Sunday, May 24, 2009

சென்னை To சேலம்: பைக் ரைடு

நான் பைக்லையே பேங்கலூரூ போனேன், மெட்ராஸ் போனேன், ஹைதராபாத் போனேன்,
லண்டன் போனேன், பாகிஸ்தான் போனேன் அப்டின்னு அவனவன் பீட்டற விட்டு என்
காத புழிக்க வெச்சது மட்டுமில்லாம, வண்டிய வச்சுக்கிட்டு நீ என்ன பூச
பன்றயானு நம்ம கவுரவத்தையே சொரண்டி பாத்துட்டானுங்க. சரி இந்த பூணைக்கு
மணி கட்டியே ஆவனுமுனு ரொம்ப நாளா மணிக்காக.. ச்சே.. வாய்புக்காக
காத்திருந்தேன்.நல்ல வேலைய தீபாவளி வந்துச்சு நம்ம கவுரவத்த
காப்பாத்த.....

திங்கக் கிழமை தீபாவளி, ஊர் உலகமே வெள்ளி கிழம ராத்திரி பொட்டி கட்டுது
ஊருக்கு. சரி நாமளும் போலமேனு ரயில் ரிசர்வேசன் பாத்த, படுக்கரதுக்கு(SL
class), உட்க்காரதுக்கு(2nd sitting), நிக்கரத்துக்குனு(General) எல்லாமே
நெரம்பி வழியுது. வேற வழியே இல்ல வியாழக் கிழமையே ஊருக்கு போறேன்னு எங்க
புரோட்ட மாஸ்டர்கிட்ட(PM) அழுது அடம்பிடிச்சி, கைய கால புடிச்சி, அஞ்சாறு
பிட்ட போட்டு ஒரு வழியா லீவு வாங்கிட்டேன். சரி, எல்லாம் ரெடி. எப்படி
தனியா போறது? நமக்கு சைதாபேட்டை டூ டைடல் பார்க், டைடல் பார்க் டூ
சைதாபேட்டை தவிர தி-நகர் கூட போக தெரியாதே, என்ன பன்னலாம்னு யோசிச்சப்ப,
டக்குனு தோனுச்சு நம்ம கட்டயன( சதீஸ எல்லாரும் அப்படித்தான் அன்போட
கூப்பிடுவாங்க) தொனக்கி கூட்டி போயிரலாம்னு தோனுச்சு.அப்பறம் வழக்கம் போல
அஞ்சாறு பிட்ட போட்டு அவனயும் வெள்ளி கிழமை லீவு போட வெச்சுட்டேன். ஓகே.
ஆளு ரெடி, ரூட்டு தெரியுனுமே? என்ன பண்றது? வேற வழியே இல்லாம கூகிள்
மேப்புல மெட்ராஸ் டூ சேலம் ரூட்ட ஜும்-ந், ஜூம்-அவுட்னு பல ஏங்கில்ல, ஒரு
இருவது முப்பது பக்கம் பிரிண்ட் போட்டேன்( ஆபீஸ்ல ஒசி பிரிண்டர் :-)).
அது இல்லாம பத்து பக்கத்துக்கு எல்லா ஊர் பேரையும் எழுதிகிட்டேன். இத
எல்லாம் செஞ்சி முடிக்கவே ராத்திரி பத்து பதினொன்னு ஆயிடுச்சு. சரி சரி
போய் தூங்கலாம் அப்பதான் நேரமா எந்திரிக்க முடியும்னு முடிவு பண்ணிட்டு
நான் தூங்க போயிட்டேன். ஆனா இந்த சதிஸ் பய என்ன பண்ணிருக்கான், யாஹூ
சேட்ல கடலைய போட்டுக்கிட்டு இருந்துட்டு, மூணு மணிக்கு மேல
போரடிக்குதுன்னு சிஸ்டத்த ஆப் பண்ணிட்டு என்ன ஆன் பண்றான். டேய்
எந்திரிடா இப்பவே கெளம்பின டிராபிக் இருக்'காது'னு என் காதுலையே
கத்தறான். பக்கத்துல இடியே விழுந்தாலும் கூச்சபடாம தூங்கற கும்பகர்ணன்
நானு, ஆனா, என்னையவே எழுப்பிட்டான். என்ன பன்றதுனே தெரியல? என்னடா
பண்ணலாம்னு யோசிச்கிட்டே திரும்பி பாக்கறேன், ஆள காணோம், எங்கடானு பாத்த,
பெட்ல படுத்து நல்ல சுகமா தூங்கிட்டுருக்கான் என்ன எழுப்பி விட்டுட்டு!
ஒரு வழிய 4 மணிக்கு வச்சிருந்த அலராத்த பத்து பத்து நிமஷமா கூட்டிட்டே
போயி ஒரு வழியா அஞ்சற மணிக்கு எந்திரிசிட்டோம். பரிச்ச அன்னிக்கு கூட
அஞ்சு மணிக்கு எந்திரிக்காத நான் என்னையே மெச்சுகிட்டு மூஞ்சு
வெளக்கிட்டு பல்ல சோப்பு போட்டு கழுவிகிட்டு( தூக்க கலக்கத்துல 1ம்
தெரியல 10ம் தெரியல) ரெடியாயுட்டு பாத்தா மணி ஆறு. அப்டியே தொடங்குது
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம்...

மொத்தம் முந்நூத்தம்பது கிலோ மீட்டர், எட்டு மணி நேரம், நாலு இட்லி, அரை
லிட்டர் மாஸா, ஒன்பது லிட்டர் பெட்ரோல், கொஞ்சம் இடுப்பு வழி, கொஞ்சம்
முதுகு வழி என ஒரு சுகமான பயணம் அது.

பந்தாவாக பைக்கில் போய் வீட்டில் இறங்கியவுடன் என் தைரியத்தையும்,
வீரத்தையும், புதிசாலிதனத்தையும் கண்டு மெய் சிலிர்த்து போவர்கள் என மனக்
கோட்டை கட்டிய என்னை எப்படி என் அப்பா துரத்தி துரத்தி அடித்தார் என்பதை
சொல்ல இன்னும் நூறு பதிவுகள் இட்டாலும் போதாது.

பேசாம இந்த புராணத்துக்கு தலைப்பு மதராஸ் டூ மங்கலம்னு எதுகை மோனைய
வெக்கலாம்னு பாத்தா யாருக்குமே மங்கலம் எங்க இருக்குனு தெரியாது, அப்ப
என்னதான் பன்னலாம்னு யோசிச்சு இப்டி உள்ள சொருகிட்டேன் எங்க ஊர் பெயர.

என்னை உசுப்பேத்திய உள்ளங்களுக்கு நன்றி!!!
நவநீதன்


பயணங்கள் முடிவதில்லை....

No comments:

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP