகி வேற பள்ளிகூடத்துக்கு போய்ட்டாரு.
நாங்க எல்லாம் டாக்டர் இஞ்சினியர் ஆகற இலட்சியம் கெமிஸ்ட்ரிக்கு வாத்தியார் இல்லாததாலதான் நடக்கலன்னு வரலாறு பேசிடுமோன்னு, கெமிஸ்ட்ரி வாத்தியார் உடனே வேனுமுன்னு எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாவட்ட கல்வி அதிகாரி அங்க இங்கன்னு என்னென்னவோ பன்னினார். ஆனா, ஒன்னுமே வேலைக்காகல. கடைசியா பெற்றோர் ஆசிரியர் கலகம் மூலம ஒருத்தர தற்காலிகம வேலைக்கு சேர்த்தாங்க. 


அப்படி வந்தவர்தான் இந்த கெமிஸ்டிரி சார். நீட்டா அயர்ன் பண்னின சட்டை பேண்ட், அதிலயும் டக் இன் பண்ணாம வரமாட்டார். 45 நிமிஷம் கிளாஸ்ல சரியா 40நிமிஷம் நடத்துவார். 
அவர் புத்தகத்த பாத்து நடத்துனத நான் பாத்ததே இல்லை. குரொமியம் பிரித்தெடுத்தல்னு நடத்த ஆரம்பிச்சார்னா அதோட பண்புகள் 14ம் வரிசையா வந்துகிட்டெ இருக்கும். எல்லா ஈக்வேஷனையும் பேலன்ஸ் பண்ணிதான் எழுதுவார். அவ்ளோ அருமையா நடத்துவார். 


வெறும் 1500 அவரோட மாச சம்பளம். சும்மா பேருத்து ஒப்பேத்தற கவர்மெண்ட் வாத்தியருங்க சம்பள்ம் 20000க்கும் வேல. அவங்களவிட நூறு பங்கு அதிக அக்கறையா நடத்துவார்.


அப்படியே பன்னிரண்டாம் வகுப்பு முடிஞ்சு காலேஜ்காக வேற ஊர் போனதுல எங்க ஊருக்கே இரண்டு மாசதுக்கு  ஒரு தடவதான் போவேன். அப்பறம் எல்லாமே மாறிபோச்சு. காலேஜ்ல புதிய ஆசிரியர்கள், புதிய நண்பர் வட்டம்னு பள்ளிகூட அனுபவத்தை சுத்தமா மறந்துட்டேன். 


கொஞ்சநாள் முன்னாடி பள்ளிகூட நண்பன் அடுத்தவாரம் கல்யானம்டா, கூட படிச்ச பசங்க எல்லார்த்தையும் கூப்புட்டு இருக்கேன், நீயும் கட்டாயம் வாடான்னு  போன் பன்னினான். டேய் எல்லா வாத்தியாருக்கும் 
பத்திரிக்கை குடுத்திருக்கேன் எல்லாம் கண்டிப்பாக வருவாங்க என்றபோது கல்யானதுக்கு போகனும்கிறதவிட கெமிஸ்ட்ர் சார பாக்கனுங்கற ஆர்வம்தான் அதிகமா இருந்துச்சு.


+2 முடிச்சு பத்து வருஷம் ஆகுது. என்னதான் ஆறு ஏழு கிலொமீட்டர்தூரத்துல பசங்க இருந்தாலும் யாரயும் பெருச சந்திக்கமுடியல. 


கல்யானுத்துக்கு போயிருந்தேன்.


டேய் ஆலே மாறிட்டடா. நல்லாயிருக்கியாடா? டேய் பிஸிக்ஸ் சாரு என்னடா தலையெல்லாம் நரைச்சுடுச்சு. ரொம்ம மாறிட்டாருடா. விதவிதமான விசாரிப்புகள். பத்து வருட இடைவெளி எல்லாவற்றையும் மாற்றி இருந்தது. 


கெமிஸ்ட்ரி சார் வரலையாடா?
அதோ அங்க இருக்கார்டா. 
ஓ. இரு ஒரு வார்த்த பேசிட்டு வந்தர்றேன்.


சார், எப்படி சார் இருக்கீங்க். எல்லாம் மாறீட்டாங்க சார். நீங்க மட்டும் அப்படியே இருக்கீங்க சார்.
வாப்பா எப்படி இருக்க. நீ கூட அப்படியேதான் இருக்க. அப்பறம் நீ. என்ன பன்னிகிட்டு இருக்க. 
சென்ன்னைல வொர்க் பன்னிட்டு இருக்கேன் சார்.
உங்க பேட்ஜ் பசங்க எல்லாமே இன்னைக்கு நல்ல வேலைக்கு போயிட்டீங்கடா. ரொம்ப சந்தோஷம்டா.


சார் நீங்க எங்கீங் சார் இருக்கீங்க இப்போ. நம்ம ஸ்கூல்லயா இருக்கீங்க.


இல்லடா. உங்க பேட்ஜ் முடிஞ்ச உடனே கவர்மெண்ட்ல இருந்தே கெஸ்ட்ரிக்கு ஆள் போட்டுடாங்க. அதனால என்ன நிறுத்திட்டாங்க. நான் இங்க டுயூசன் செண்டர்ல கொஞ்ச நாள் வொர்க் பன்னினேன். சம்பளம் 


கட்டுபடியாகலடா. 2000 சம்பளத்துல என்ன பண்ண முடியும். 
சார் சர்வீஷ் கமிஷன் எழுதி கவர்மெண்ட் போஸ்டிங் ட்ரை பன்னலாமில்லிங் சார்.
ஒன்னும் வேலைக்ககலடா, எல்லாம் பணம்தான், மெரிட்னால 4 லட்சம் கேக்கறான் போஸ்டிங் போட. என்னத்த எக்ஸாம் எழுதி என்ன செய்ய. 
இப்போ டாஸ்மாக்ல ஏரியா மேனேஜர இருக்கேண்டா. இதுக்கும் பணம்தான். ஒரு இலட்சம் வட்டிக்கு வாங்கிதான் சேர்ந்தேன். 5 ஆயிரம் குடுக்கறான். ஏதோ பொழப்பு ஓடுது.


சார் என்ன சார் நீங்க. உங்க டேலண்டுக்கு நீங்க போயி டாஸ்மாக்ல, ஏன் சார் நீங்க?


டேலண்டா? இங்க எல்லாமே பணம்தாம்பா. 2000 சம்பளத்துல இருந்ததவிட 5000 சம்பளம் வாங்கும்போது நான் வளந்துட்டதா மத்தவங்க நெனைக்கறாங்க. நான் என்ன செய்ய முடியும்? 2000 ரூ சம்பளத்துல பாடம் சொல்லிகுடுத்த மனதிருப்தி 5000 சம்பளம் வாங்கும்போது இல்லதான். இதெல்லாம் வீட்டுவாடகை கொடுக்கும்போது யோசிக்கமுடியலைடா.


உன்மைதான், இங்கே வெற்றி என்பது பணத்தை கொண்டு மட்டுமே நிர்ணியக்கப்படுதில் Job satisfaction என்பதில் அர்த்தமில்லைதான்.

Wednesday, March 23, 2011

நளனுக்கு முன், பின் மற்றும் நடுவில்(ந.மு, ந.பி, ந.ந)

நமக்கு பொதுவா யாரும் கால் பண்ணமாட்டாங்க. தப்பி தவறி வந்ததுன்னா அது பில்லு கட்ட சொல்லி அழகான ஜப்பான்காரியாதான் இருக்கும்.(கஸ்டமர் கேர்னாலே அழகா இருப்பாங்க அப்படிங்கறதுதான் யுனிவர்சல் ரூல் ஆச்சே.) இந்தியா நம்பர். யாருடா புதுசா இருக்கேனு யோசிச்சிகிட்டே எடுத்து மொசி மொசி அப்படின்னேன்.(Japanese people will say "moshi  moshi" instead of hello when answering the phone.) சம்பந்தமேயில்லாம இது என்ன விளம்பரம். சரி விடுங்க. கம்மிங் டு த பாயிண்ட்.

ஹலோ..
நான் நளன் பேசறன்.
ம்..சொல்லுங்க.
எப்படிடா இருக்க?
என்னது டாவா? ஹலோ யாரு வேனும் உங்களுக்கு.
டாய் நான் நளன் பேசறேண்டா. தெரியலை?
எனக்கு நளன்னு யாரையும் தெரியாதுங்க. ராங் நம்பருங்க.
டேய் நான் செல்வா பேசறேண்டா.
எந்த செல்வா?
டேய், நான் பார்ட்னர் பேசறண்ட பார்ட்னர். (கொஞ்சம் கொழ்ப்பறமாதிரி இருந்த இந்த லைனை இரண்டு தடவ படிங்க. என்ன ஒரு வில்லத்தனம்.)
டேய் இதுக்கு முன்னால யாரு நளன்னு பேசுனாங்களே. யார்ரா உன் பிரண்டா?
நாந்தாண்டா பேசுனேன்.
எது நீயா? நளன் கிளன்னு சொன்னாங்க.
நாந்தாண்டா அது.

எது நீயா?
ஆமா செல்வ குமாருங்கற பேருக்கும் பிபாஷா பாஷுங்கற பேருக்கும் பேர் பொருத்தம் சரி இல்லன்னு ஜான் ஆப்ரகாம் என் கனவுல குடு குடுப்பைகாரன் மாதிரி வந்து சொன்னதுலருந்துதான். விடியகாலை கனவு பலிக்கும்கறதாலதான் பேர மாத்திகிட்டேன். இது ஐஸ்வர்யா ராய்க்கு கூட சந்தோஷம்தான். ரஜினிகூட வாழ்த்து சொன்னாரு.

என்னடா இது லாஜிக்கே இல்லாமா இருக்கேடா?. ஜப்பான்ல அனு உலை வெடிச்சதுக்கு சென்னைல ஆசிட் மழைபெய்யும் சொன்ன மாதிரில்லடா இருக்கு.

பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயாகூடாதுன்னு ஆர்யா( ஒரு ஃப்லோகாக கமல், ஆர்யாவாக) சொன்ன மாதிரி பேரை மாத்திகிட்டேன்.

எது பழமொழியா? பேரை மாத்தனுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? சரி விடு. இப்ப இனிமே நளன்னே கூப்பிடுறேன். ஆமா பெயர் சூட்டுவிழா(உன்னையவே மொதல்ல சுட்டு தள்ளனும்.) எல்லாம் இல்லையா?

இருக்கு நாளைக்கு தீவுத்திடல்ல. எழுத்தாளர்கள், பிளாக்கர்ஸ், சாரு, ஜெயமோகன், யுகபாரதி, எஸ்.இராமகிருஷ்ணன் எல்லாம் வராங்க.

ஆஹா இப்பதாண்டா தெரியுது நீ ஏன் பேர் மாத்துனன்னு.

Moral of the Story(MOS): 
எது? என்ன கதையா சொல்லிகிட்டு இருக்கேன். இப்பஎல்லாம் FWD மெசெஜ்லயும் MOSகேக்கறாங்க, இன்பர்மேஷன் குடுத்தாலும் MOS கேக்குறாங்க. ட்ரெண்ட் அப்படி. சரி விடுங்க நாம ஏன் அதெல்லாம் மாத்திகிட்டு. அப்புறம் கலாச்சாரத்த மதிக்கல அப்படி இப்படின்னு இந்த அரசியல்வாதிங்க எதுனா தீர்மானம் அது இதுன்னு... சரி விடுங்க அத.

அன்பார்ந்த நண்பர் நண்பர்களே, தோழர் தோழிகளே, தம்பி, தங்கைகளே, அண்ணன் அக்காக்களே, காதலன் காதலிகளே, பாட்டன்களே, முப்பாட்டன், கொள்ளுபாட்டன் பாட்டிகளே, போன வாரம் பூமிக்கு வந்த சின்ன கஜா உட்பட எல்லோருக்கும் வணக்கும்.

இதனால பாகல்பட்டில இருக்கற சுத்துபட்டில இருக்குற ஒரு நாலு பேரு, மஹெந்திர காலெஜ்ல படிச்சவங்க, குமரன் சில்க்ஸ் ஸாரி சிஸ்டத்துல இருந்தவங்க, டாஸ்மாக்ல சேர்ந்து குடிச்சவங்க, காக்னிசண்ட்ல இருக்குறவங்க, பீச்சுல சுண்டல் விக்கறவங்க (பல நூல் வெளியீட்டுவிழா அங்கதான நடக்குது), orkut, facebook ல பேருக்கு ப்ரண்ட் லிஸ்ல இருக்கறவங்க, உயிர் நண்பருங்க, கடன்காரங்க, சொந்தகாரங்க, (கடன் குடுத்தவங்க நல்ல நோட் பன்னிகோங்கப்பா) சேலத்துல இருக்கும் தோழர்கள், அப்பறம் பூனாலயும் சைனாலயும் இருக்கும் மக்கள், சைதைல இருக்கும் நண்பர்கள், ஒபாம மற்றும் ஒசாம உட்பட எல்லோருக்கும் தெரிவிக்கறது என்னன்னா....

செல்வகுமார் என்றழைக்கப்பட்ட நமது பார்டனர் இனிமேல் நளன் என்று தனது பெயரை மாற்றிவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
(பேர் சொல்லி கூப்படாம பல கெட்ட வார்த்தைகளை கொண்டு நீங்கள் கூப்பிட்ருக்கும் பட்சத்தில் இந்த பெயர் மாற்றம் உங்களை பாதிக்காது. எந்த மாற்றமும் இல்லாமல் அதே கெட்ட வார்த்தை(களை) தொடர்ந்து பயன்படுத்தலாம். Backward compatability Till EOL.)

அன்புடன்
மனுநீதி சோழன்( நானும் பேர் மாத்திகிட்டேன்.)
(Ex.நவநீதன்)

Sunday, February 27, 2011

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்று சாதனை 200*


சச்சின் டெண்டுல்கர் 200* கிரிக்கெட் வரலாற்று சாதனை


தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் குவித்து கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு நாள் போட்டியில் இரட்டை சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மொத்தம் 147 பந்துகளில் 200 ரன்கள்(25 fours, 3 sixes) குவித்தார்.
மேலும் தகவலுக்கு:

சச்சின் புஃரோபைல் Cricnfo

சச்சின் இன் விக்கீபீடியா

ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்.


PlayerRunsBalls4s6sSRTeamOppositionMatch Date
SR Tendulkar200*147253136.05Indiav South Africa24-Feb-10
CK Coventry194*156167124.35Zimbabwev Bangladesh16-Aug-09
Saeed Anwar194146225132.87Pakistanv India21-May-97
IVA Richards189*170215111.17West Indiesv England31-May-84
ST Jayasuriya189161214117.39Sri Lankav India29-Oct-00
G Kirsten188*159134118.23South Africav U.A.E.16-Feb-96
SR Tendulkar186*150203124Indiav New Zealand8-Nov-99
MS Dhoni183*1451510126.2Indiav Sri Lanka31-Oct-05
SC Ganguly183158177115.82Indiav Sri Lanka26-May-99

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP