Sunday, May 24, 2009

புது பொண்டாட்டிகாரன்

அட நவநீதனா, வாப்பா, எப்பிடி இருக்க. ஏதோ புதுசா பிளாக் எல்லாம்
எழுதறயாமே?

இந்த புதுசா கல்யாணம் ஆனா பசங்க/பொண்ணுங்கள பாத்திங்கன்னா, ஒரு
எடத்திலேயே நிக்க மாட்டாங்க. குட்டி போட்ட பூனை மாதிரி சும்மா அங்கயும்
இங்கயும் அலஞ்சிகிட்டே இருப்பாங்க. டேய் எங்கட போற? அப்டின்னு ஒரு
கேள்விய தப்பி தவறி கேட்டுட்டம்னு வெச்சுக்கிங்க அவ்ளோதான்.. அவன்
பாட்டுக்கு அள்ளி கொட்டுவான் பாரு மண்ண, அத வெச்சி ஒரு பெரிய பங்களாவே
கட்டலாம். ஏன்டா இவன் இப்படி ஆயிட்டான்னு நாம மண்டைய பிய்ச்சிகிட்டு
யோசிச்சு, டேய் இதனாலதான் இப்படி ஆயீட்டியான்னு ஒரு பீலிங்கோட ஒரு கேள்வி
திருப்பி கேட்டா, ஒரு நாலு பேரு நம்ல பாத்து சிரிச்சுகிட்டு இருப்பான்.
ஏன்னா? அவன் போயி அர மணி நேரம் ஆயிருக்கும். இப்ப அவன் மேல இருந்த
பரிதாபம் அப்படியே கோவமா பரிணாம வளர்ச்சி அடைந்சிருக்கும். இந்த லோகத்துல
நல்லதுக்கு காலமே(அந்த 5 நிமிஷம்) கிடையாது அப்பிடின்னு மனச
தேத்திக்கிட்டு ஒரு ஓரமா உக்காந்து யோசிச்சப்பதான் என்னோட பி.டெக்
அறிவுக்கு( 6 வது அறிவு, 7 வது அறிவுனு எத்தன நாளைக்குதான் சொல்லறது)
தெரிஞ்சுது நமக்கும் அந்த புது பொண்டாட்டிகாரனுக்கும் சம்பந்தம்
இருக்குன்னூ

ஆமா, அது என்ன? சம்பந்தமே இல்லாம ஒரு கேள்வி, சம்பந்தமே இல்லாம அதுக்கு
ஒரு பதில்.

நோ!. சம்பந்தம் இருக்கு.

என்ன சம்பந்தம்?

இப்ப போஸ்டோட மொத வரிய படிங்க. அதுக்கு சொந்தகாரங்க நீங்க.

மத்ததுக்கெல்லாம் சொந்தக்காரன் நானு.

எப்படி இருக்கேன்னு கேட்ட ஒரே கேள்விக்கு ஒரு லோடு பதில் சொன்ன நான் புது
பொண்டாட்டிகாரன். என்னது? உனக்கு கல்யாணம் ஆயிருச்சா? இல்லங்க, நான்
புதுசா பிளாக் ஆரம்பிச்சுருக்கேன். [என்ன பெருசா கட்சி ஆரம்பிச்ச மாதிரி
பேசுற.ஐயோ!, இப்போதைக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லைங்க. அபப இனிமே
வரலாம்கிற.அதுக்கு காலந்தங்க பதில் சொல்லணும். ஏன்? காலம் என்ன உம் PRO
வா? ஆஹா!, டைமிங் காமிடி பண்றன்னு நடுவுல இன்னொரு போஸ்ட் போட்டுருவன்
போலிருக்கே].

இந்த மங்கலத்தாருக்கு பிளாக்தான் மனைவி, போஸ்ட் எல்லாம் குழந்தைகள்,
குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளாமல், 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ
முடிவெடுத்திருக்கேனுங்க.

(தமிழ் சினிமா பாணியில எப்படியோ போஸ்ட் தலைப்புக்கு விளக்கம்
குடுத்துட்டேன்.)

இதுக்கு மேல யாராச்சும் தலைப்புக்கும் தகவலுக்கும் (த - த, ம், எதுகை
மோனை எல்லாம் யாரு கண்டுகிறாங்க) சம்பந்தம் இல்லைன்னு சொல்லனும்னு
நெனைச்சா கமெண்ட்ல போடுங்க(அப்படியாச்சும் வந்தாதான் உண்டு)

பிளாக் ஆரம்பிச்சுட்டா மட்டும் போதுமா? எதாவது போஸ்ட் பண்ணனும் இல்ல?
அதுக்காகத்தான் இப்படி.

பின் குறிப்பு: இந்த போஸ்ட், ஏதோ சிக்னல் இல்லாத போன்ல கேட்கிற மாதிரி
பிட்டு பிட்டா தெரிஞ்சா, நல்லா சிக்னல் கிடைக்கி்ற‌ இடத்தில போய்
படிங்க.

அ ன் பு ட ன்
கிராமத்தான்
நவநீதன்

No comments:

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP