Thursday, September 4, 2014

சுதந்திரம்


சுதந்திரம்
------------------

அப்பா, சட்ட சோப்புல இருந்து காசு அம்பதுருவா எடுத்துகிட்டேன்.

ஏன்டா போன வாரம்தான படத்துக்குபோன இந்த வாரமும் போவனுமா?

அம்மா படத்துகெல்லாம் ஒன்னும் போவுல. பிராஜெக்ட் பண்ண சீனியர பாக்க போறேன். சரி பஸ்சுக்கு நெரமாச்சு நான் போய்ட்டுவறேன்.

புத்தகம் எதுவும் எடுக்காம போற?

சினிமா தியேட்டருக்கு எதுக்குடி புத்தகம் என்றார் நைனா.

அப்பா, படத்துக்கு யாரு போற? படத்துக்கு போறேன்ன சொல்லிட்டு போறேன். என்ன பயமா? முளைத்திருக்காத மீசையில் மண் ஒட்டாதாவறே பேசினேன்.

டேய் போடா, பஸ் போயிட போகுது. அப்பறம் வண்டில கொண்டாந்துவிடுன்னு நிக்காத.

அவருக்கு தெரியும் நான் கிளம்பும் தோரனையிலேயே கண்டுபிடித்துவிடுவார் அன்று  நான் காலேஜ் போகிறேனா இல்லை சினிமாவிற்காவென்று.

மற்றொரு வெள்ளிக்கிழமை நாள் வழக்கம்போல் காலேஜ் கிளம்பிக்கொண்டிருந்தேன்.

டேய் ஸ்டேன்டுல மருந்து சீட்டு இருக்குது, வரும் போது வெண்டங்காட்டு மருந்து வாங்கிட்டு வந்துரு. நேத்து பாதிக்கு மேல சொத்த காய். மிச்சம் முத்தலும் வெள்ளையுமா  பாதி. உண்ன மாதிரியே அதுவும் தென்டம்தான்.

மருந்து வாங்க சேலம் போக வேண்டும்.கலேஜ் பக்கத்தில் கடை கிடையாது. அப்படியிருக்க என்னிடம் எதற்கு இதெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் என என் மாமாவிற்கு புறியாமல் என் அப்பாவிடாம் கேட்டார்.

ஏன் மாமா, காலேஜ்கிட்ட எங்க மருந்துகடை இருக்கு அவங்கிட்ட சொல்லிகிட்டு இருக்கீங்க.

அவன் இன்னிக்கு எந்த காலேஜ் போறான், சேலம் படத்துக்குதான் போறான்.

ஏன் மாமா அவன்தான் படத்துக்கு போறான்னு தெரியுதில்லை அப்புறம் கேக்கவேண்டியதுதானே.  அத விட்டுட்டு மருந்து வாங்கியாற சொல்லிட்டு இருக்கீங்க. என அப்பாவிற்கு பாடம் சொன்னார் மாம்ஸ்.

கேக்கலாம். என்ன, கேட்டா படத்துக்கு போகும்போதும் பைய தூக்கிட்டு போவான். மத்தபடி படம்பாக்கற்த நிறுத்தபோறதில்லை. எங்கயோ சுத்தட்டும், அரியர் வெச்ச பிஞ்ச செருப்பலயே அடிக்கறேன்.

ஆனால்,என் அப்பாவின் லாஜிக் என் மாவிற்கு புடிபடவில்லை.

நான் மருந்து சீட்டை எடுத்து கொண்டு காலேஜ் கிளம்பினேன்.

1 comment:

Santhosh Selvarajan said...

அருமை !! ஙாழ்த்துகள்

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP