டேய்!, நாளைக்கு படத்துக்கு போலாம் கொஞசம் சீக்கரம வா, இங்கிலீஷ் படம் எதுக்கும் டிக்க்ஷ்னரிய தேடி எடுத்து வைய்யி தேவைப்படும். அப்படியே டெரரா ஒரு நிமிஷம் பார்த்துட்டு, "என்ன? திடீர்னு இங்கிலீஷ் படமெல்லாம்?". ரூம்மெட் கேட்ட கேள்வி நம்மல அசிங்கப்படுத்தினாலும் ஒன்னுமே நடக்காத மாதிரி, " யூ நோ த மூவி ஸ்லம்டாக் மில்லியனர்னு" கேட்ட கேள்விக்கு நாலஞ்சு கெட்ட வார்த்ததான் பதிலா வந்துச்சு.
என்னதான் நான் இங்கிலீஷ் படம் பார்த்தாலும், படம் பார்க்காம கீழ ஓடுற சப் டைட்டிலதான் படிச்சிக்கிட்டு இருப்பேன்கிற மேட்டரு எப்படியோ கசிஞ்சிருச்சிங்கற விஷயம் என்னனு விசாரனை கமிஷன் வெச்சு விசாரிச்சப்பதான் தெரிஞ்சுது,போன தடவ இரண்டு டீஸ்பூன் சரக்கு அதிகமா குடிச்சதன் விளைவுன்னு (குடி பழக்கம் உடல் நலத்திற்க்கு தீங்கானது.) ( என்னது நக்கலா? அப்படியெல்லாம் இல்லீங்க. இந்த பதிவ பார்த்துட்டுதான் சரக்கடிக்க ஆரம்பிச்சேன்னு சொன்னா என்ன பன்றதுன்னுதான் இப்படி ஒரு எச்சரிக்கை.)
நீ வரலைன்னா நான் படம் பார்க்க முடியாதா? இல்ல, தியேட்டர் போக வழி தெரியாதா? நான் தனியாவே போறன்டான்னு நான் சொல்லறது வெறும் வாய் சவடால்தான்னு அவனுக்கும் தெறியும். ஒரு வழிய படம் பார்த்தேன் ( எப்படின்னு கேக்காதீங்கோ. டோரன்ட், லைம்வையர், பற்றியெல்லாம் எனக்கு தெறியாது. திருட்டு விடீயோவ ஒழிச்சிடாங்களாமே உன்மையா?)
கவிதை போலிருந்தது படம்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சப் டைட்டிலுக்கெல்லாம் வேலையில்லை(இங்கேயுமா?). என்க்கும் புரிந்ததென்று நான் சொல்வதை ரூம்மேட் நம்பாதது என் மன்ஸ்க்கு கஷ்டமா இருந்தாலும் ஆச்சர்யமாயில்லை. "உனக்கு என்மீது நம்பிக்கையில்லையென்றால் என்னை நீ சோதித்து பாரேன்! உனக்கு புரிந்திருந்தால்" என திருவிளையாடல் டயலாக்கை எடுத்துவிட்டேன்.
கடுப்பான நன்பண் கேட்ட கேள்வி, " ஜமால ஏன் போலீஸ் கைது செஞ்சாங்க?"ன்னு சொல்லு.
ஒரு படத்தில் செந்தில் கவுண்டரிடம் கேட்கும் கேள்விக்கு கவுண்டர் சொல்லும் பதில்தான் மேலே கேட்ட கேள்விக்கு பதிலும்.
அண்ணே! இது, தேங்காய், பழுத்த என்னவாகும்?.
"கழுத மேக்கற பயனுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமடா"
அ ன் பு ட ன் நவநீதன்.
Wednesday, May 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment