நேரம் : காலை 10 மணி
இடம் : அமெரிக்க காரியாலயம்(American Consulate)
அமெரிக்காவில் உள்ள 30 கோடி சொச்ச மக்களும் தூங்கிக்கொண்டிருக்க, நான் வரிசையில் காத்துக் கொண்டிருந்தேன் சென்னையில்.அமெரிக்கா செல்லும் ஆசையின் முதற்கட்ட பணிகளை நிறைவேற்ற. வேறென்ன? விசா வாங்க நேர்முக தேர்விற்கு போயிருந்தேன்.
முன்னனி தனியார் நிறுவனத்திலிருந்து சென்றதால் நீல நிற கோப்பு(Blue File) கொடுத்து விட்டிருந்தார்கள்(அதற்கெல்லாம் மதிப்பில்லையாம். எல்லாம் ஒன்றுதானாம்). எல்லோருக்கும் ஒரே வரிசைதான். நீண்ட வரிசையில் நான்காவதாய் நின்று கொன்டிருந்ததில் ஒரு மெதப்பு வேறு.
"சார், 9 மணிக்கு இன்டர்வியூ இருக்கறவங்க வாங்க" என்ற போது, என் பின்னாலிருந்த மொத்த கூட்டமும் முன்னால் சென்றிருந்தது.
"ஏன்டா? இப்படி என்ன நோகடிக்கறிங்க" என்று நான் கடைசியில் புலம்புவதை கவனிக்க எவனுக்கும் நேரமில்லை.
வரிசையில் நின்று கொன்டே இருந்த போது கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்கவுள் கண்ணில் ஓடியது.
எப்போது விசா அப்ளிகேசன் பதிவு செய்தேனோ, அன்றிலிருந்து காலை, பகல், இரவு ( சாப்பாட்டிற்கு முன்/பின்) என ஏதோ டாக்டர் மருந்து கொடுத்து தவறாமல் சாப்பிட சொன்னது போல் மூன்று வேலையும் கனவு கண்டுகொன்டிருந்தேன்.
"யூஎஸ்ல அரிசி சாப்பாடு கெடக்கறதே கஷ்டமாமே?" என பழைய ஆன் சைட் ரிட்டன்களிடம் விசாரனை வேறு.
"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல"( "நீ மொதல்ல விசா வாங்கு" என மனசிற்குள் நினைத்திருப்பானோ?) "இன்டியன் ரெஸ்டாரென்ட் இருக்கு!, சமாளிச்சுகலாம்" என்றது ஆன் சைட் ரிட்டனின் அறிக்கை.
"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லீங்க? நெறைய இன்டியன் ரெஸ்டாரென்ட் இருக்கு, சமாளிச்சுகலாம்" என்ற அதே பிட்டை என்னையும் மதித்து கேட்ட நாலு பேரிடம் அள்ளி கொட்டினேன், ஏதோ வாரம் ரெண்டு வாட்டி யூஎஸ் போயிட்டிருக்கிற மாதிரி.
"மச்சான், எனக்கு ஒரு லேப்டாப் டா"
"மச்சான் எனக்கு ஒரு ஐபாட்"
"ஏன்? உனக்கு லேப் டாப் வேண்டாமா?" என்றதற்கு, "அதில்லைடா லேப்டாப்னா நீ பணம் கேப்ப, ஆனா? ஐபாட்'னா நான் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்ட" என்ற நண்பனின் கொள்கை விளக்கம் புல்லரிக்க வைத்தது.
"மச்சான் கண்டீப்பா ஒரு டிஜிடல் கேமரா வாங்கிட்டு வா."
"வாங்கறன்டா!. யூஎஸ் போனவுடனே மொதல்ல அதைதான்டா வாங்கனும்."
"சார், ஃபைல வாங்குங்க மொதல்ல." செக்யூரிட்டி என் காதில் கத்தியதும்தான் சுய நினைவிக்கு வந்தேன்.
"நாம எங்க இருக்கறோம்?" என்னது அமெரிக்காவும் சென்னை மாதிரிதான் இருக்குதுன்னா பாத்தா, 23 C பஸ்சு போயிட்ருக்கு அண்ணா மேம்பாலத்துல.
அட கஷ்டமேன்னு நொந்து உள்ள போனேன்.
செக்கியூரிட்டி செக், டாகுமெண்ட் வெரிஃபிகேசன், ஃபிங்கர் ப்ரின்ட் ஸ்கேனிங், டிடி செட்டில்மென்ட் எல்லாம் முடிந்து வரிசையில் நிற்க ஆரம்பித்தேன் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையுடன்.
ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நகன்ற வினாடி முல்லை(அப்படியொரு ஃபீலிங்) அங்கிருந்த கடிகாரத்தில் பார்த்தேன். சந்தேகத்தை பின்னால் நின்று கொண்டிருந்தவனிடம் கிசுகிசுக்க, அவனும் அதையே வழி மொழிய, அங்கிருந்த ஊழியர் மட்டும் "அதெல்லாம் சரியாதான் வேலை செய்யுது" என்று சொல்லிவிட்டு கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அட்ரஸை கொடுத்த போது எனக்கு புரியவில்லை.
நொடிகள் யுகங்களாகின( அதர பழசான உதாரணம்தான் என்ன செய்ய?) பல நூறு வருடங்கள்(தோராயமா) கழித்து என் முறை வந்தது.
போனவுடன் நான் சொல்ல நினைத்த குட் மார்னிங்கை கன்சலோட் ஆபிஸர் சொல்லிவிட்டார்( சிலம்பாட்டத்தில் கருனாஸுக்கு நடந்ததை போலவே எனக்கும்)
பதிலுக்கு நானும் "குட் மார்னிங்,ஹவ் டூ யூடூ" என்று ஒரு பிட்டை போட்டேன்.
கொஞசம் கூட மதிக்காமல்(தயவு செஞ்சி இந்த விசயம் நம்மளோடவே இருக்கட்டும். என்னது? உங்ககிட்ட சொன்னத வெளியில
சொல்ல வேண்டாமா? இது டூ மச்! ஆமா!) பாஸ்போட்டை கேட்டார். பிள்ளையாருக்கு தோப்பு கரணம் போடுவது போல் பவ்யமாய் கொடுத்தேன்.
"எவ்வளவு நாளா இந்த கம்பெனியில் பண்னையம் பன்ற?" , "இந்த கிளைன்ட் கூட எத்தன வருஷமா குப்ப கொட்டற?" என்ற சம்பிரதாயங்கள் முடிந்தபின் உன் தனி திறமை என்ன என்ற முக்கிய கேள்விக்கு "ஆனி புடுங்குவதில் நான் வல்லவன், நல்லவன் நாலும் தெரிந்தவன்" என்று புலம்பிக்கொன்டிருந்ததை கவனிக்க ஆபீஸருக்கு நேரமில்லை.
ஆம்! அப்போது அவர் எனக்கான புளூ சிலிப்பை (L1B- Rejected under specialized knowledge) பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.
என் மன உழைச்சலையும், சோகத்தையும், வருத்தத்தையும் மறைத்து நகைச்சுவை கலந்து எழுதியிருந்தாலும், தோற்று கலங்கிய அந்த கணமும், வேதனையும் வருத்திக் கொண்டுதான் இருக்கிறது ஒவ்வொரு வினாடியும். மீண்டும் வென்ற பின்னாவது தீரூமா இந்த வலி??
அ ன் பு ட ன் நவநீதன்.
3 comments:
vidu thalaivaa! Visa kedachavanukku oru Naadu dhaan. Visa kedakkaadhavanukku pala naadu.
Vali viraivil theerum.
Your flow writing & sense of humour are really good. Keep it up.
//Vali viraivil theerum.//
நம்மோட அடுத்த இலக்கு........ஜப்பான்....(அப்ப அமெரிக்கா கதி..!!)
// என் மன உழைச்சலையும், சோகத்தையும், வருத்தத்தையும் மறைத்து நகைச்சுவை கலந்து எழுதியிருந்தாலும், தோற்று கலங்கிய அந்த கணமும், வேதனையும் வருத்திக் கொண்டுதான் இருக்கிறது ஒவ்வொரு வினாடியும். மீண்டும் வென்ற பின்னாவது தீரூமா இந்த வலி??//
விரைவில் தீரட்டும்.
எங்க வேணாலும் போங்க...
ஆனா சௌதி பக்கம் வேண்டாம்..
Post a Comment