கஷ்டப்பட்டு ஒரு பிளாக்க கிரியேட் பண்ணி அதுல ஒரு 30 போஸ்டு போட்டு, அத ஒரு இலட்சம் பேரு, இல்ல ஒரு ஆயிரம், இல்ல நூறு, ஒரு பத்து, ஏன் யாருமே பாக்கலைன்னாதான் என்ன? என் பிளாக்குன்னு இருந்தா, நானும் அத வெச்சிகிட்டு வேடிக்கையாச்சும் பாத்துக்கிட்டு இருந்திருப்பேன்.
ஆனா இந்த கூகிள்ல என்ன ஆட்டோமேட்டிக் ஸ்கிரிப்டோ மண்ணாங்கட்டியோ, என் ப்ளாக்ல மால்வேரு ரன்னாவுது, அண்டர்வேரு அவுந்து போச்சுன்னு டயலாக் விட்டுட்டு பொசுக்குன்னு என் ப்ளாக்கயே டெலிட் பண்ணிபுட்டாய்ங்க.
ம்.. இதுக்கு பேரு கிளிய வளர்த்து பூனை கையில குடுக்கறதா? இல்ல கஷ்டப்பட்டு எழுதி ப்ளாக்கர்ல போஸ்ட் பண்றதான்னு தெரியல.
சார்ஜ் போடும் பொது செல்போன் வெடிக்குதுங்கறான், போஸ்ட் போடும் போது லேப்டாப் வெடிக்குதுங்கறான், வரதட்சனை தரலைன்னா சிலிண்டர் வெடிக்குதுங்கறான் (இடையில சொசைட்டிக்கும் ஒரு மெசேஜ்). இப்படி நிச்சியமில்லாத இந்த உலகத்துல ப்ளாக்க பேக் அப் எடுத்து வெக்கனும்கிற பேசிக் நாலேஜ்கூட எனக்கு இல்லையா? இல்லை, கூகிளை நம்பினோர் கைவிடப்படார் என்ற அசட்டு நம்பிக்கையா? இல்லை, எங்க போயிடுது, அப்பறம் எடுத்துக்கலாம் என்ற சோம்பேறிதனமா என்றால், எல்லாம்தான் காரணம். மூன்றில் ஒன்று சரியாயிருந்திருந்தால்கூட என் எழுத்துக்கள் என்னிடம் இருந்திருக்கும்.
ம்ம்...காலம் செய்த கோலமடா, கூகிள் செய்த குற்றமடான்னு பாட்டு எழுதிகிட்டு திரிய வேண்டியதுதான்.
எப்படியிருப்பினும்...... ஒரு முறை, தாமஸ் ஆல்வா எடிசனின் கம்பெனி முழுவதும் எரிந்த போது, "நம் தவறுகள் எல்லாம் எரிந்துவிட்டன. இனி புதிதாக தொடங்கலாம்" என்றாரம். இப்படி சொல்லி என்னை நானே தேத்திக்கிறேன்.
பிகு: என் எழுத்தின் மேல் பைத்தியமாக இருக்கும் யாராவது (இது கொஞ்சம் ஓவர்தான்.) பேக் அப் எடுத்து வைத்திருந்தால் எனக்கு அனுப்பவும் என்று சொல்ல எனக்கு எவ்வளவு தகிரியம்?
அன்புடன்
நவநீதன் (எ) கிராமத்தான்.
முன்னாள் ஓனர், மங்கலத்தார் ப்ளாக்.
Saturday, May 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பிசுறு
செம நக்கல்...
எல்லாத்தையும் விட
//நவநீதன் (எ) கிராமத்தான்.
முன்னாள் ஓனர், மங்கலத்தார் ப்ளாக் //
இது கலக்கல்..
remove ur word verification
ஹா ஹா ஹா...
என் பிளாக் காணாம போன சோகத்தக்கூட மறந்து சிரிச்சேன்...
நல்லா எழுதுறீங்க...
வாழ்த்துகள்..
//என் பிளாக் காணாம போன சோகத்தக்கூட மறந்து சிரிச்சேன்...//
ஹய்யா உங்க ப்ளாக்கும் ஊத்திக்கிச்சா..(சும்மா வெளையாட்டுக்கு).
நீங்களும் முடிஞ்சவரை தேடி எடுங்க.
Post a Comment