Monday, February 22, 2010

கார்த்திக்கு ஒடம்பு சரியில்லை

நண்பன் ஒருவன் வந்த பிறகு வின்னைத் தொட..
ஹலோ..சொல்லுடா பார்ட்னர்.
டேய் கார்த்திக்கு ஒடம்பு சரியில்லைடா?
ஏன் என்னாச்சு?
தெரியலை. காலையில இருந்து வாந்தி எடுத்துகிட்டே இருக்கான்.
வாந்தி எடுக்கறானா? கங்ராஜுலேசன். நீங்க அப்பா ஆக போறீங்க.
ச்சீ..அடங்கு. இப்போ ஆஸ்பத்திரி கூட்டி போகலாம்னு இருக்கோம். நீ வறியா?
என்னடா இப்படி கேட்டுட்ட? இதோ கெளம்பிகிட்டே இருக்கேன்.
ஆபீஸுக்கு என்ன சொல்லலாம். என்ன யோசிச்சாலும் ஒரு ஐடியா கூட தோனமாட்டேங்குதே. சரி விடு.. வழக்கமான அஸ்திரத்தையே எஸ் எம் எஸ் அனுப்பிட வேண்டியதுதான்.
ஒரு வ‌ழியா ரூம் போய் சேரும் போது ப‌தினோரு ம‌ணி ஆயிருச்சு.


டேய் என்ன‌டா எல்லாருமே லீவா? ஒரு ம‌ன‌ச‌னுக்கு ஒட‌ம்பு ச‌ரியில்லைன்னு சொன்ன‌ உட‌னே எல்லாருமே லீவு போட்டுட்டுட்டு பாத்துகிறீங்க‌ளே, அட‌டா இதுவ‌ன்றோ ந‌ட்பு என்றேன்.
சரி சரி புல்லரிச்சது போதும், மசமசன்னு நின்னுகிட்டே இருக்காம கார்த்திய ஆஸ்பத்திரி கூட்டி போய்ட்டு வா, நான் மத்த விஷயத்த ரெடி பன்றேன் என்றான் நண்பன்.
மத்த விஷயமா? அப்படின்னா?
அப்படின்னா ஒன்னும் இல்லை. எல்லாரும் லீவ் போட்டாச்சு, சும்மாவே இருந்தா போர் அடிக்குமில்ல?
அதுக்கு?
அதுக்குதான், தம்பிய அனுப்ச்சு வெச்சுருக்கேன் சிக்கன் வாங்கிட்டு வறதுக்கு. நீ என்ன பன்ற கார்த்திக்கு மருந்து வாங்கிட்டு அப்படியே பக்கத்துல இருக்கற டாஸ்மாக்குல மேன்சன் ஹவுஸ் 2 புல்லும், அவனுக்கு ஹாட் வேண்டாமாம் அதனால நாலு பீரு வாங்கிக்க. அவனால சாப்பிட முடியாது இரண்டு ஆப்பிள் வாங்கிக்க அப்பறம் ஒரு கிலோ திராட்சை வாங்கிக்க.
திராட்சை எதுக்குடா அவனுக்கு?
திராட்சை அவனுக்கு இல்ல. நம்ம சைடிஷ்க்கு. சரக்குக்கு(???)
காசு..?
காசா? என்கிட்ட எதுக்கு கேக்கற? இன்னிக்கு எல்லாமே கார்த்தி கணக்குதான், மருந்து பில்லோட சேர்த்து வாங்கிட்டு வா, கார்த்தி மெடிகிளைம் பன்னிகட்டும்.
என்னது மெடிக்கிளைமா? ம்.. சரி என்னவோ பன்னுங்க?
கார்த்தியை கூட்டி போய் ஊசி போட்டுக் கொண்டு, திராட்சை, ஆப்பிள், சரக்கு சகிதம் வந்திறங்கினேன். அதற்குள் சிக்கன் ரெடியாகியிருந்தது.


மாத்திரை முழுங்க‌னும் கொஞ்ச‌ம் சுடுத‌ண்ணி வெய்யுங்க‌டா...
அந்த‌ பாலை காய்ச்சுங்க‌டா, கொஞ்ச‌ம் ப‌ண்னாவ‌து சாப்ப‌ட‌றேன்... டேய் ச‌த்த‌ம் போடாதீங்க‌ என‌க்கு த‌லைவ‌லிக்குது...
டீவிய‌ நிறுத்துங்க‌டா.. காது வ‌லிக்குது...
ஃபேன் ஏன்டா போட்டீங்க‌? ரொம்ப‌ குளிருதுடா...

இப்படியெல்லாம் கார்த்தி உளரியது(??) எதவும் எங்கள் காதில் விழவேயில்லை. அப்போது நாங்கள் ஒரு ஃபுல்லை காலி செய்துவிட்டிருந்தோம்.

இப்போதெல்லாம் என்னவென்றே தெரியவில்லை ஒடம்பு சரியில்லையில்லையென்றாலும் கார்த்தி ஆபிஸ் போய் விடுகிறான்.

ஒடம்ப பாத்துக்கடா கார்த்தி
உயிர் நண்பன்


நவநீதன்..

Sunday, February 14, 2010

காதலர்தின இன்டர்வியூ

நாள் முழுக்க பைக்ல சென்னைய சுத்தறோம், சாயங்கலாம் படம் பார்க்கறோம், அப்படியே ஹோட்டல்ல ட்ரீட் முடிச்சுட்டு வறோம். இதுதான் Feb 14 ப்ளான். இந்த பிளானை நான் சொல்லியதிலிருந்து கவனிப்பே தனி. சின்ன விஷய்த்துக்கெல்லாம் லெப்ட் ரைட் வாங்கறவ இப்போ பெரிசா எதுனா கேனத்தனம் பன்னினா கூட Its so funny அப்படின்னு சொல்லற அளவுக்கு பெரிய லெவலுக்கு ஒர்கவுட் ஆயிபோச்சு பிளான்.

சரி சினிமா டிக்கெட்ட‌ பிரன்ட் அவுட் எடுக்கலாம்னு ப்ரௌசிங் சென்டர் போனப்ப அப்படியே மெயில் செக் பண்னலாம்னு மெயில் பாக்ஸ ஒப்பன் பன்னினா, Your resume has been shortlisted for the interview, interview date and Time is Fer 14 2010 , 10 AM அப்படின்னு ஒரு மெயில்.
என்னனு சொல்ல இந்த கொடுமைய? லைட்டா ப்ளாஷ்பேக் போய் பாக்கறேன்.


"இப்போ இந்திய பொருளாதத்த சீர்திருத்தர ரேஞ்சுக்கு பிளான் போட்டுட்டு ஏதாவது சொதப்புன? @#$?!`~#%@ செருப்பால‌யே அடிப்பேன்.

ச்சீ..ச்சீ.. என்னடி இப்படி கேவலமா திட்டற. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. சொன்னா சொன்னதுதான்"

வீர வசனத்துடன் பேசிய பிளாஷ்பேக்கை ஃப்ரீஸ் பன்னிவிட்டு மெயிலை பார்த்தேன்.
வேறு வழியேயில்லை,செருப்படி கன்ஃபாம் ஆயிடுச்சு. ம்.. மொதல்ல பொழப்ப பாக்கலாம், ஆஃப்ர் லட்டர கொண்டு போய் கையில குடுத்து சமாதானபடுத்தி படத்துக்கும், பார்டிக்கு மட்டும் போயி சமாளிச்சுகாலாம் என்ற என்னத்தில் இன்டர்வியுவிற்கு போய்விட்டேன். பத்து மணின்னு போட்டு இருக்கான் சரி எப்படியும் ஒரு 3 மணிக்கு முடிஞ்சுரும்னு பாத்தா, ஒரு முன்னூரு பேரு உக்கார்ந்து இருக்கான். என்னடா இது முன்னூரு பேரு வந்துருக்கானுங்களான்னு கேட்டா, இங்கதான் முன்னூரு பேரு, இன்னொரு ஹால்ல ஐநூறு பேரு இருக்காங்களாம்னு அவன் சொல்லும்போதே மனசு சொல்லுச்சு "வட போச்சேன்னு".


சரி ஆன‌து ஆச்சுன்னு நானும் உட்காந்து இருக்கேன்.. இருக்கேன்... இருக்கேன்..ம‌ணி அஞ்சு ஆச்சு. ரொம்ப‌ கூல‌ ஒருத்த‌ர் வ‌ந்து சொன்னாரு "ரொம்ப‌ கூட்ட‌ம் வ‌ந்துருச்சாம், அவிங்க‌ எதிர்பாக்க‌வே இல்லையாம், அத‌னால‌ நீங்கெல்லாம் நாளைக்கு காலையில‌ வ‌ந்துருங்க‌ன்னு சொன்ன அவ‌னை "உன‌க்கெல்லாம்ம் ஏழேழு ஜென்ம‌த்தும் பிக‌ரே செட் ஆவ‌ கூடாது அப்படியே ஆனாலும் கல்யாணம் ஆன‌ அன்னைக்கே நைட் சிப்ட் போட்டுறனும் என்று ச‌பித்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.

Friday, February 12, 2010

காகிதப் பூக்கள்

வாசனையில்லையென்றாலும்
வாடுவதில்லை
காகிதப் பூக்கள்

நவநீ..

Thursday, February 11, 2010

அம்மாவிற்கு

ஏன்டா போன் பன்னவேயில்லை என்பதற்கு
ஆபிஸ்ல வேலைமா என்று மட்டுமே
பதிலாய் சொல்லியதில் இருந்து
ஆபிஸ்ல ரொம்ப வேலையா என்று மட்டுமே கேட்க‌
ஆரம்பித்த என் அம்மாவிற்கு ஒதுக்க முடியாத ஒரு ஐந்து நிமிடத்தை
தேடிக் கொண்டிருக்கிறேன் எங்கே தொலைத்தேன் என்று!

திரைகடல் ஓடி

பாரதியார் சொல்லவில்லை எனக்கு
நன்பண் சொன்னான்
டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய் என்று.
வெளிநாடும் வேண்டாம்
டாலரும் வேண்டாம்
என்னுடன் இரு போதும்
அழுது கொண்டே சொன்னாள்.

இன்றோடாகிறது ஒரு வருடம்.
விமான நிலையத்தில் கடைசியாக
வாங்கிய முத்தம் கன்னத்தை
தடவுகையில் மனதை ஈரமாக்கியது.
இதோ வந்துவிட்டேன்
நூறடி தூரம்தான்
ஐந்து நிமிட சோதனை
ஒரு வருட தவிப்பை இரட்டிப்பாக்கியது.

ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
நூறு பேர் சுற்றியிருப்பதை
சட்டை செய்யாமல்.
பிரிந்த பொழுதைவிட இப்போது
அதிகம் அழுகிறாள்.

இம்முறை நான் ஆறுதலேதும்
சொல்லத்தேவையில்லை.


காதலுடன் நவநீ

Tuesday, February 9, 2010

வசந்தகாலம் (A Story of Typical Software Engineer)

நைட்டு 12 மணிக்கு போன போட்டு, தம்பி P1 issue வந்துருக்கு. அரை மணி நேரத்துல‌ ஆபிசுக்கு போன்னு ஆன்சைட் மேனேஜர் சொல்லுவாறு. அடிக்கற குளிர்ல எந்திரக்கவே முடியாது. அடிச்சு பிடிச்சு போறதுல கொஞ்சம் லேட்டானா கூட என்னப்பா P1 issue னு சொல்றேன் நீ பாட்டுக்கு இப்படி லேட்டா வர்றம்பார். அப்பறம் அன்னைக்கு இராத்திரி சிவராத்திரிதான்.
திருப்பியும் அடுத்த நாள் காலையில ஆபிஸ் போயாகனும். என்னடா பொழப்பு இப்படி இருக்கேன்னு சலிச்சுகிட்டே காலத்தை ஓட்டவேண்டிய சூழ்நிலை. ஏன்னா சாப்ட்வேர் கம்பெனியில இலையுதிர் காலம் அது. அட Recession Period தாங்க‌ அப்படி சொன்னேன்.

நானும் அப்ப‌டியே வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்தேன்.....இலையுதிர்காலம் போய் வசந்தகாலம் வந்திருந்தது.

ஒரு நாள் காலைல ஒரு பத்து பதினொன்னு இருக்கும். பாதி தூக்கத்துல இருக்கும்போது போன் அடிச்சுது. இந்த நேரத்துல எவன்டா போன் பன்றதுன்னு யோசிச்சுகிட்டே போர்வைய கூட வெளக்காம கைய மட்டும் வெளிய நீட்டி கைத்தடவல தலையனை பக்கத்துல இருந்த மொபைலை எடுத்து பார்த்தா மெனேஜர் காலிங்..னு வருது. தூக்கத்த கலைச்சுட்டாரேங்கற கடுப்புல கேட்டேன்.

என்ன‌ங்க இந்த நேரத்துல போன் பன்றீங்க?


இல்லப்பா மணி பதினொன்னு ஆச்சு.

என்னது பதினொன்னா? ஓ.. சரி சரி அதனாலென்ன? இன்னொரு பத்து நிமசத்துல வந்துட போறேன். அதுக்குள்ள ஏன் போன் எல்லாம் பன்றீங்க?

P1 issue வந்துருக்கு ஒரு அரை மணி நேரத்துல வரமுடியுமா?

இல்லைங்க. நைட்டு தூங்க லேட்டாயிடுச்சு. மினிமம் ஒரு மணி நேரமாவது ஆகும்.

ரொம்ப அர்ஜென்ட். கொஞ்சம் சீக்கிரமா வாப்பா.

ம்.. சரி சரி.. நான் வந்துடறேன் என்று சொல்லி விட்டு லைனை கட் செய்தவுடன் அடுத்த கால்.

என்னுயிர் நீதானே..உன்னுயிர் நான்தானே..

சொல்லுடி.
..........................
நான் இன்னைக்கு ஃப்ரிதான். ‍‍
..........................
ஐய்யோ...‍‍‍ஒன்னும் வேலை இல்ல.
..........................

மாயாஜாலா? ஓகே. நீ ரெடியாகு ப‌த்தாவ‌து நிமிச‌ம் ஹாஸ்ட‌ல் முன்னாடி நிப்பேன் சரியா?
என்ன‌டா எங்க‌ கெளம்பிட்டா? ரூம் மெட் கேட்டான். இல்லடா ரொம்ப‌ போர‌டிக்குது ப‌ட‌த்துக்கு கூட்டி போடான்னு சொன்னா அதான்.

அப்ப‌ ஆபிசு?
Cant come today. Not feeling well னு உங்கிட்ட பேசிகிட்டே இப்பதான் மேனேஜ‌ருக்கு மெசேஜ் அனுப்பினேன்.


அவ‌னுக்கு தெரியும் நேத்து வேறு கம்பெனியில் 100% hikeல் ஒரு ஆஃப்ர் வாங்கியது.

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP