Wednesday, May 27, 2009

மதுரைக்கு போகாதேடி...

இரவு 10.30 மணி. அவசர அவசரமா பஸ்ஸ விட்டு இறங்கி, பக்கத்துல நல்ல லாட்ஜ் எதுப்பா அப்படின்னு விசாரிச்ச இடம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டேன்டு. எதுத்தாப்புல இருந்த ஒரு லாட்ஜ்க்கு போய் ரூம் கேட்டா, "முகூர்த்த நாள் சார் எல்லா ரூமும் புக்காயிடுச்சி. வேனுமுன்னா 3 பெட்ரூம் ரூம் ஒன்னு காலியாவுது வாடகை 700 ரூபா சார்". ரூம் வேண்டாங்க நாங்க பஸ் ஸ்டேண்டுலேயே ஒரு ஓரமா படுத்து தூங்கிக்கிறோம்னு சொல்ல போறதில்லைன்னு அவனுக்கும் தெரிந்ததன் விளைவு அது.

"சார், கார்டு எல்லாம் வாங்கறது இல்லைங்க, பணமா குடுங்கன்"னு ஓவர் கொடைச்சல் பன்றான் லாட்ஜ்காரன்., நம்ம நல்ல(??) நேரம் ஏடிம்ல பணம் இல்ல. ஆளுக்கு நூறு இருநூறுன்னு போட்டு ஒரு வழியா பணத்த கட்டி, சாவிய வாங்கிட்டு ரூமுக்கு போய், அப்பாடா, அப்படின்னு படுத்தா பசி வயித்த கிள்ளுது, மணி 11 ஆயிருச்சு. ரிஷப்சனுக்கு போன் போட்டு "சார் டின்னர் வேணும் கொஞ்சம் ஆர்டர் எடுத்துக்க முடியுமான்னு?" கேட்டா, "சர்வீஸ் 11 மணியோட குளோஸ் சார்"னு லைன கட் பண்னிட்டான். என்னடா இது வம்பா போச்சுன்னு, சரி எப்படியும் பஸ் ஸ்டேண்டுல ஒரு ஓட்டலாவது இருக்கும்னு போயி நோட்டம் விட்டா, ஒன்னத்தையும் காணோம். சரி பச்ச தண்ணிய பல்லுல படாம குடிச்சிட்டு துங்கறத தவிற‌ வேற வழியில்லைன்னு பொலம்பிக்கிட்டே திரும்பர சமயம், ஒருத்தன் மட்டும் ஏதோ சட்டிய உருட்டிகிட்டு இருக்கான். அப்பாடான்னு நிம்மதி பெருமூச்சி விட்டிக்கிட்டே ஓடி போய், அண்ணே! 10 பரோட்டா, 3 ஆம்லெட், 3 புல்பாயில் பார்சல் பண்ண சொல்லிட்டு நாலு வார்த்த பேசரத்துக்குள்ள "சார் பார்சல் ரெடிங்கறான்".
அடடா என்ன வேகம்னு அவன புகழ்ந்துகிட்டு, எவ்ளோங்கன்னு கேட்டுக்கிட்டே ஒரு 50 ரூபா நோட்ட எடுத்து கொடுத்தேன்.
"180 ரூபா குடுங்க"ன்னு கடைக்காரன் சொன்ன உடனே எனக்கு தல கிர்ருன்னு சுத்த ஆரம்பிச்சுடுச்சு.
என்னது? 180 ரூவாயா? எப்படி?ன்னு அரமயக்கத்துலேயே கேட்டேன். "பரோட்டா ஒன்னு 10 ரூபா, ஆம்லெட் ஒன்னு 20 ரூபா'ங்கறான்.

*அடப்பாவிகளா! இதுக்கு பேசாம கத்திய காட்டியே பணம் புடுங்களான்டா?

*டேய், இது என்ன மதுரையா இல்ல அமெரிக்கவா?

*அந்த பரோட்டாவுக்கு மூன்றுவா குடுத்தாலே லூசுப்பயன்னு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். பத்து ரூபா குடுத்த என்ன எந்த வகையறாவுல சேத்தறதுன்னு எனக்கு தெரியல.

*ஆமா, ஆம்லெட் என்ன கோழி முட்டையில் போட்டியியா? இல்ல குதிர முட்டையில போட்டியா?

*உலகத்திலேயே காஸ்ட்லியான் ஆம்லெட் கிடைக்கும்னு போர்டு போட்டுக்க?


இந்த மாதிரி ஒரு ஆயிரம் கேள்விய எனக்கு நானே கேட்டு பதில் சொல்லிகிட்டேன்.

என்னங்க 20 ரூபாயா ஆம்லெட்? அநியாங்க! அப்படின்னு நான் சத்தம் போடாமா மெதுவா கேட்டதுக்கே மொறக்க ஆரம்பிச்சிட்டான் கடைக்காரன்.

நாமளும் ஊருக்கு புதுசு, இராத்திரி நேரம், ஏற்கனவே வாய்கொழுப்புக்கு
வாங்கி கட்டியது நியாபகத்துக்கு வற, காச குடுத்திடுடான்னு நண்பன்கிட்ட சொன்னேன்.
"என்னது காசா? லாட்ஜ்க்கே அஞ்சு பத்த பொறுக்கிதான் குடுத்தேன். எங்கிட்ட ஏது காசு"ன்னு திகில் ஏத்தறான். "டேய்! இருக்கறத எடுங்கடா"ன்னு, சில்லரைய பொறுக்கி ஒரு 180 தேத்தி குடுத்திட்டிருக்கும்போது ரேடியோல பாடின பாட்டு " மதுரைக்கு போகாதேடி.....

அதே பஸ் ஸ்டேண்டில் விசாரித்த போது அவர்கள் சொன்ன விலை பரோட்டா 3ரூபாய், ஆம்லெட் 5 ரூபாய்.

"ஏமாற்றி விட்டானே, என்ற‌ வேத‌னையை விட‌,அவ‌னை ஒன்றும் செய்ய‌ முடிய‌வில்லையே என்ற‌ இய‌லாமையைவிட‌, இவ்வ‌ள‌வு தைரிய‌மாக‌ ஏமாற்றும் அள‌விற்கு நாச‌ம் அடைந்துவிட்டதே இந்த‌ சமூகம் என்று நினைக்கும் போதுதான், வேத‌னையானது என் ம‌ன‌ம்."

அ ன் பு ட ன் நவநீதன்.

2 comments:

துளசி கோபால் said...

நல்ல பதிவாகத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.

கண்ணுத் தெரியலைப்பா. ரொம்பச் சின்ன ஃபாண்ட். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு க்ரே பேக்ரவுண்டு & கலர்கலர் வரிகள்.

ஆமாம்..... என்னப்பா எழுதி இருக்கு? கொஞ்சம் படிச்சுச் சொல்லுங்கப்பா.

இப்படிக்குக்
கண் தெரியாத டீச்சர்.

மாமியா வூடு மதுரையாச்சேன்னு வந்தேன்!

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//நல்ல பதிவாகத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.//

ஆமா, ஆமா அதிலென்ன சந்தேகம். :-) :-)

//மாமியா வூடு மதுரையாச்சேன்னு வந்தேன்!//

உங்களுக்காகவே டெம்ப்ளேட்ட மாத்திட்டேன். இப்போ வாங்க மாமி வீட்டுக்கு.

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP