Monday, June 29, 2009

ஷோபிகண்ணுவின் பின்னறிவிப்பு

நவநீதனின் முன்னறிவிப்பு என்றிருந்திருக்க வேண்டிய இந்த பதிவின் தலைப்பு ஷோபிகண்ணுவின் பின்னறிவிப்பு என மாறக் காரணம் என் சோம்பேறிதனமா இல்லை பணம் கட்டாததால் கட்டான ஏர்டெல் ப்ராண்ட்பேன்டா என்பதை பாப்பையாவையோ லியோனியையோ வைத்து பட்டிமன்றம் நடத்த தேவையில்லை முதலாவதுதான் உண்மையென்பது என்னையறிந்தவர்களுக்கு தெரியும்.

அப்படியென்ன அறிவிப்பென்றால் இனிமேல் நான் ( நவநீதனாகிய) இனிமேல் ஷோபிகண்ணு என்ற பெயரில் கொஞ்ச நாள்(பால் புளிக்கும் வரை) உலாவர தீர்மானித்துள்ளேன் என்பதை இந்த உலகத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.

அதென்ன ஷோபிகண்ணு? காத்து ஏன் அடிக்குது? ஏன் வெயில் அடிக்குது? வாத்தியார் ஏன் அடிக்கிறார் என எல்லாவற்றிற்கும் இங்கே விளக்கம் சொல்ல வேண்டியுள்ளதால் நானும்......

பாரதியார் மேல் கொண்ட பற்றுதான் சுப்புரத்தினம் என்பவ‌ர் பாரதிதாசன் என மாறக் காரணமாயிற்று. அப்படியேதான் நவநீதனும் ஷோபிகண்ணுவாகிய கதை. பொதுவாக புனைப்பெயர் என்பது மற்றவரிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்த வித்தியாசமாக ஒரு அடைமொழியையோ, பெயரையோ முக்கியமாக யாரும் பயன்படுத்தாத ஒன்றை வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் கொஞ்சம்கூட வெட்கமேபடாமல் பசங்க படத்துல வந்த அந்த பேரை காப்பியடிச்சுகிட்டயே என நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது.

இதற்கு என் சமாளிப்பு என்னவென்றால்...

வழக்கத்துக்கு அதிகமா கொஞ்சம் லேட்டாயிட்டா அதுக்குமேல தூக்கம் வற கொஞ்சம் லேட்டாகும்.( நீ மட்டும்தான் லேட் பண்ணுவியா நானும் பண்ணுவேன் அப்படிங்கற தூக்க கொழுப்பு அது). அன்னைக்கு அப்படிதான் எனக்கும் தூக்கம் வரலை. சரி தூக்க மாத்திரை போட்டு தூங்கிறதுக்கு ஏதாவது படம் பார்த்தா உடம்புக்கு கெடுதல் இல்லாம தூங்கலாமேன்னு தேடுனப்ப மாட்டுச்சு பசங்க படம். (நன்றி: லைம்வேர், பிட் டோரென்ட், கூகிள்)

இராத்திரி மணி 2 க்கு படம் பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா... பின்னி பெடலெடுத்திருக்கார் டைரக்டர். அப்படியே கிர்ருன்னு இருந்துச்சு படம். காமெடி கலக்கல்னா.. ரொமான்ஸ் சூப்பர். அதுல வர்ற அந்த ஷோபிகண்ணு கேரக்டர் அப்படியே ஹார்டுல பச்சக்ன்னு ஒட்டிக்கிச்சு. அப்படி பிடிச்சுப்போச்சு எனக்கு.விடியக்காலை 4.30 மணி ஆயிடுச்சு. முழுப்படத்தையும் பார்த்துட்டுத்தான் தூங்கினேன். அப்படி ஆனி அடிச்சுமாதிரி ஒட்டிக்கிட்டதாலதான் 20 வருஷமா இருந்த நவநீதன்கிற‌ பேருக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு ஷோபிகண்ணுகிற பேருக்கு ஒரு சீட்டு எடுத்திட்டேன்.

இன்னும் சில காலம் இந்த பெயரில்தான் என் வயக்காட்டில் வெள்ளாமை செய்யப் போகிறேன்.

என்றும் அன்புடன்
ஷோபிகண்ணு

12 comments:

ஆ.ஞானசேகரன் said...

//அப்படி ஆனி அடிச்சுமாதிரி ஒட்டிக்கிட்டதாலதான் 20 வருஷமா இருந்த நவநீதன்கிற‌ பேருக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு ஷோபிகண்ணுகிற பேருக்கு ஒரு சீட்டு எடுத்திட்டேன்.//

வாங்க வந்து கலக்குங்கோ

sarathy said...

விளக்கமெல்லாம் நல்லாத்தான் இருக்கு...
அப்புறம்
இதெல்லாம் யாரு?
contactmeat1am
contactmeat2am
contactmeat3am
contactmeat4am

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

எல்லாம் நம்ம பரிமானங்கள்தான்..(???) அத 24 வரை கொண்டு போறதா உத்தேசம்..

குடுகுடுப்பை said...

உழவுக்கு நல்ல காளைக்கண்ணா பாத்து வாங்குங்க, நீங்க பாட்டுக்கு ஷோபிக்கண்ணு மாதிரி எதாவது கிடாறிக்கண்ண வாங்கிறபோறீங்க

sarathy said...

25-ஐ நான் பார்த்துக்கிறேன்.. ..

குப்பன்.யாஹூ said...

is sofuikannu refers the character name in pasanga film, because in orkut i have been seeingt few ids in sofikannu name

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//குப்பன்_யாஹூ//
ur absolutely correct. But i dont have any account in orkut with d name ஷோபிகண்ணு.

butterfly Surya said...

கலக்குங்க...

உலக சினிமா பதிவுகளை காண அன்புடன் அழைக்கிறேன்.

சூர்யா
சென்னை

ny said...

nallaa eluthureenga baasu!!

Anonymous said...

nallaa eluthureenga baasu!!//

repeettey..

Anonymous said...

navanithan sorry shobikannu nan sakthi mulama unga blog padikiren. ur blog is good. especially the header image.

அன்புடன் அருணா said...

ரைட்டு!

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP