Thursday, June 25, 2009

நானும் விகடனில்....

ஆனந்த விகடன், கூகிள் இத ரெண்ட‌பத்தியும் பேசாத எழுதாத பதிவர் யாரச்சும் இருக்காங்களான்னு தேடும்போது என் கண்ணுக்கு நான் மட்டும்தான் தெரிஞ்சேன். என்ன சங்கதின்னு ஆராய்ச்சி செஞ்சதன் முடிவு இது.

பதிவு எழுதற கொஞ்சம் பேர் சாப்ட்வேர் இஞ்சினியர் அவிங்க இன்னைக்கு டாப்பு கூகிள பத்தி சேதி சொல்றது ஒரு இது......

பதிவுலகத்தில இருக்கிற மிச்சம் கொஞ்சம் பேர் இலக்கியம் அது இதுன்னு விசயம் தெரிஞ்சவங்க பத்திரிக்கை உலகில் ஜாம்ப‌வான் ஆனந்த விகடன பத்தி பேசறது ஒரு இது......

அட நமக்கு ரண்டுலயுமே சம்பந்தம் இல்லையே அப்படின்னு நொந்த நேரத்துல கடவுள் கண்ணுல பட்டார்.

ஆண்டவா எல்லாம் விகடனில் நான், யூத் விகடனில் என் கதைன்னு கதி கலங்க வைக்குறாங்க, என் கதை ஒன்ன போட கருனை காட்டுங்க கால்ல விழுந்துட்டேன்.
ரொம்ப ஜெர்கான அவரு தம்பி.. ஆசை படலாம், ஏன் பேராசைகூட‌ படலாம் ஆனா இந்த மாதிரியெல்லாம் காட்டு தனமா ஆசைபடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு...

ம்ம்ம்னு கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்த்து மனசிறங்கி.. சரி வேற ஏதாச்சும் கேழுன்னாரு..
நானும் கூச்சப்படாம என்னை ஜாவா எக்ஸ்பெர்ட் ஆக்கிருங்கன்னு கேட்டேன்... இத கேட்டவுடனே பயங்கற டன்சனாயி கேட்டாரு " உனக்கு எத்தனை கதை பப்ளிஷ் ஆகனும்?"

இப்படி வரம் வாங்குன அடுத்த நாளே எங்கதையும் யூத்ஃபுல் விகடன் இனைய தளத்தில வந்துருச்சு...

அதனால இப்ப நானும் விகடனில்....

அடுத்து வருவது:

விகடன்ல என் கதை சீக்கிரமா வரும்னு நெனைக்கிறேன். இப்பெல்லாம் நான் கவிச்சி சாப்பிடறதேயில்லை. இந்த வாட்டி நூறு தேங்காய் உடைக்கிறதா வேண்டுதல். ம் பார்போம் அவருக்கு எப்போ தேங்காய் தேவைபடுதுன்னு..

6 comments:

குடுகுடுப்பை said...

கொலஸ்டிரால் இல்லாத தேங்காயா பாத்து உடையுங்க சாமி டயட்டுல இருக்காராம்

vinu said...

vaalzthukkal tholarea mattrum nandri ungalin varugaikku

butterfly Surya said...

மேலும் வளர வாழ்த்துகள்..

sarathy said...

வாழ்த்துகள்...
விகடனிலும் வரட்டும்...

(யோவ் உன் பேரு நவநீதன் தானய்யா...
இப்போ என்ன ஷோபிகண்ணு னு வச்சிருக்க..)

Suresh said...

வாழ்த்துகள்

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//(யோவ் உன் பேரு நவநீதன் தானய்யா...
இப்போ என்ன ஷோபிகண்ணு னு வச்சிருக்க..)//

அதென்னவோ உண்மைதானுங்கோ... மேலும் விவரம் இங்கே: ஷோபிகண்ணுவின் பின்னறிவிப்பு http://vayakkadu.blogspot.com/2009/06/blog-post_25.html

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP