Sunday, May 24, 2009

கம்ப்யூட்டரை அழித்து விடுங்களேன், ப்ளீஸ்.....

கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லை காணோம்!! வயசு
வித்தியாசம் இல்லாம, படிச்சவன் படிக்காதவன்கிற பேதம் இல்லாம எல்லாம்
சொல்லற ஒரு பழமொழி. அப்படி எல்லாரும் சொல்லும்போது நான் பண்ணாத நக்கலும்
இல்ல, அடிக்காத கிண்டலும் இல்ல. நாயை அடிக்கனும்னா நாலு கல்ல பாக்கெட்ல
வச்சுக்க, கல்லு அடிக்கனும்னா ஒயின் ஷாப்புக்கு போகாம கள்ளுக்கடைக்கு
பொன்னு ஏகத்துக்கும் எகத்தாளம் பேசுவோம்.(பன்மையில பேச காரணம், நாலு பேரு
என்கூட இருக்காங்க அப்படிங்கிறத காமிக்கத்தான்). (டேய் நாங்க உன்கூட
இருக்கமா? இல்ல, நீ என்கூட இருக்கயா? அப்படிங்கிற சண்டை இஸ்ரேல் பாலஸ்தீன
சண்டையவிட தீவிரம நடந்துக்கிட்டு இருக்கு எங்க ரூம்ல.)
நான் கல்லூரி படிச்சிக்கிட்டு(போய்கிட்டு/வந்
துகிட்டு) இருக்கும் போது,
பொதுவா பாட புத்தகத்த தவிர எல்லா புத்தகத்தையும் பாட புத்தகத்து நடுவுல
வச்சி படிச்சிகிட்டு இருப்பேன்.(கதை புஸ்தகம் படிச்சாலும் பாட புத்தகத்த
மறக்காத இவன் ரொம்ப நல்லவன்டான்னு நெனைச்ச சரஸ்வதிதேவியின் அருளாலதான்
நான் ஆல் கிளியர் ஆனேன் என்று இப்போதும் நினைத்துக்கொள்வது உண்டு). (என்
முன்னால உக்காந்து பரிச்சை எழுதின பொன்னு பேரு சத்தியமா சரஸ்வதிதேவி
இல்ல.) அதுல முக்கியமா ஆனந்த விகடனும், இராஜேஷ் குமாரின் கிரைம்
நாவல்கள், குமுதம், சுபா நாவல்களும் அடங்கும். முக்கியமான மேட்டர்
என்னன்ன எந்த புத்தகத்தையும் நான் காசு போட்டு வாங்கியதில்லை.

என்னதான் பொறியியற்க் கல்லூரியில் படித்தாலும், எந்த கடை கன்னிக்கும்(??)
போய் பழக்கப்படாதது ஒருபுறம் இருந்தாலும் கையில் பணம் கிடப்பதே அரிதாக
இருந்ததுதான் மிக முக்கிய காரணம்.சொந்தக்கார நண்பர் ஒருவர் தீவிர புத்தக
புழு. அவர்கிட்டதான் நான் ஓசி புக் வாங்குவேன். ஒரு அரி புக்க வாங்கிட்டு
வந்தாலும் இரண்டு நாள்ல படிச்சி முடிச்சிட்டு அடுத்த இரண்டு நாளைக்கு
படிச்ச புத்தகத்தயே படிச்சிகிட்டு இருப்பேன். எதாவது ஒரு சனி
ஞாயிறுகளில்தான் ஊர் சுற்ற அனுமதி கிடைக்கும். அப்போது போய் திரும்ப
மாற்றி கொண்டு வருவேன். அப்படியெல்லாம் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கிறேன்.


இப்போது,
வாரம் தவறாமல் விகடன் வாங்கி விடுகிறேன், அட்டையை படித்து முடிப்பதற்குள்
அடுத்த இதழ் வந்து விடுகிறது. சாஃப்ட்வேர் இஞ்சினியர்னா படிக்கரதுக்க
நேரம் இருக்காதுன்னு சொல்லாறங்களே அது உண்மையான்னு நான் யாரையும் கேள்வி
கேட்டு உங்க நேரத்த வீணடிக்க விரும்பல.
ஏன்னா? கடந்த இரண்டு வருசமா நாம் படிச்ச புத்தகத்த கணக்கு வைக்க தனியா
காலேஜ் போய் படிக்க தேவையில்ல. பத்து வெரலு இருந்தா போதும், கணக்கு
வெக்க.

தொழிநுட்பம் பெருகிவிட்ட இக்கால அவசர உலகத்தை நினைக்கையில் நாம்கூட
அதற்கு காரணமா? அல்லது இரையா? என்ற ஐயம் எனக்கு எழாமல் இல்லை...

சும்மா தமாசுக்கு ஒரு ரெக்வெஸ்ட்:

பகல் முழுவதையும் தின்று விட்டு, இரவையும் தின்ன தொடங்கிவிட்ட இந்த
கம்ப்யூட்டரை எவரேனும் அழித்து விடுங்களேன்.. ப்ளீஸ்.....



அ ன் பு ட ன்
கிராமத்தான் நவநீதன்

1 comment:

http://urupudaathathu.blogspot.com/ said...

///பகல் முழுவதையும் தின்று விட்டு, இரவையும் தின்ன தொடங்கிவிட்ட இந்த
கம்ப்யூட்டரை எவரேனும் அழித்து விடுங்களேன்..///

ப்ளீஸ்.....ஆசை தோசை!!!

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP