Wednesday, May 27, 2009

மதுரைக்கு போகாதேடி...

இரவு 10.30 மணி. அவசர அவசரமா பஸ்ஸ விட்டு இறங்கி, பக்கத்துல நல்ல லாட்ஜ் எதுப்பா அப்படின்னு விசாரிச்ச இடம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டேன்டு. எதுத்தாப்புல இருந்த ஒரு லாட்ஜ்க்கு போய் ரூம் கேட்டா, "முகூர்த்த நாள் சார் எல்லா ரூமும் புக்காயிடுச்சி. வேனுமுன்னா 3 பெட்ரூம் ரூம் ஒன்னு காலியாவுது வாடகை 700 ரூபா சார்". ரூம் வேண்டாங்க நாங்க பஸ் ஸ்டேண்டுலேயே ஒரு ஓரமா படுத்து தூங்கிக்கிறோம்னு சொல்ல போறதில்லைன்னு அவனுக்கும் தெரிந்ததன் விளைவு அது.

"சார், கார்டு எல்லாம் வாங்கறது இல்லைங்க, பணமா குடுங்கன்"னு ஓவர் கொடைச்சல் பன்றான் லாட்ஜ்காரன்., நம்ம நல்ல(??) நேரம் ஏடிம்ல பணம் இல்ல. ஆளுக்கு நூறு இருநூறுன்னு போட்டு ஒரு வழியா பணத்த கட்டி, சாவிய வாங்கிட்டு ரூமுக்கு போய், அப்பாடா, அப்படின்னு படுத்தா பசி வயித்த கிள்ளுது, மணி 11 ஆயிருச்சு. ரிஷப்சனுக்கு போன் போட்டு "சார் டின்னர் வேணும் கொஞ்சம் ஆர்டர் எடுத்துக்க முடியுமான்னு?" கேட்டா, "சர்வீஸ் 11 மணியோட குளோஸ் சார்"னு லைன கட் பண்னிட்டான். என்னடா இது வம்பா போச்சுன்னு, சரி எப்படியும் பஸ் ஸ்டேண்டுல ஒரு ஓட்டலாவது இருக்கும்னு போயி நோட்டம் விட்டா, ஒன்னத்தையும் காணோம். சரி பச்ச தண்ணிய பல்லுல படாம குடிச்சிட்டு துங்கறத தவிற‌ வேற வழியில்லைன்னு பொலம்பிக்கிட்டே திரும்பர சமயம், ஒருத்தன் மட்டும் ஏதோ சட்டிய உருட்டிகிட்டு இருக்கான். அப்பாடான்னு நிம்மதி பெருமூச்சி விட்டிக்கிட்டே ஓடி போய், அண்ணே! 10 பரோட்டா, 3 ஆம்லெட், 3 புல்பாயில் பார்சல் பண்ண சொல்லிட்டு நாலு வார்த்த பேசரத்துக்குள்ள "சார் பார்சல் ரெடிங்கறான்".
அடடா என்ன வேகம்னு அவன புகழ்ந்துகிட்டு, எவ்ளோங்கன்னு கேட்டுக்கிட்டே ஒரு 50 ரூபா நோட்ட எடுத்து கொடுத்தேன்.
"180 ரூபா குடுங்க"ன்னு கடைக்காரன் சொன்ன உடனே எனக்கு தல கிர்ருன்னு சுத்த ஆரம்பிச்சுடுச்சு.
என்னது? 180 ரூவாயா? எப்படி?ன்னு அரமயக்கத்துலேயே கேட்டேன். "பரோட்டா ஒன்னு 10 ரூபா, ஆம்லெட் ஒன்னு 20 ரூபா'ங்கறான்.

*அடப்பாவிகளா! இதுக்கு பேசாம கத்திய காட்டியே பணம் புடுங்களான்டா?

*டேய், இது என்ன மதுரையா இல்ல அமெரிக்கவா?

*அந்த பரோட்டாவுக்கு மூன்றுவா குடுத்தாலே லூசுப்பயன்னு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். பத்து ரூபா குடுத்த என்ன எந்த வகையறாவுல சேத்தறதுன்னு எனக்கு தெரியல.

*ஆமா, ஆம்லெட் என்ன கோழி முட்டையில் போட்டியியா? இல்ல குதிர முட்டையில போட்டியா?

*உலகத்திலேயே காஸ்ட்லியான் ஆம்லெட் கிடைக்கும்னு போர்டு போட்டுக்க?


இந்த மாதிரி ஒரு ஆயிரம் கேள்விய எனக்கு நானே கேட்டு பதில் சொல்லிகிட்டேன்.

என்னங்க 20 ரூபாயா ஆம்லெட்? அநியாங்க! அப்படின்னு நான் சத்தம் போடாமா மெதுவா கேட்டதுக்கே மொறக்க ஆரம்பிச்சிட்டான் கடைக்காரன்.

நாமளும் ஊருக்கு புதுசு, இராத்திரி நேரம், ஏற்கனவே வாய்கொழுப்புக்கு
வாங்கி கட்டியது நியாபகத்துக்கு வற, காச குடுத்திடுடான்னு நண்பன்கிட்ட சொன்னேன்.
"என்னது காசா? லாட்ஜ்க்கே அஞ்சு பத்த பொறுக்கிதான் குடுத்தேன். எங்கிட்ட ஏது காசு"ன்னு திகில் ஏத்தறான். "டேய்! இருக்கறத எடுங்கடா"ன்னு, சில்லரைய பொறுக்கி ஒரு 180 தேத்தி குடுத்திட்டிருக்கும்போது ரேடியோல பாடின பாட்டு " மதுரைக்கு போகாதேடி.....

அதே பஸ் ஸ்டேண்டில் விசாரித்த போது அவர்கள் சொன்ன விலை பரோட்டா 3ரூபாய், ஆம்லெட் 5 ரூபாய்.

"ஏமாற்றி விட்டானே, என்ற‌ வேத‌னையை விட‌,அவ‌னை ஒன்றும் செய்ய‌ முடிய‌வில்லையே என்ற‌ இய‌லாமையைவிட‌, இவ்வ‌ள‌வு தைரிய‌மாக‌ ஏமாற்றும் அள‌விற்கு நாச‌ம் அடைந்துவிட்டதே இந்த‌ சமூகம் என்று நினைக்கும் போதுதான், வேத‌னையானது என் ம‌ன‌ம்."

அ ன் பு ட ன் நவநீதன்.

கவுன்டமணி செந்திலும் ஸ்லம்டாக் மில்லியனரும்

டேய்!, நாளைக்கு படத்துக்கு போலாம் கொஞசம் சீக்கரம வா, இங்கிலீஷ் படம் எதுக்கும் டிக்க்ஷ்னரிய தேடி எடுத்து வைய்யி தேவைப்படும். அப்படியே டெரரா ஒரு நிமிஷம் பார்த்துட்டு, "என்ன? திடீர்னு இங்கிலீஷ் படமெல்லாம்?". ரூம்மெட் கேட்ட கேள்வி நம்மல அசிங்கப்படுத்தினாலும் ஒன்னுமே நடக்காத மாதிரி, " யூ நோ த மூவி ஸ்லம்டாக் மில்லியனர்னு" கேட்ட கேள்விக்கு நாலஞ்சு கெட்ட வார்த்ததான் பதிலா வந்துச்சு.

என்னதான் நான் இங்கிலீஷ் படம் பார்த்தாலும், படம் பார்க்காம கீழ ஓடுற சப் டைட்டிலதான் படிச்சிக்கிட்டு இருப்பேன்கிற மேட்டரு எப்படியோ கசிஞ்சிருச்சிங்கற விஷயம் என்னனு விசாரனை கமிஷன் வெச்சு விசாரிச்சப்பதான் தெரிஞ்சுது,போன தடவ‌ இரண்டு டீஸ்பூன் சரக்கு அதிகமா குடிச்சதன் விளைவுன்னு (குடி பழக்கம் உடல் நலத்திற்க்கு தீங்கானது.) ( என்னது நக்கலா? அப்படியெல்லாம் இல்லீங்க. இந்த பதிவ பார்த்துட்டுதான் சரக்கடிக்க ஆரம்பிச்சேன்னு சொன்னா என்ன பன்றதுன்னுதான் இப்படி ஒரு எச்சரிக்கை.)

நீ வரலைன்னா நான் படம் பார்க்க முடியாதா? இல்ல, தியேட்டர் போக வழி தெரியாதா? நான் தனியாவே போறன்டான்னு நான் சொல்லறது வெறும் வாய் சவடால்தான்னு அவனுக்கும் தெறியும். ஒரு வழிய படம் பார்த்தேன் ( எப்படின்னு கேக்காதீங்கோ. டோரன்ட், லைம்வையர், பற்றியெல்லாம் எனக்கு தெறியாது. திருட்டு விடீயோவ ஒழிச்சிடாங்களாமே உன்மையா?)

கவிதை போலிருந்தது படம்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சப் டைட்டிலுக்கெல்லாம் வேலையில்லை(இங்கேயுமா?). என்க்கும் புரிந்ததென்று நான் சொல்வதை ரூம்மேட் நம்பாதது என் மன்ஸ்க்கு கஷ்டமா இருந்தாலும் ஆச்சர்யமாயில்லை. "உனக்கு என்மீது நம்பிக்கையில்லையென்றால் என்னை நீ சோதித்து பாரேன்! உனக்கு புரிந்திருந்தால்" என திருவிளையாடல் டயலாக்கை எடுத்துவிட்டேன்.

கடுப்பான நன்பண் கேட்ட கேள்வி, " ஜமால ஏன் போலீஸ் கைது செஞ்சாங்க?"ன்னு சொல்லு.

ஒரு படத்தில் செந்தில் கவுண்டரிடம் கேட்கும் கேள்விக்கு கவுண்டர் சொல்லும் பதில்தான் மேலே கேட்ட கேள்விக்கு பதிலும்.

அண்ணே! இது, தேங்காய், பழுத்த என்னவாகும்?.


"கழுத மேக்கற பயனுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமடா"


அ ன் பு ட ன் நவநீதன்.

குழப்பம் அவளுக்கு

என்னையே சுற்றிக் கொண்டிருக்க
ஒரு சொடுக்கிற்கு ஓடி வர
ஒரு ஜீவன் வேண்டும்.
குழப்பத்தில் இருக்கிறாள் அவள்
நாய் வளர்க்கலாமா? அல்லது
காதலிக்கலமா? என்று.

காதலுடன் நவநீதன்.

கள்வனின் காதலி

இது காதல் க‌ல்யாணம் அல்ல‌! காதலின் க‌ல்யாணம்

திருமணம் முடிக்க‌லாமென்றிருக்கிறேன்
நீ சம்மதித்தால் ‍- உன் தங்கையை.


இவன் கிராம‌த்தான்

இது ரீமிக்ஸ்(காப்பி) கவிதை

நான் விரும்பிய அனைத்தும்
தோல்வியில்தான் உள்ளது.
அன்று டெவலப்மென்ட்!
இன்று ஆன்சைட்!!


இவன் கிராம‌த்தான்.

Sunday, May 24, 2009

கம்ப்யூட்டரை அழித்து விடுங்களேன், ப்ளீஸ்.....

கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லை காணோம்!! வயசு
வித்தியாசம் இல்லாம, படிச்சவன் படிக்காதவன்கிற பேதம் இல்லாம எல்லாம்
சொல்லற ஒரு பழமொழி. அப்படி எல்லாரும் சொல்லும்போது நான் பண்ணாத நக்கலும்
இல்ல, அடிக்காத கிண்டலும் இல்ல. நாயை அடிக்கனும்னா நாலு கல்ல பாக்கெட்ல
வச்சுக்க, கல்லு அடிக்கனும்னா ஒயின் ஷாப்புக்கு போகாம கள்ளுக்கடைக்கு
பொன்னு ஏகத்துக்கும் எகத்தாளம் பேசுவோம்.(பன்மையில பேச காரணம், நாலு பேரு
என்கூட இருக்காங்க அப்படிங்கிறத காமிக்கத்தான்). (டேய் நாங்க உன்கூட
இருக்கமா? இல்ல, நீ என்கூட இருக்கயா? அப்படிங்கிற சண்டை இஸ்ரேல் பாலஸ்தீன
சண்டையவிட தீவிரம நடந்துக்கிட்டு இருக்கு எங்க ரூம்ல.)
நான் கல்லூரி படிச்சிக்கிட்டு(போய்கிட்டு/வந்
துகிட்டு) இருக்கும் போது,
பொதுவா பாட புத்தகத்த தவிர எல்லா புத்தகத்தையும் பாட புத்தகத்து நடுவுல
வச்சி படிச்சிகிட்டு இருப்பேன்.(கதை புஸ்தகம் படிச்சாலும் பாட புத்தகத்த
மறக்காத இவன் ரொம்ப நல்லவன்டான்னு நெனைச்ச சரஸ்வதிதேவியின் அருளாலதான்
நான் ஆல் கிளியர் ஆனேன் என்று இப்போதும் நினைத்துக்கொள்வது உண்டு). (என்
முன்னால உக்காந்து பரிச்சை எழுதின பொன்னு பேரு சத்தியமா சரஸ்வதிதேவி
இல்ல.) அதுல முக்கியமா ஆனந்த விகடனும், இராஜேஷ் குமாரின் கிரைம்
நாவல்கள், குமுதம், சுபா நாவல்களும் அடங்கும். முக்கியமான மேட்டர்
என்னன்ன எந்த புத்தகத்தையும் நான் காசு போட்டு வாங்கியதில்லை.

என்னதான் பொறியியற்க் கல்லூரியில் படித்தாலும், எந்த கடை கன்னிக்கும்(??)
போய் பழக்கப்படாதது ஒருபுறம் இருந்தாலும் கையில் பணம் கிடப்பதே அரிதாக
இருந்ததுதான் மிக முக்கிய காரணம்.சொந்தக்கார நண்பர் ஒருவர் தீவிர புத்தக
புழு. அவர்கிட்டதான் நான் ஓசி புக் வாங்குவேன். ஒரு அரி புக்க வாங்கிட்டு
வந்தாலும் இரண்டு நாள்ல படிச்சி முடிச்சிட்டு அடுத்த இரண்டு நாளைக்கு
படிச்ச புத்தகத்தயே படிச்சிகிட்டு இருப்பேன். எதாவது ஒரு சனி
ஞாயிறுகளில்தான் ஊர் சுற்ற அனுமதி கிடைக்கும். அப்போது போய் திரும்ப
மாற்றி கொண்டு வருவேன். அப்படியெல்லாம் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கிறேன்.


இப்போது,
வாரம் தவறாமல் விகடன் வாங்கி விடுகிறேன், அட்டையை படித்து முடிப்பதற்குள்
அடுத்த இதழ் வந்து விடுகிறது. சாஃப்ட்வேர் இஞ்சினியர்னா படிக்கரதுக்க
நேரம் இருக்காதுன்னு சொல்லாறங்களே அது உண்மையான்னு நான் யாரையும் கேள்வி
கேட்டு உங்க நேரத்த வீணடிக்க விரும்பல.
ஏன்னா? கடந்த இரண்டு வருசமா நாம் படிச்ச புத்தகத்த கணக்கு வைக்க தனியா
காலேஜ் போய் படிக்க தேவையில்ல. பத்து வெரலு இருந்தா போதும், கணக்கு
வெக்க.

தொழிநுட்பம் பெருகிவிட்ட இக்கால அவசர உலகத்தை நினைக்கையில் நாம்கூட
அதற்கு காரணமா? அல்லது இரையா? என்ற ஐயம் எனக்கு எழாமல் இல்லை...

சும்மா தமாசுக்கு ஒரு ரெக்வெஸ்ட்:

பகல் முழுவதையும் தின்று விட்டு, இரவையும் தின்ன தொடங்கிவிட்ட இந்த
கம்ப்யூட்டரை எவரேனும் அழித்து விடுங்களேன்.. ப்ளீஸ்.....



அ ன் பு ட ன்
கிராமத்தான் நவநீதன்

புது பொண்டாட்டிகாரன்

அட நவநீதனா, வாப்பா, எப்பிடி இருக்க. ஏதோ புதுசா பிளாக் எல்லாம்
எழுதறயாமே?

இந்த புதுசா கல்யாணம் ஆனா பசங்க/பொண்ணுங்கள பாத்திங்கன்னா, ஒரு
எடத்திலேயே நிக்க மாட்டாங்க. குட்டி போட்ட பூனை மாதிரி சும்மா அங்கயும்
இங்கயும் அலஞ்சிகிட்டே இருப்பாங்க. டேய் எங்கட போற? அப்டின்னு ஒரு
கேள்விய தப்பி தவறி கேட்டுட்டம்னு வெச்சுக்கிங்க அவ்ளோதான்.. அவன்
பாட்டுக்கு அள்ளி கொட்டுவான் பாரு மண்ண, அத வெச்சி ஒரு பெரிய பங்களாவே
கட்டலாம். ஏன்டா இவன் இப்படி ஆயிட்டான்னு நாம மண்டைய பிய்ச்சிகிட்டு
யோசிச்சு, டேய் இதனாலதான் இப்படி ஆயீட்டியான்னு ஒரு பீலிங்கோட ஒரு கேள்வி
திருப்பி கேட்டா, ஒரு நாலு பேரு நம்ல பாத்து சிரிச்சுகிட்டு இருப்பான்.
ஏன்னா? அவன் போயி அர மணி நேரம் ஆயிருக்கும். இப்ப அவன் மேல இருந்த
பரிதாபம் அப்படியே கோவமா பரிணாம வளர்ச்சி அடைந்சிருக்கும். இந்த லோகத்துல
நல்லதுக்கு காலமே(அந்த 5 நிமிஷம்) கிடையாது அப்பிடின்னு மனச
தேத்திக்கிட்டு ஒரு ஓரமா உக்காந்து யோசிச்சப்பதான் என்னோட பி.டெக்
அறிவுக்கு( 6 வது அறிவு, 7 வது அறிவுனு எத்தன நாளைக்குதான் சொல்லறது)
தெரிஞ்சுது நமக்கும் அந்த புது பொண்டாட்டிகாரனுக்கும் சம்பந்தம்
இருக்குன்னூ

ஆமா, அது என்ன? சம்பந்தமே இல்லாம ஒரு கேள்வி, சம்பந்தமே இல்லாம அதுக்கு
ஒரு பதில்.

நோ!. சம்பந்தம் இருக்கு.

என்ன சம்பந்தம்?

இப்ப போஸ்டோட மொத வரிய படிங்க. அதுக்கு சொந்தகாரங்க நீங்க.

மத்ததுக்கெல்லாம் சொந்தக்காரன் நானு.

எப்படி இருக்கேன்னு கேட்ட ஒரே கேள்விக்கு ஒரு லோடு பதில் சொன்ன நான் புது
பொண்டாட்டிகாரன். என்னது? உனக்கு கல்யாணம் ஆயிருச்சா? இல்லங்க, நான்
புதுசா பிளாக் ஆரம்பிச்சுருக்கேன். [என்ன பெருசா கட்சி ஆரம்பிச்ச மாதிரி
பேசுற.ஐயோ!, இப்போதைக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லைங்க. அபப இனிமே
வரலாம்கிற.அதுக்கு காலந்தங்க பதில் சொல்லணும். ஏன்? காலம் என்ன உம் PRO
வா? ஆஹா!, டைமிங் காமிடி பண்றன்னு நடுவுல இன்னொரு போஸ்ட் போட்டுருவன்
போலிருக்கே].

இந்த மங்கலத்தாருக்கு பிளாக்தான் மனைவி, போஸ்ட் எல்லாம் குழந்தைகள்,
குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளாமல், 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ
முடிவெடுத்திருக்கேனுங்க.

(தமிழ் சினிமா பாணியில எப்படியோ போஸ்ட் தலைப்புக்கு விளக்கம்
குடுத்துட்டேன்.)

இதுக்கு மேல யாராச்சும் தலைப்புக்கும் தகவலுக்கும் (த - த, ம், எதுகை
மோனை எல்லாம் யாரு கண்டுகிறாங்க) சம்பந்தம் இல்லைன்னு சொல்லனும்னு
நெனைச்சா கமெண்ட்ல போடுங்க(அப்படியாச்சும் வந்தாதான் உண்டு)

பிளாக் ஆரம்பிச்சுட்டா மட்டும் போதுமா? எதாவது போஸ்ட் பண்ணனும் இல்ல?
அதுக்காகத்தான் இப்படி.

பின் குறிப்பு: இந்த போஸ்ட், ஏதோ சிக்னல் இல்லாத போன்ல கேட்கிற மாதிரி
பிட்டு பிட்டா தெரிஞ்சா, நல்லா சிக்னல் கிடைக்கி்ற‌ இடத்தில போய்
படிங்க.

அ ன் பு ட ன்
கிராமத்தான்
நவநீதன்

'பிரா'க்கெட் ஃபீஸ் மேட்டரு

சுனாமி மாதிரி ஆயிடுச்சு எம்பொழப்பும். பிளாக் ஆரம்பிச்சவுடனே பட படன்னு
நாலு போஸ்ட் போட்டடேன். அப்பறம் ப‌த்து நாளா ஒரு புள்ளி கூட‌ வெக்க‌ல‌.
பேசாம‌ நாலு புள்ளிய‌ வ‌ச்சு ஒரு கோல‌மாச்சும் போட‌லாம்னா அதுகூட‌
முடிய‌ல. என்ன பண்றதுன்னே தெறியல. எழுதனுமுன்னு வந்தாச்சு

(தூக்கமே வரல அதானால, போர்வைய சுருட்டி போட்டுட்டு(அது ஏற்கனவே
சுருன்டுதான் கெடந்தது) எந்திருச்சு வந்துட்டேன்.)

ஆனா, எதபத்தி எழுதறது. கொஞ்சம் கூட அறிவே இல்லாம, சுயமா சிந்திக்காம,
எப்படி போஸ்ட் போடறது?
முப்பது நாட்களில் ஹிந்தி ஸ்டைல்ல ஏதாவது முப்பது நாட்களில்
எம்.பி.பி.எஸ், நாற்பது நாட்களில் பி.இ, இந்த‌ மாதிரி ட்ரை பன்ணலாமுனு
பாத்தா கொஞ்சம் பயமா இருக்கு.

( கொஞ்சம், என்ன கொஞ்சம், ரொம்பவேதான். பின்ன, ஃபீஸ் ஒரு ஒரு அம்பது
அறுபது T, ஹாஸ்டல் ஃபீஸ் ஒரு முப்பது முப்பத்தஞ்சி T , டொனேசன் ஒரு
அஞ்சாறு L . இப்படி நாலு வருசத்துக்கு பாத்தா கிட்டத்தட்ட ஒரு பத்து
இலட்சத்த கறந்தற்ராங்க. ( என்ன இழு இழுத்தாழும் எங்க மாடு நாலு
லிட்டருக்கு மேல க‌றக்க மாட்டேங்குது. இவிகள கூட்டி போயி விட்டா காத்தால
ஒரு இருபது , மதியம் ஒரு இருபது, சாய்ங்காலம் ஒரு இருபது, இராத்திரி ஒரு
இருபதுன்னு எப்படியும் நூறு லிட்டருக்கு கேரன்டி.(அடுத்த காலையில மாடு
உயிரோடு இருக்காதுங்கிறத்துக்கு நான் பொறுப்பு.) இப்படி பத்து இலட்ச ரூபா
மேட்டர பத்து லைன்ல சொன்னா எய்டெடு காலேஜ் நடத்தரவங்களே கோபப்படுவாங்க.
அப்பறம் செல்ஃப் பைனான்ஸ் காலேஜ் நடத்தரவங்க ஏன் கோபப்படுறாங்கன்னு நான்
கேட்கறதுல அர்த்தமே இல்ல‌ங்கிற‌தினால‌ நான் ப‌ய‌ப்ப‌டுற‌தில‌ அர்த்த‌ம்
இருக்கு.)

டேய்! போஸ்ட் போடரேங்குற‌ பேருல‌ ஏன்(டா) ஓப்ப‌ன் பிராக்கெட்டு, குலோஸ்
பிராக்கெட்டு போட்டு ஏதோ எஸ் கியு எல்(SQL Query)மாதிரி எழுதிக்கிட்டு
இருக்க‌? அப்ப‌டின்னு உங்க‌ள்ல பலர் கேட்க‌லாம்( கூகிள் வாய்ஸ் சாட்,
புதுசா வீடியோ சாட் வேற‌ )
(இத‌ ப‌டிக்கற‌தே சில‌ பேர்தான்னு யாரோ சொல்லற‌து என் காதுல‌ விழ‌ல‌)
(ஆஹா! இதுக்கே ரென்டு பிராக்கெட்டு போடுற‌ நெல‌ம‌ ஆயிடுச்சே. இதையும்
சேர்த்து மூனு)

ந‌ம்ம‌ எழுத்த‌ நாலு பேரு கிண்ட‌ல் ப‌ண்ன‌ கூடாதுன்னு நானே
கிண்ட‌ல‌டிச்சிக்கிறது. பொதுவ மத்தவங்க என்ன யொசிப்பான்னு யொசிச்சு
பாத்து அத பிராக்கெட்டுல போட்டுடறதே பழக்கமாயிடுச்சு.

( ஓ! இத‌ நாலு பேரு ப‌டிப்பாங்கிறயா?? அப்ப நூறு ரூபா ப‌ந்த‌யம்.
இப்படியெல்லாம் சொல்லும்போது கூட கூல இருக்கற நானு, இதுக்கு 5 வருஷ்ம்
வாரண்டி அதுக்குள்ள நாலு பேரு படிச்சிட்டா உம்பணம் வாபஸ்னெல்லாம்
சொல்லும் போதுதான் ஒரு ப்ராக்கெட்டு என்ன ஒன்பது ப்ராக்கெட்டு போட்டு
நானே கமெண்டும் போட்டுடறது.)

பொதுவா ஒரு போஸ்டு போட‌றதுல‌ எந்த‌ மேட்ட‌ரும் நான் சொல்லறது இல்லன்னாலும்
(ஏன்னா? யாரும் கேக்கறது/மதிக்கறது இல்ல) இதுல‌ நிச்சிய‌மா ஒன்னு( 1
இல்ல‌) சொல்ல‌ வ‌ரேன்.

இந்த எஜிகேய்சன் ஃபீஸ்தான் எல்லாருத்தோட‌ ஃபியூஸ‌யும் புடிங்கிறுது.

ம‌ளிகை சாமான்,அரிசி, அடுப்பு,அண்டா குண்டான்னு எல்லாமே இலவசந்தான், ஏன்
கம்பியூட்டரு கூட இலவசமா தரப்போறாங்களாம்.

ஆனா? கல்வி ????


த‌லைப்பிற்க்கு விள்க்க‌ம்:

பிராக்கெட்ல ஒரு மேற்க்கோள்(apostrophe) போட்ட காரணம், எல்லாம் உங்க‌ள‌
பிராக்கெட் போட்டு இலுக்கத்தான். ம‌த்த‌ப‌டி ப்ராக்கெட் த‌னி மேட்ட‌ரு,
( 'பிரா'க்கெட் அல்ல‌, பிராக்கெட்) ஃபீஸ் த‌னி மேட்ட‌ரு.



அ ன் பு ட ன்
கிராமத்தான் நவநீதன்.

சென்னை To சேலம்: பைக் ரைடு

நான் பைக்லையே பேங்கலூரூ போனேன், மெட்ராஸ் போனேன், ஹைதராபாத் போனேன்,
லண்டன் போனேன், பாகிஸ்தான் போனேன் அப்டின்னு அவனவன் பீட்டற விட்டு என்
காத புழிக்க வெச்சது மட்டுமில்லாம, வண்டிய வச்சுக்கிட்டு நீ என்ன பூச
பன்றயானு நம்ம கவுரவத்தையே சொரண்டி பாத்துட்டானுங்க. சரி இந்த பூணைக்கு
மணி கட்டியே ஆவனுமுனு ரொம்ப நாளா மணிக்காக.. ச்சே.. வாய்புக்காக
காத்திருந்தேன்.நல்ல வேலைய தீபாவளி வந்துச்சு நம்ம கவுரவத்த
காப்பாத்த.....

திங்கக் கிழமை தீபாவளி, ஊர் உலகமே வெள்ளி கிழம ராத்திரி பொட்டி கட்டுது
ஊருக்கு. சரி நாமளும் போலமேனு ரயில் ரிசர்வேசன் பாத்த, படுக்கரதுக்கு(SL
class), உட்க்காரதுக்கு(2nd sitting), நிக்கரத்துக்குனு(General) எல்லாமே
நெரம்பி வழியுது. வேற வழியே இல்ல வியாழக் கிழமையே ஊருக்கு போறேன்னு எங்க
புரோட்ட மாஸ்டர்கிட்ட(PM) அழுது அடம்பிடிச்சி, கைய கால புடிச்சி, அஞ்சாறு
பிட்ட போட்டு ஒரு வழியா லீவு வாங்கிட்டேன். சரி, எல்லாம் ரெடி. எப்படி
தனியா போறது? நமக்கு சைதாபேட்டை டூ டைடல் பார்க், டைடல் பார்க் டூ
சைதாபேட்டை தவிர தி-நகர் கூட போக தெரியாதே, என்ன பன்னலாம்னு யோசிச்சப்ப,
டக்குனு தோனுச்சு நம்ம கட்டயன( சதீஸ எல்லாரும் அப்படித்தான் அன்போட
கூப்பிடுவாங்க) தொனக்கி கூட்டி போயிரலாம்னு தோனுச்சு.அப்பறம் வழக்கம் போல
அஞ்சாறு பிட்ட போட்டு அவனயும் வெள்ளி கிழமை லீவு போட வெச்சுட்டேன். ஓகே.
ஆளு ரெடி, ரூட்டு தெரியுனுமே? என்ன பண்றது? வேற வழியே இல்லாம கூகிள்
மேப்புல மெட்ராஸ் டூ சேலம் ரூட்ட ஜும்-ந், ஜூம்-அவுட்னு பல ஏங்கில்ல, ஒரு
இருவது முப்பது பக்கம் பிரிண்ட் போட்டேன்( ஆபீஸ்ல ஒசி பிரிண்டர் :-)).
அது இல்லாம பத்து பக்கத்துக்கு எல்லா ஊர் பேரையும் எழுதிகிட்டேன். இத
எல்லாம் செஞ்சி முடிக்கவே ராத்திரி பத்து பதினொன்னு ஆயிடுச்சு. சரி சரி
போய் தூங்கலாம் அப்பதான் நேரமா எந்திரிக்க முடியும்னு முடிவு பண்ணிட்டு
நான் தூங்க போயிட்டேன். ஆனா இந்த சதிஸ் பய என்ன பண்ணிருக்கான், யாஹூ
சேட்ல கடலைய போட்டுக்கிட்டு இருந்துட்டு, மூணு மணிக்கு மேல
போரடிக்குதுன்னு சிஸ்டத்த ஆப் பண்ணிட்டு என்ன ஆன் பண்றான். டேய்
எந்திரிடா இப்பவே கெளம்பின டிராபிக் இருக்'காது'னு என் காதுலையே
கத்தறான். பக்கத்துல இடியே விழுந்தாலும் கூச்சபடாம தூங்கற கும்பகர்ணன்
நானு, ஆனா, என்னையவே எழுப்பிட்டான். என்ன பன்றதுனே தெரியல? என்னடா
பண்ணலாம்னு யோசிச்கிட்டே திரும்பி பாக்கறேன், ஆள காணோம், எங்கடானு பாத்த,
பெட்ல படுத்து நல்ல சுகமா தூங்கிட்டுருக்கான் என்ன எழுப்பி விட்டுட்டு!
ஒரு வழிய 4 மணிக்கு வச்சிருந்த அலராத்த பத்து பத்து நிமஷமா கூட்டிட்டே
போயி ஒரு வழியா அஞ்சற மணிக்கு எந்திரிசிட்டோம். பரிச்ச அன்னிக்கு கூட
அஞ்சு மணிக்கு எந்திரிக்காத நான் என்னையே மெச்சுகிட்டு மூஞ்சு
வெளக்கிட்டு பல்ல சோப்பு போட்டு கழுவிகிட்டு( தூக்க கலக்கத்துல 1ம்
தெரியல 10ம் தெரியல) ரெடியாயுட்டு பாத்தா மணி ஆறு. அப்டியே தொடங்குது
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம்...

மொத்தம் முந்நூத்தம்பது கிலோ மீட்டர், எட்டு மணி நேரம், நாலு இட்லி, அரை
லிட்டர் மாஸா, ஒன்பது லிட்டர் பெட்ரோல், கொஞ்சம் இடுப்பு வழி, கொஞ்சம்
முதுகு வழி என ஒரு சுகமான பயணம் அது.

பந்தாவாக பைக்கில் போய் வீட்டில் இறங்கியவுடன் என் தைரியத்தையும்,
வீரத்தையும், புதிசாலிதனத்தையும் கண்டு மெய் சிலிர்த்து போவர்கள் என மனக்
கோட்டை கட்டிய என்னை எப்படி என் அப்பா துரத்தி துரத்தி அடித்தார் என்பதை
சொல்ல இன்னும் நூறு பதிவுகள் இட்டாலும் போதாது.

பேசாம இந்த புராணத்துக்கு தலைப்பு மதராஸ் டூ மங்கலம்னு எதுகை மோனைய
வெக்கலாம்னு பாத்தா யாருக்குமே மங்கலம் எங்க இருக்குனு தெரியாது, அப்ப
என்னதான் பன்னலாம்னு யோசிச்சு இப்டி உள்ள சொருகிட்டேன் எங்க ஊர் பெயர.

என்னை உசுப்பேத்திய உள்ளங்களுக்கு நன்றி!!!
நவநீதன்


பயணங்கள் முடிவதில்லை....

Saturday, May 23, 2009

அண்டர்வேர் ரன்னிங் ஆன் யுவர் ப்ளாக்.

கஷ்டப்பட்டு ஒரு பிளாக்க கிரியேட் பண்ணி அதுல ஒரு 30 போஸ்டு போட்டு, அத ஒரு இலட்சம் பேரு, இல்ல ஒரு ஆயிரம், இல்ல நூறு, ஒரு பத்து, ஏன் யாருமே பாக்கலைன்னாதான் என்ன? என் பிளாக்குன்னு இருந்தா, நானும் அத வெச்சிகிட்டு வேடிக்கையாச்சும் பாத்துக்கிட்டு இருந்திருப்பேன்.

ஆனா இந்த கூகிள்ல என்ன ஆட்டோமேட்டிக் ஸ்கிரிப்டோ மண்ணாங்கட்டியோ, என் ப்ளாக்ல மால்வேரு ரன்னாவுது, அண்டர்வேரு அவுந்து போச்சுன்னு டயலாக் விட்டுட்டு பொசுக்குன்னு என் ப்ளாக்கயே டெலிட் பண்ணிபுட்டாய்ங்க.

ம்.. இதுக்கு பேரு கிளிய வளர்த்து பூனை கையில குடுக்கறதா? இல்ல கஷ்டப்பட்டு எழுதி ப்ளாக்கர்ல போஸ்ட் பண்றதான்னு தெரியல.

சார்ஜ் போடும் பொது செல்போன் வெடிக்குதுங்கறான், போஸ்ட் போடும் போது லேப்டாப் வெடிக்குதுங்கறான், வரதட்சனை தரலைன்னா சிலிண்டர் வெடிக்குதுங்கறான் (இடையில சொசைட்டிக்கும் ஒரு மெசேஜ்). இப்படி நிச்சியமில்லாத இந்த உலகத்துல ப்ளாக்க பேக் அப் எடுத்து வெக்கனும்கிற பேசிக் நாலேஜ்கூட எனக்கு இல்லையா? இல்லை, கூகிளை நம்பினோர் கைவிடப்படார் என்ற அசட்டு நம்பிக்கையா? இல்லை, எங்க போயிடுது, அப்பறம் எடுத்துக்கலாம் என்ற சோம்பேறிதனமா என்றால், எல்லாம்தான் காரணம். மூன்றில் ஒன்று சரியாயிருந்திருந்தால்கூட‌ என் எழுத்துக்கள் என்னிடம் இருந்திருக்கும்.

ம்ம்...காலம் செய்த கோலமடா, கூகிள் செய்த குற்றமடான்னு பாட்டு எழுதிகிட்டு திரிய வேண்டியதுதான்.

எப்படியிருப்பினும்...... ஒரு முறை, தாமஸ் ஆல்வா எடிசனின் கம்பெனி முழுவதும் எரிந்த போது, "நம் தவறுகள் எல்லாம் எரிந்துவிட்டன. இனி புதிதாக தொடங்கலாம்" என்றாரம். இப்படி சொல்லி என்னை நானே தேத்திக்கிறேன்.

பிகு: என் எழுத்தின் மேல் பைத்தியமாக இருக்கும் யாராவது (இது கொஞ்சம் ஓவர்தான்.) பேக் அப் எடுத்து வைத்திருந்தால் எனக்கு அனுப்பவும் என்று சொல்ல எனக்கு எவ்வளவு தகிரியம்?

அன்புடன்
‍நவநீதன் (எ) கிராமத்தான்.
முன்னாள் ஓனர், மங்கலத்தார் ப்ளாக்.

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP